32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 141)
நீதி தேவதையின் உறக்கம்: 4.76 கோடி வழக்குகளும், தேய்ந்து போன செருப்புகளும்! Exclusive

நீதி தேவதையின் உறக்கம்: 4.76 கோடி வழக்குகளும், தேய்ந்து போன செருப்புகளும்!

உலகிலேயே மிகப்பெரிய நீதித்துறை அமைப்புகளில் ஒன்று இந்தியா. ஆனால், அதே சமயம் அதிக சுமையால் திணறிக்கொண்டிருக்கும் அமைப்பும் இதுதான். “சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று சொல்லப்பட்டாலும், அந்தக் கடமை எப்போது முடியும் என்பதுதான் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய மில்லியன் டாலர் கேள்வி. ஆம்  ந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை, ஒரு நாட்டின் மக்கள் தொகையையே மிஞ்சும் அளவுக்கு உயர்ந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள், மாநில ரீதியாக நீதித்துறை […]

February 14, 2026 admin
ஜூலி கே. பிரவுன்:ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கின் திசையை மாற்றிய புலனாய்வு இதழாளர்! Exclusive

ஜூலி கே. பிரவுன்:ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கின் திசையை மாற்றிய புலனாய்வு இதழாளர்!

ஜூலி கே. பிரவுன் — ஒரு ஊடகவியலாளரின் விடாமுயற்சி எப்படிப்பட்ட அதிகார மையங்களையும் அசைத்துப் பார்க்கும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம். அமெரிக்காவின் பெரும் செல்வந்தரும், செல்வாக்கு மிக்கவருமான ஜெப்ரி எப்ஸ்டீன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை உலகம் மறக்கத் தொடங்கிய நேரத்தில், அந்த வழக்கை மீண்டும் உயிர்ப்பித்து நீதியின் முன் நிறுத்தியவர் இவர்தான். அதிகாரம், பணம், அரசியல் செல்வாக்கு என அசைக்க முடியாத ஒரு பிம்பமாக இருந்த ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய […]

February 14, 2026 admin
ஸ்வீட்டி நாட்டி கிரேசி – விமர்சனம்! Running News

ஸ்வீட்டி நாட்டி கிரேசி – விமர்சனம்!

பிரம்மாண்ட பட்ஜெட்டில் படம் எடுத்துவிட்டு லாபத்திற்காகப் போராடும் கூட்டத்திற்கு மத்தியில், ‘அடல்ட் காமெடி’ என்ற ஒற்றை ஆயுதத்தை வைத்து இளசுகளைக் குறிவைத்து அடித்திருக்கிறார்கள் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ படக்குழுவினர். தியேட்டரில் இளைஞர்களின் சிரிப்புச் சத்தமும், கைதட்டலும் ஒலிப்பதைக் கேட்கும்போது இயக்குனர் ராஜசேகர்.ஜி தனது இலக்கில் தேறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். கதைச் சுருக்கம்: நாயகன் சிவா (த்ரிகுண்) தனது காதல் கதையை நண்பர்களிடம் சொல்வதாகப் படம் தொடங்குகிறது. அனிதாவுடனான (ஸ்ரீஜீத்தா கோஷ்) காதலில், அவளது வற்புறுத்தலால் நடக்கும் […]

February 13, 2026 admin
பார்த்தேன்…ஆனா படிக்கல!-சிதைக்கப்படும் மொழியும், திசைமாறும் தலைமுறையும்! Exclusive

பார்த்தேன்…ஆனா படிக்கல!-சிதைக்கப்படும் மொழியும், திசைமாறும் தலைமுறையும்!

இந்தியாவில் வாசிப்புப் பழக்கம் செத்துக்கொண்டிருக்கிறது என்று ‘தி கார்டியன்’ இதழ் சொன்னபோது, இங்கே பலருக்குக் கோபம் வந்தது. ஆனால், அந்தச் செய்தியின் பின்னணியில் இருக்கும் ரத்தம் சொட்டும் உண்மையை ஒரு ஹிந்தி இணைய இதழின் ஆசிரியர் பகிர்ந்துகொண்டபோதுதான் அதன் வீச்சு புரிகிறது. பெரும் கார்ப்பரேட் ஊடக ஜாம்பவான்கள் கைவைக்க அஞ்சும் செய்திகளை, கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், ஒரு சிறிய குழு இரவு பகலாகக் களப்பணி செய்து, தரவுகளைச் சரிபார்த்து (Verification) வெளியிடுகிறது. ஆனால், அந்த உழைப்பிற்கு […]

February 13, 2026 admin
ஸ்டேட்டின் மாத்திரைகள்: உயிர்காக்கும் வரமா? பக்கவிளைவுகளின் கூடாரமா? Exclusive

ஸ்டேட்டின் மாத்திரைகள்: உயிர்காக்கும் வரமா? பக்கவிளைவுகளின் கூடாரமா?

உலகெங்கும் இதயம் சார்ந்த நோய்களால் (Cardiovascular disease) ஆண்டுக்குச் சுமார் 2 கோடி பேர் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுப்பதில் ‘ஸ்டேட்டின்’ (Statins) எனப்படும் கொலஸ்ட்ரால் குறைப்பு மாத்திரைகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மிக முக்கியப் பங்காற்றி வருகின்றன. இருப்பினும், இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டால் நினைவாற்றல் குறையும், தூக்கம் கெடும், ஆண்மைக்குறைவு ஏற்படும் எனப் பல்வேறு அச்சங்கள் மக்கள் மத்தியில் பரவியுள்ளன. இதனால் மாரடைப்பு அபாயம் உள்ளவர்கள் கூட, பயந்துபோய் இந்த மருந்தைத் தவிர்த்து வருகின்றனர். […]

February 13, 2026 admin
’மைலாஞ்சி’  – விமர்சனம்! Running News

’மைலாஞ்சி’ – விமர்சனம்!

நெஞ்சில் ஓர் ஆலயம் தொடங்கி மௌனம் பேசியதே வரை நாம் அரைத்த அதே மாவைத்தான், இயக்குனர் அஜயன் பாலா ‘மைலாஞ்சி’யிலும் அரைக்க முயன்றிருக்கிறார். தன் காதலி விரும்பும் இன்னொருவனுடன் அவளைச் சேர்த்து வைக்கத் துடிக்கும் தியாகி நாயகன், இதற்கிடையில் நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்கள் என பழைய ஃபார்முலாவை கையிலெடுத்தவர், அதை இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப மாற்றத் தவறிவிட்டார். 90-களின் பாதிப்பில் ஊறிய ஒரு ஆர்டிபிஷியல் உணர்வைத்தான் படம் நெடுக தருகிறார். கதைச் சுருக்கம்: ஊட்டியில் பறவைகள் பூங்கா […]

February 13, 2026 admin
இந்தியாவிற்கு ரெட் அலர்ட்: ஆரோக்கிய அறிவில் கோட்டை விடுகிறோமா? Exclusive

இந்தியாவிற்கு ரெட் அலர்ட்: ஆரோக்கிய அறிவில் கோட்டை விடுகிறோமா?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்று பேசினாலே நம் நினைவுக்கு வருவது பிரம்மாண்டமான நெடுஞ்சாலைகளும், அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களுமே. ஆனால், ஒரு தேசத்தின் ஜிடிபி (GDP) என்பது சிமெண்ட் கலவையிலும், சிலிக்கான் சிப்புகளிலும் மட்டுமே அடங்கியிருப்பதில்லை. இவற்றுக்கெல்லாம் பின்னால் மிக அமைதியாக, அதே சமயம் அதீத பலத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ‘ரகசிய என்ஜின்’ ஒன்று உண்டு. அது – ‘ஹெல்த் லிட்ரசி’ (Health Literacy) எனப்படும் சுகாதார விழிப்புணர்வு. நம் ஆரோக்கியத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கும் தெளிவும், […]

February 13, 2026 admin
வங்கதேசத்தில் ‘பிஎன்பி’ வசந்தம்: தாரிக் ரஹ்மான் வெற்றி! Exclusive

வங்கதேசத்தில் ‘பிஎன்பி’ வசந்தம்: தாரிக் ரஹ்மான் வெற்றி!

தெற்காசிய நாடான வங்கதேசத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் கொந்தளிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று (பிப்ரவரி 12, 2026) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வங்கதேச தேசியக் கட்சி (BNP) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 2024-ஆம் ஆண்டு ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சி மக்கள் போராட்டத்தால் முடிவுக்கு வந்த பிறகு நடைபெற்ற முதல் ஜனநாயகத் திருவிழா இது என்பதால், உலக நாடுகளின் கவனிப்பு இதன் மீது குவிந்திருந்தது. மூன்றில் இரண்டு […]

February 13, 2026 admin
உறவுகளைக் காக்கும் ‘Healthy Dependency’: நெட்ரா தவாவ் காட்டும் புதிய வழி! Exclusive

உறவுகளைக் காக்கும் ‘Healthy Dependency’: நெட்ரா தவாவ் காட்டும் புதிய வழி!

உறவுகளில் அளவுக்கு அதிகமாக நெருக்கம் காட்டினால் அது ‘Codependency’ (மிகைச் சார்ந்திருத்தல்) என்றும், விலகி நின்றால் அது ‘Avoidant’ (தவிர்த்தல்) என்றும் இன்று பல முத்திரைகள் குத்தப்படுகின்றன. ஆனால், ஒரு உறவில் எந்த அளவு நெருக்கம் ஆரோக்கியமானது? மற்றவர்களைச் சார்ந்து இருப்பதில் உண்மையில் தவறு இருக்கிறதா? பிரபல உளவியல் நிபுணர் நெட்ரா க்ளோவர் தவாவ் (Nedra Glover Tawwab) எழுதியுள்ள ‘The Balancing Act‘ என்ற புதிய புத்தகம், உறவுகளில் ஆரோக்கியமான சார்புநிலை (Healthy Dependency) குறித்த […]

February 13, 2026 admin
செல்போன் பயன்பாட்டால் மண்டையோட்டில் முளைவிடும் ஒரு ‘புதிய எலும்பு’! Exclusive

செல்போன் பயன்பாட்டால் மண்டையோட்டில் முளைவிடும் ஒரு ‘புதிய எலும்பு’!

காலமாற்றத்திற்கு ஏற்ப மனித உடல் தன்னைத் தகவமைத்துக் கொள்வது இயற்கையின் நியதி. ஆனால், நாம் பயன்படுத்தும் நவீனத் தொழில்நுட்பக் கருவிகள் நம் எலும்புக் கூட்டிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா? அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. இன்றைய இளைஞர்களின் மண்டையோட்டின் அடிப்பகுதியில் “எலும்பு கொம்பு” போன்ற ஒரு புதிய அமைப்பு வளர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆம்..கேட்பதற்கு ஏதோ சயின்ஸ் ஃபிக்ஷன் படம் போலத் தோன்றலாம். ஆனால், குனிந்து செல்போன் பார்ப்பதால் ஏற்படும் அழுத்தத்தைத் தாங்குவதற்காக, […]

February 13, 2026 admin
உடனடி செய்திகள்