32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2455 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 120 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 120)
அரசியல் வாழ்வில் அதிரடி ஏற்றமும் திடீர் இறக்கமும் ஏன்? – சில நினைவுகள்! Exclusive

அரசியல் வாழ்வில் அதிரடி ஏற்றமும் திடீர் இறக்கமும் ஏன்? – சில நினைவுகள்!

காமராஜர் பாசறையில் நேரடியாகப் பயின்ற திண்டிவனம் ராமமூர்த்தி தனது 87ம் வயதில் மறைவு எய்திவிட்டார். திண்டிவனம் ராமமூர்த்தியின் அரசியல் அனுபவங்கள் நிகழ்யுக அரசியல் இளைஞர்களுக்குப் பாடமாக இருக்கும். அவரின் மறைவு தொடர்பான செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இவற்றில் அவர், வார்டு கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவர், மக்களை உறுப்பினர், மாநிலங்களவையின் உறுப்பினர் என்றவாறு அவரின் அரசியல் ஆளுமையானது அதிகரித்துக் கொண்டே இருந்ததை உணரலாம். இவை அனைத்துமே 1996ம் […]

August 13, 2021 admin
ஒலிம்பிக்கில் நம்ம தமிழர்கள் பதக்கம் வென்று வர சில யோசனைகள்! Exclusive

ஒலிம்பிக்கில் நம்ம தமிழர்கள் பதக்கம் வென்று வர சில யோசனைகள்!

ஒலிம்பிக்ஸ் முடிந்திருக்கிறது. தமிழகத்திலிருந்து பங்களிப்புகள் இருந்தது. ஆனால், பதக்கங்கள் இல்லை. தமிழகம் என்ன செய்ய வேண்டும்? ஹரியானாவை போல தமிழகமும் விளையாட்டு பூமியாக மாற வேண்டும். அதற்கு புதிதாக எந்த சூத்திரத்தையும் கண்டுபிடிக்க வேண்டிய தேவையில்லை.கல்வியில் தமிழகம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை விளையாட்டிலும் அடைய வேண்டும். கல்வியை எல்லா மட்டத்தில் இருக்கும் மக்களுக்கும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட சமூக பொருளாதார மாடலை விளையாட்டுக்கும் அப்ளை செய்ய வேண்டும். காமராஜர் ஊர் ஊராக பள்ளிகளை கட்டியதை போல, இங்கே குறைந்தபட்சம் […]

August 11, 2021 admin
ஒவ்வொரு சிறு உமிழ்வும் இப்புவியின் எதிர்காலத்தை சீரழிக்கும்!-அறிவியலாளர்கள் எச்சரிக்கை! Exclusive

ஒவ்வொரு சிறு உமிழ்வும் இப்புவியின் எதிர்காலத்தை சீரழிக்கும்!-அறிவியலாளர்கள் எச்சரிக்கை!

கடந்த ஜூலை மாதம் உலகின் அனைத்து பிராந்தியங்களும் வெள்ளம், வறட்சி, புயல், நிலச்சரிவு, கடல் நீர் மட்ட உயர்வு, கனமழை, காட்டுத்தீ போன்ற ஏதோ ஒரு பேரிடரால் பாதிக்கப்பட்டோ அல்லது பாதிப்பிலிருந்து மீண்டுகொண்டோ இருந்தது. இவையெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பவைதானே இதில் புதிதாக ஏதுமில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை காலநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து வரும் எந்த அறிவியலாளராலும் […]

August 11, 2021 admin
மு.க.ஸ்டாலின் நடத்த போவது உலகத் தமிழ் மாநாடா? உலகத் தமிழ் செம்மொழி மாநாடா? Exclusive

மு.க.ஸ்டாலின் நடத்த போவது உலகத் தமிழ் மாநாடா? உலகத் தமிழ் செம்மொழி மாநாடா?

தமிழகத்தில் உலகத் தமிழ் மாநாடு நடத்திட மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திட்டமிட்டு வருவதாகத் தமிழ்நாடு அமைச்சர்கள் அவ்வப்போது தகவல்களைத் தவழவிட்டுக் கொண்டு இருக்கின்றனர். எனவே இதுதொடர்பான சில வரலாற்று நிகழ்வுகளை அசைபோட்டுப் பார்த்துக் கொள்வது அவசியம்..! திமுக ஆட்சிக்கு வந்தது 1967-ஆம் ஆண்டு. முதல் அமைச்சராகப் பொறுப்பு ஏற்ற அண்ணா, சென்னையில் மறு ஆண்டிலேயே உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, சர்வதேச அறிஞர்களையே வியக்க வைத்தார். தற்போது சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள 9 சிலைகளும் […]

August 7, 2021 admin
ஒரு படத் திறப்பும் புறக்கணிப்பும்! Exclusive

ஒரு படத் திறப்பும் புறக்கணிப்பும்!

ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை, தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு நிகழ்வில் திறந்து வைத்திருக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்திருக்கிறது. “சட்டமன்ற நூற்றாண்டு விழாவைப் புறக்கணிப்பது என்பது அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் கொள்கை முடிவு” என்று முன்னாள் அமைச்சர் ஜெய்குமார் பேட்டி கொடுக்கிறார். மாறாக, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் […]

August 3, 2021 admin
தன் யானை பலம் தெரியாத திருமாவளவன்! Exclusive

தன் யானை பலம் தெரியாத திருமாவளவன்!

திருமாவளவன் பத்தி சர்ச்சை கிளப்றதுக்குனே ஒரு கோஷ்டி இருக்கு. ரொம்ப நாளாவே இது நடக்கு. அவருக்கும் தெரியும். பெரும்பாலும் சைலன்டா கடந்து போயிருவார். சில சமயம் இப்டி காட்டமா பதில் சொல்லி அடுத்த சர்ச்சைக்கு க்யூ குடுப்பார். கை கட்டிக்றது என்னோட இயல்புனு அவர் சொல்றது நெசம். மீசை முறுக்ற போசுக்கு சம்பந்தமே இல்லாம ரொம்ப அடக்கமான தலைவர். எதார்த்தமா ஒரு பிளாஸ்டிக் சேர இழுத்து போட்டு உக்கார்றதும் அதுல அடக்கம். அடங்க மறு!னு எங்கள எழுப்பி […]

August 3, 2021 admin
தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி !- கட்டிங் கண்ணையா ஸ்பெஷல் ரிப்போர்ட்! Exclusive

தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி !- கட்டிங் கண்ணையா ஸ்பெஷல் ரிப்போர்ட்!

16 வயதில் பத்திரிகையாளர், 20 வயதுகளில் வெற்றிகரமான வசனகர்த்தா, 32 வயதில் தேர்தலில் வென்று சட்டசபைக்குள் சென்றவர், 13 முறை தொடர்ச்சியாக வென்று 95 வயதிலும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்பவர், 38வயதில் திமுக பொருளாளர், 49 ஆண்டுகளாக திமுக தலைவர், ஐந்து முறை தமிழக முதலமைச்சர் என பரிணாமம் கண்ட கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்துக்கு உள்ளே போகும் போது கற்றுக் கொள்ளும் மாணவனாகவும், கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார். சட்டமன்றத்தில் முதல் முதலாக கருணாநிதி […]

August 1, 2021 admin
இணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்!- ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

இணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்!- ரமேஷ் கிருஷ்ணன் பாபு

தொழில்நுட்ப புரட்சியினால் இன்று செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்கிறோம். இதற்கு உறுதுணையாக இருப்பது இணையதள வசதி எனும் தகவல் தொழில்நுட்ப வசதியாகும். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இணையதளங்கள் கோலோச்சி வந்தாலும் கடந்த 1995 ஆம் ஆண்டிற்கு பிறகே உலகம் முழுதும் சாமான்யர்களுக்கு இணையதள வசதி அறிமுகமாகியது. அப்போது நகர்ப்புறங்களில் அதிகம் படித்த அல்லது விரைவான தகவல் பரிமாற்றத்தை விரும்பும் நபர்களே இணையதள சேவையை தேடிச் சென்றனர். இத்தொழில்நுட்ப சேவைத் துவங்கிய சில ஆண்டுகளிலேயே பிரவுசிங் செண்டர்கள் எனப்படும் […]

July 29, 2021 admin
சினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்! Exclusive

சினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்!

சினிமாவில் அரசியலை திணித்து பேசுவது என்பது இன்று நேற்று நடப்பதல்ல.. என்றாலும் தகவல் தொழில் நுட்பம் வளர ஆரம்பித்த 1990களின் துவக்கத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள்தான் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தன.. காரணம் மீடியாக்களின் தாக்கம் அப்படி.. ஜெயலலிதா, ரஜினி இடையே ஏற்பட்ட மோதலே பிள்ளையார் சுழி..1991-ல் முதன் முறையாக முதலமைச்சரான ஜெயலலிதாவிற்கு ராஜீவ்காந்தி படுகொலையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டன. ஜெயலலிதா வசித்த அதே போயஸ்தோட்டத்தில்தான் ரஜினியின் வீடும். ஒவ்வொரு முறை வெளியே போகும்போதும் வரும்போதும் […]

July 26, 2021 admin
நாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு  சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா? Exclusive

நாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா?

நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் சந்தித்து, சட்டப்பேரவையில் கலைஞர் படத்திறப்பு விழா, 75வது சுதந்திர தின விழா, தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா உள்ளிட்டவற்றுக்கு அழைத்தார். இந்திய சுதந்திரத்திற்கே 75ஆம் ஆண்டுவிழாதான் என்றால் தமிழக சட்டமன்றத்திற்கு எப்படி நூற்றாண்டு விழா கொண்டாட முடியும்? அதுவும், 2012ல் சட்டமன்ற வைரவிழா, அதாவது 60ஆம் ஆண்டு விழாவை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு கொண்டாடி, அதற்காக கடற்கரை சாலையில் அலங்கார வளைவையும் அமைத்திருக்கும்போது, 2021ல் 69ஆம் ஆண்டு […]

July 23, 2021 admin
உடனடி செய்திகள்