32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2455 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 121 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 121)
பில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு! Exclusive

பில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

கடந்த 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டபோது நாம் 99%; அவர்கள் 1% எனும் முழக்கம் அதிரடியாக அரங்கேறியது. அதன் பொருள் ஏழ்மையின் கடுமை பெரும்பாலோர்க்கு இருக்கையில் ஒரு சிலர் மட்டுமே செல்வ வளத்தை அனுபவிக்கின்றனர் என்பதேயாகும். அதைத் தொடர்ந்து டிரம்ப் அதிபராக இருந்தபோதும் இதே முழக்கங்கள் எழுந்தவாறே இருந்தது. இப்போது பைடன் ஆட்சிக்காலத்தில் வளர்ச்சியை அனைவருக்கும் பகிரும் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். கொரோனாவின் பொது முடக்கம் […]

July 22, 2021 admin
ஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா? தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

ஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா? தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

சாமான்யராக இருந்தாலும் கூட உங்களது மொபைல் ஃபோனில் அறிமுகமற்ற நபர்கள் அனுப்பும் செய்தியின் சுட்டியை சுட்டினால் கிடைப்பது விபரீதம். நமது தகவல்கள் அனைத்தும் மற்றொருவரின் கைகளில். இதே போல ஆண்டிராய்ட் மொபைல்களை லாக் ஸ்க்ரீன் இன்றி பயன்படுத்தும் போது உங்களது தகவல்கள் அருகாமையில் நிற்கும் நபரின் செல்ஃபோனிற்கு சப்தமின்றி கடத்தப்படும் அபாயமும் உண்டு. இதெல்லாம் தனிநபர்கள் சந்திக்கும் பிரச்சினைகள். முன்பெல்லாம் முன்பின் தெரியாதவர்களிடமிருந்து அழைப்பு வந்தால் யார் வேண்டும் என்றே கேட்பார்கள். இப்போதெல்லாம் எதிர் முனையில் பேசுபவர் […]

July 20, 2021 admin
பெகாசஸ் ஸ்பைவேர் உளவு விவகாரம் …!-மோடி அரசு கண்டறிய வேண்டும்! Exclusive

பெகாசஸ் ஸ்பைவேர் உளவு விவகாரம் …!-மோடி அரசு கண்டறிய வேண்டும்!

மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று இந்தியாவில் பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது தொடர்பான காரசாரமான விவாதங்களும், எதிர்க்கட்சிகளின் விமர்சன ஏவுகணைகளும் பல தரப்பிலிருந்து பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த பெகாசஸ் தொழில்நுட்பம் அரசாங்கங்களுக்கு மட்டுமே தன் சேவையை வழங்கும் என்பதால் இச்சர்ச்சையில் மோடி அரசு சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் இருந்து இயக்கும் பிரபலமான என்.எஸ்.ஓ-வின் ‘பெகாசஸ்’ ஸ்பைவேரை பயன்படுத்தி நம் நாட்டில் மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற […]

July 19, 2021 admin
இபிகோ 124-A ராஜ துரோக ஷரத்தை சுப்ரீம் கோர்ட்டே நீக்க  முன் வர வேண்டும்! Exclusive

இபிகோ 124-A ராஜ துரோக ஷரத்தை சுப்ரீம் கோர்ட்டே நீக்க முன் வர வேண்டும்!

மோடி தலைமையிலான பாஜக கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் என்ற தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் மட்டும் 10,898 பேர் மீது தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமான அளவுக்கு வருகின்ற குற்றபதிவு ராஜ துரோகம் தான். ஏதோ நாடே ராஜ துரோகத்தில் நிரம்பி இருப்பது போலவும் மற்றும் மக்கள் […]

July 18, 2021 admin
நடிப்பு மட்டும் போதாது.. கனவுடன் வளருங்கள்! Exclusive

நடிப்பு மட்டும் போதாது.. கனவுடன் வளருங்கள்!

தொலைக்காட்சி, விளம்பரம், திரைப்படம் உள்ளடக்கிய பொழுதுபோக்கு தொழில்களில் குழந்தைகளைப் பயன்படுத்துவது சட்டப்படி சரியா? 2017 ம் வருடத்தின் குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்தத்தின்படி சில நிபந்தனைகளுடன் அவர்களைப் பயன்படுத்த அனுமதித்திருக்கிறது. ஒரு நாளைக்கு குழந்தை நடிகர்களை அதிக பட்சமாக 5 மணி நேரம் மட்டுமே நடிக்கவைக்க வேண்டும். தொடர்ச்சியாக 3 மணி நேரத்திற்கு மேல் நடிக்க வைக்கக் கூடாது. இது போன்ற நிபந்தனைகள் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகிறதா என்பது வேறு விஷயம். ஆனால் தொழிற்சாலைகளில் காட்டும் கெடுபிடிகளை குழந்தைத் […]

July 17, 2021 admin
கல்வியைக் குறித்துக் கவலை கொள்வதற்கு யாருக்கும் அக்கறை இல்லை! Exclusive

கல்வியைக் குறித்துக் கவலை கொள்வதற்கு யாருக்கும் அக்கறை இல்லை!

வீட்டுக்குப் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள், பூட்டப்பட்டிருந்த கடையின் பலகையில் அமர்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன், குழந்தைகள் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி தரக்கூடியது, குறிப்பாக நகர்ப்புறங்களில் தெருக்களில் குழந்தைகள் விளையாடுவது அருகிப் போன கதையாகிவிட்டது, ஆட்டமும், பாட்டமுமாய் ஆடி முடித்த களைப்பில் அருகில் நின்ற ஒரு குழந்தையிடம் “உன் பெயரென்ன?” என்றேன், “நஸ்ரின்” என்று சிரித்தாள்.  “எந்தப் பள்ளியில் படிக்கிறாய்?, பள்ளிகள் திறப்பது குறித்து ஏதேனும் சொல்லி இருக்கிறார்களா?”. “ஆன்லைனில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால், அப்பாவிடம் மட்டும்தான் ஆண்டிராய்டு […]

July 14, 2021 admin
கொங்குநாடு உருவாக வாய்ப்பு ராஜா.. வாய்ப்பிருக்கு! அதனால் அதிக கவனம் தேவை! Exclusive

கொங்குநாடு உருவாக வாய்ப்பு ராஜா.. வாய்ப்பிருக்கு! அதனால் அதிக கவனம் தேவை!

கொங்கு நாடு என்கிற தனி யூனியன் பிரதேசத்தை ஒன்றிய அரசு உருவாக்கப் போவதாகக் குதூகலத்துடன் ‘பலே திட்டம்’, ‘விளையாட்டுக் காட்டுவது’ என்கிற சொற்களை எல்லாம் பயன்படுத்தி ஜூலை 10ஆம் தேதியிட்ட ‘தினமலர்’ நாளிதழ் ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருப்பது, எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது, அப்படி நியமிக்கப்பட்டபோது அவரைப் பற்றிய குறிப்பில் அவர் கொங்கு நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்லப்பட்டிருப்பது, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த […]

July 12, 2021 admin
கனியின் மொழியில் அரசியல் பேசலாமே! Exclusive

கனியின் மொழியில் அரசியல் பேசலாமே!

“அழுகிடும் நல்லுறவை அழகிய மாம்பழங்கள் மாற்றிக்காட்டி, ஆரோக்ய அரசியலுக்கு அடிகோலுமா?” என்ற ருசிகர சூழல் இந்திய அரசியல் களத்தில் அடிஎடுத்து வைத்துள்ளது. கொள்கை மாறுபாடுகளின் பேரால், குதர்க்கக் கூற்றுகளால் கூப்பாடு போட்டுக் கொள்ளும் வழக்கம் அரசியல் அரங்கில் வாடிக்கையாகி விட்டது. எனினும் அத்தி பூத்தாற்போல் அவ்வப்போது சுத்தச் சுகமான நட்புறவு நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன. இருவேறு முரண்பாடுகளைக் கொண்டோர் சந்தித்துக் கொண்டால், முகமுறுவலே அகச்சுகத்துக்கு அடிப்படை. ஒருவகையில் பார்த்தால் இருவேறு கோட்பாட்டுக் கோமான்களின் சந்திப்பின் போது, சமாதானத்தின் அடையாளமாக […]

July 9, 2021 admin
மோடி அமைச்சரவை மாற்றம் எதைக் குறிக்கிறது? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

மோடி அமைச்சரவை மாற்றம் எதைக் குறிக்கிறது? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

பிரதமர் மோடி கடந்த இரு ஆண்டுகளாகவே எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தை செய்தே விட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாகப் பதவி ஏற்ற போது பல்வேறு துறைகளுக்கு தனி அமைச்சரே இல்லை என்பது போல இருந்தது. அத்துடன் கூடவே ராம் விலாஸ் பாஸ்வான், ஜே. பி நட்டா போன்றோர் இடத்தையும் நிரப்ப வேண்டி இருந்த நிலையில் இப்போது விரிவாக்கம் நடந்துள்ளது. காபினட் அமைச்சர்கள் உட்பட 12 அமைச்சர்கள் வெளியேறி விட்டனர். இதில் டிவிட்டருடன் மோதிய ரவிசங்கர் […]

July 9, 2021 admin
டிஜிட்டல் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு? களமிறங்கும் தூண்கள்… -ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

டிஜிட்டல் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு? களமிறங்கும் தூண்கள்… -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

நாட்டின் முன்னணி செய்தி நிறுவனமான பி டி ஐ மத்திய அரசின் மீது வழக்கு தொடுத்துள்ளது. அரசின் சமீபத்திய டிஜிட்டல் ஊடகக் கட்டுப்பாட்டு விதிகள் இதுநாள் வரையில் கொடுக்கப்பட்டிருந்த சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி ஏற்கனவே பல நிறுவனங்கள் நீதிமன்றம் சென்றிருக்கும் நிலையில் பி டி ஐ யும் இதில் இறங்கியிருப்பது பரபரப்பைக் கொடுத்துள்ளது. டிஜிட்டல் ஊடகம் என்பது இந்தியாவில் மக்கள் அனைவரையும் முழுமையாக ஆக்கிரமிக்கவில்லை என்றாலும் இன்று ஸ்மார்ட்ஃபோனும், இணையத் தொடர்பும் அனைவரையும் டிஜிட்டல் குடிமக்களாக மாற்றும் […]

July 8, 2021 admin
உடனடி செய்திகள்