32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வணிகம்

856 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
வங்காளதேசத்தை விடப் பின்வாங்கும் இந்தியா: ஐ.எம்.எஃப் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்! Exclusive முக்கியச் செய்தி
October 17, 2026 admin 3 நிமிட வாசிப்பு

வங்காளதேசத்தை விடப் பின்வாங்கும் இந்தியா: ஐ.எம்.எஃப் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீடுகள் மற்றும் சர்வதேச ஒப்பீடுகள் குறித்த முக்கியத் தரவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, 2026 ஆம் நிதியாண்டில் தற்போதைய சந்தை விலையின் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி, அண்டை நாடான வங்காளதேசத்தின் தலா ஜிடிபியை விடக் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாகக் கருதப்படும் இந்தியாவிற்கு இந்த புள்ளிவிவரக் கணிப்பு முக்கிய விவாதப் […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
லென்ஸ்கார்ட்டின் சன்யா மேஜிக்: கண்ணாடியில் ஒரு இசைப் பயணம்! Exclusive

லென்ஸ்கார்ட்டின் சன்யா மேஜிக்: கண்ணாடியில் ஒரு இசைப் பயணம்!

இந்தியாவின் முன்னணி கண் கண்ணாடி பிராண்டான லென்ஸ்கார்ட், பாரம்பரிய கலாச்சாரத்தையும் நவீன ஃபேஷனையும் இணைக்கும் வகையில் தனது ‘இந்தியன் அக்செண்ட்ஸ்’ (Indian Accents) வரிசையில் புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இசை மற்றும் பாரம்பரிய கலைகளின் உத்வேகத்தோடு உருவாக்கப்பட்டுள்ள ‘சன்யா’ (Shunya) என்ற புதிய கண் கண்ணாடித் தொகுப்பை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ஃபேஷன் பொருளாக மட்டுமின்றி, இந்திய பாரம்பரிய இசையின் ஆன்மாவை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கலெக்ஷன் தற்போது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. […]

October 8, 2026 admin
உலகின் நம்பர் 1 சந்தை: இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மாற்றும் யூடியூப்! Exclusive

உலகின் நம்பர் 1 சந்தை: இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மாற்றும் யூடியூப்!

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் பொழுதுபோக்கு மற்றும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் எளிய ஊடகமாகத் தொடங்கப்பட்ட யூடியூப், தற்போது இந்தியாவின் பொருளாதாரத்தையே மாற்றி எழுதும் ஒரு அசுர சக்தியாக உருவெடுத்துள்ளது. பிரபல ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய தாக்க அறிக்கையின்படி, கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) யூடியூப்பின் படைப்பாக்க சுற்றுச்சூழல் அமைப்பு பதினெட்டாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பங்களித்துள்ளது. வெறும் பொழுதுபோக்குச் செயலியாகக் கருதப்பட்ட ஒரு தளம், […]

October 1, 2026 admin
ஆன்லைன் ஷாப்பிங் முறைகேடுகள்: மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள்! Exclusive

ஆன்லைன் ஷாப்பிங் முறைகேடுகள்: மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள்!

நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் ஆன்லைன் ஷாப்பிங் எனப்படும் மின்-வர்த்தகம் நமது வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட காலகட்டத்தில், இ-காமர்ஸ் தளங்களின் வரம்பு மீறல்களுக்கும் நுகர்வோர் ஏமாற்றங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை புதிய திருத்த விதிகளை வெளியிட்டுள்ளது. வரும் 2027 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த நுகர்வோர் பாதுகாப்பு திருத்த விதிகள், ஆன்லைன் வர்த்தகத்தில் இதுவரை நிலவி வந்த ஒளிவுமறைவுகளைத் தகர்த்து, முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேடல் முறைகேடுகளுக்கு […]

September 19, 2026 admin
பணப்புழக்கத்தை உறிஞ்சும் ரிசர்வ் வங்கி:ட்டிச் சுமையை ஏத்துமா இந்திய சந்தை? Exclusive

பணப்புழக்கத்தை உறிஞ்சும் ரிசர்வ் வங்கி:ட்டிச் சுமையை ஏத்துமா இந்திய சந்தை?

இந்தியாவின் பொருளாதார மையமாக விளங்கும் வங்கித்துறையில் தற்போது தேவைக்கு அதிகமாக புழக்கத்தில் உள்ள பணப்புழக்கத்தை (Excess Liquidity) கட்டுப்படுத்திடவும், சந்தை சமநிலையை பேணவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடியான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. செப்டம்பர் 16 முதல் தொடங்கும் இந்த நடவடிக்கையின் மூலம், மூன்று கட்டங்களாக மொத்தம் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான அரசு பத்திரங்களை (Government Bonds) சந்தையில் விற்பனை செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த நிதி உறிஞ்சுதல் நடவடிக்கையானது நாட்டின் ஒட்டுமொத்த […]

September 12, 2026 admin
கார்ப்பரேட் உலகின் புது மோகம்:செராமிக் வாட்டர் பாட்டில்! Exclusive

கார்ப்பரேட் உலகின் புது மோகம்:செராமிக் வாட்டர் பாட்டில்!

சமீபகாலமாக பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த, அதேசமயம் ஸ்டைலான வாட்டர் பாட்டில்களைப் பயன்படுத்துவது உலகளாவிய கார்ப்பரேட் சமூகத்தில் ஒரு புதிய நாகரிகமாக மாறி வருகிறது. இதுவரை சந்தையை ஆக்கிரமித்திருந்த வழக்கமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில்களை ஓரம் தள்ளிவிட்டு, தற்போது ஃபிராங்க் கிரீன் (Frank Green) என்ற ஆஸ்திரேலிய பிராண்டின் கேன்டீன்கள் உலகப் புகழ்பெற்ற டிரெண்டாக உருவெடுத்துள்ளன. அமெரிக்க சந்தையைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வடிவமைப்பு ஆஸ்திரேலியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஃபிராங்க் கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த […]

September 6, 2026 admin
மீண்டும் களத்தில் மிடில் மேனேஜர்கள்: ஊபர் அதிரடி! Exclusive

மீண்டும் களத்தில் மிடில் மேனேஜர்கள்: ஊபர் அதிரடி!

கார்ப்பரேட் உலகில் கடந்த சில ஆண்டுகளாகவே இடைநிலை மேனேஜர்கள் அல்லது மிடில் மேனேஜர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, நிறுவனங்களை மேலாண்மை ரீதியாகச் சுருக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. பணிநீக்கம் மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் போது முதலில் குறிவைக்கப்பட்டது இந்த இடைநிலை மேனேஜர்கள் தான். ஆனால், உலகின் முன்னணி ரைட்-ஷேரிங் நிறுவனமான ஊபர், தற்போது இந்த பாரம்பரியப் போக்கிற்கு முற்றிலும் மாறாக ஒரு புதிய கார்ப்பரேட் அணுகுமுறையைக் கையிலெடுத்துள்ளது. ‘மைக்ரோ டீம்ஸ்’ அல்லது சிறிய அளவிலான பணிக்குழுக்கள் […]

September 5, 2026 admin
லைக்ஸ்கள் அல்ல; இனி கோடிகள்: தூள் கிளப்பும் இந்திய இன்ஃப்ளூயன்ஸர்கள்! Exclusive

லைக்ஸ்கள் அல்ல; இனி கோடிகள்: தூள் கிளப்பும் இந்திய இன்ஃப்ளூயன்ஸர்கள்!

சமூக ஊடகங்களில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தாக்காளர்கள் (Influencers), வெறும் விளம்பர முகங்களாக மட்டுமே இயங்கிய காலம் மெல்ல மாறி வருகிறது. இன்றைக்கு அவர்கள் தங்களுக்கெனத் தனித்துவமான நுகர்வோர் பிராண்டுகளை (Consumer Brands) உருவாக்கி, துணிகர மூலதன நிதியாளர்களின் (Venture Capitalists) கோடிக்கணக்கான முதலீடுகளை ஈர்க்கும் புதிய வணிகப் அலையை இந்தியாவில் உருவாக்கியுள்ளனர். டிஜிட்டல் திரையில் பெற்ற செல்வாக்கை நேரடி வர்த்தகமாக மாற்றும் இந்த மாற்றம், இந்தியச் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. விளம்பர மாதிரியிலிருந்து […]

September 2, 2026 admin
கோகோ கோலாவின் மெய்நிகர் தயாரிப்பு:சோடாவைத் தாண்டிய தரவுப் புரட்சி! Exclusive

கோகோ கோலாவின் மெய்நிகர் தயாரிப்பு:சோடாவைத் தாண்டிய தரவுப் புரட்சி!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் தினசரி பருகப்படும் கோகோ கோலா நிறுவனம், வெறும் ஒரு குளிர்பான விற்பனை நிறுவனத்தைத் தாண்டி வணிக உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது. உலகளவில் தினமும் கோடிக்கணக்கான பாட்டில்கள் விற்கப்படுவதோடு, உலகின் பெரும்பாலான நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரையாகவும் இந்நிறுவனம் காலூன்றியுள்ளது. ஆரம்ப காலத்தில் ஒரு எளிய மருத்துவ மருந்தாக விற்கப்பட்ட இந்த பானம், இன்றைக்கு உலகப் பொருளாதாரத்தின் போக்கைத் தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது வியப்புக்குரியது. மட்டுமின்றி, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தனது வியாபார […]

August 25, 2026 admin
சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்: சன் டிவியின் புதிய திரைப்புரட்சி! Exclusive

சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்: சன் டிவியின் புதிய திரைப்புரட்சி!

இந்திய திரைத்துறை வரலாற்றில் பொழுதுபோக்குக் கட்டமைப்பு மிக வேகமாக உருமாறி வருகிறது. ஸ்மார்ட்போன்களின் வரவுக்குப் பிறகு, பெரிய திரையில் படம் பார்ப்பவர்களை விட, கைகளில் இருக்கும் கைப்பேசியில் நொடிக்கு நொடி சுவாரசியமான காட்சிகளைத் தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த நுகர்வு மாற்றத்தை உணர்ந்து, இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான சன் டிவி நெட்வொர்க், தனது ‘சன் நெக்ஸ்ட்‘ செயலியில் ‘சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்’ எனும் புதிய குறு நாடக (மைக்ரோ டிராமா) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோஸ்டார் மற்றும் […]

August 22, 2026 admin
உடனடி செய்திகள்