32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2455 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 119 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 119)
மக்கள் புரட்சி நடக்கலாம்! Election Special

மக்கள் புரட்சி நடக்கலாம்!

வீரப்ப மொய்லி சிம்பிளான ஆள். ஒளிவு மறைவு இல்லாம பேச கூடியவர். அவரோட பேட்டி: ஆமா. காங்ரஸ்ல சீர்திருத்தம் வேணும்னு சோனியாக்கு லெட்டர் எழுதின 23 பேர்ல நானும் ஒருத்தன். கபில் சிபல் அப்பப்ப டின்னருக்கு கூப்டுவார். போவோம். சீனியர் காங்ரஸ்காரங்க ஒண்ணா கூடினா வேற எத பத்தி பேசுவோம்? கட்சிய பத்திதான். கட்சில நெறைய விஷயங்கள மாத்தணும்னு சொன்னோம். அப்டியே லெட்டரா எழுதி சோனியாக்கு அனுப்புவமே..னு கபில் கேட்டார். சரி சொன்னேன். கையெழுத்து போட்டேன். க்ரூப் ஆப் 23-னு […]

September 12, 2021 admin
குழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே! Exclusive

குழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே!

பள்ளி மாணவர்களின் படிப்பில் விளையாடும் சமூக ஊடகங்கள் . கல்வியில் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க இருக்கும் குழந்தைகள். பள்ளிகள் திறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை… ஆனால் பள்ளியை மூட வைப்பதற்கு மொத்த ஊடகமும் கங்கணம் கட்டி வேலை செய்கிறது. மற்ற துறைகள் எல்லாம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஜூலை மாதத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்போதெல்லாம் எந்த துறையிலும் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் என்று எந்த ஒரு ஊடகமும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கவில்லை. தொழிற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் […]

September 9, 2021 admin
“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்! Exclusive

“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்!

பணப்பசியால் மதிமயங்கிக் கிடக்கும் மத்திய அரசு, மற்றொரு வரிவருவாய் வாய்ப்பை, மாநில அரசுகளிடம் இருந்து தட்டிப் பறித்துவந்துள்ளது. ஏற்கனவே மாநில அரசுகளின் வரி வருவாய் வசதிகள் அசதியைச் சந்திக்கின்றன. சிறுகச் சிறுக மாநில அரசுகளின் வருமான வழிகளை மத்திய அரசு, தன்பக்கம் திருப்பி விட்டு, மாநிலங்களை வற்றவைத்து, பற்றாக்குறையைத் தொற்ற வைத்து வருகிறது. இந்த நிலையில் இன்னுமோர் இன்னலை மாநில அரசுகள் சந்திக்கப் போகின்றன. மக்கள் சந்திக்கும் பிரச்னையைத் தீர்க்கப் போகிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு முன்வரும் மத்திய […]

September 3, 2021 admin
தனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம்! தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்? Exclusive

தனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம்! தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்?

கோவிட்-19 தொற்று நமது நாட்டின் அனைத்து துறைகளையும் மோசமாக பாதித்துள்ளது. ஆனால், கல்வித்துறை உண்மையில் தன் வருமானத்தை தக்கவைத்துக் கொண்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் இணையவழி கல்விமுறைக்கு தங்களை மாற்றிக் கொண்டன. இணைய வழியில் கற்பிப்பதை காரணமாக வைத்து, பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் முழு கட்டணத்தை வசூலித்துவிட்டன. தனியார் கல்வி நிறுவனங்களின் வருமானம் பெருமளவு பாதிக்கவில்லை. ஆனால் அக்கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் வாழ்நிலை பாதிக்கப்பட்டது. பணி நீக்கம் சம்பள குறைப்பு காரணமாக குடும்பத்தை காப்பாற்ற என்ன வேலை கிடைத்தாலும் சரி […]

August 28, 2021 admin
ஒரு சடங்கு மந்திரம் போன்று ‘கால நிலை மாற்றம்’ என்ற சொல்லை உச்சரிக்கின்றனர்! Exclusive

ஒரு சடங்கு மந்திரம் போன்று ‘கால நிலை மாற்றம்’ என்ற சொல்லை உச்சரிக்கின்றனர்!

ஐ.பி.சி.சி.யின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை வெளியானது தொடங்கிக் ‘கால நிலை மாற்றம்’ என்ற சொல் திரும்பவும் உச்சரிக்கப்படுகிறது. அரசாங்கங்களும் இது பற்றிப் பேசத் தொடங்கியுள்ளது நல்ல சமிக்ஞை என்று தோன்றலாம். ஆனால், உண்மை நிலை அப்படி இல்லை. “அங்கங்கே இந்த ‘மானே, தேனே’ எல்லாம் போட்டுக்கொள்” என்பது போல அரசுகளும் தங்கள் அறிக்கைகளில் ‘சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம்’ என்று போட்டு நிரப்பிப் பாடல்களை இயற்றிக் கொண்டிருக்கின்றன. இதற்கும் மக்களிடையே தொடர்ந்து ஏற்பட்டு வரும் விழிப்புணர்வே காரணம். ஐ.பி.சி.சி.யின் […]

August 22, 2021 admin
தமிழக அரசு கடன் சுமைகளைக் குறைப்பதற்காகவென்றே தனி வரி! Exclusive

தமிழக அரசு கடன் சுமைகளைக் குறைப்பதற்காகவென்றே தனி வரி!

பட்ஜெட் என்றாலே முதலில் நினைவை நிலைகுலைய வைப்பது வரி தான். ஜனவரி, பிப்ரவரி மாத வாக்கில் பட்ஜெட் தாக்கல் ஆவதால், மாதப் பெயர்களில் வரி எனும் வார்த்தை இருப்பதால், வரி விதிப்பு தவிர்க்க முடியாததாகி விடுகிறதோ! தமிழக சட்டமன்றத்தில் தற்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதமானது ஜனவரியோ, பிப்ரவரியோ என எந்த வரியும் இல்லாத ஆகஸ்ட் மாதமாகும். ஆகவே வரியே இல்லாத மாதத்தில் வரியே போடாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வர்ணிக்கலாம்.ஏற்கனவே 5 லட்சத்து 77 […]

August 20, 2021 admin
அறிக்கைகளும், அரசியலும்! ரமேஷ் கிருஷ்ணன் பாபு! Exclusive

அறிக்கைகளும், அரசியலும்! ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

புதிய திமுக அரசின் இரண்டு அறிக்கைகள் குறித்தே பெரிதும் விவாதிக்கப்படுகிறது. தேர்தல் அறிக்கையையும் சேர்த்தால் மூன்று அறிக்கைகள். இந்த மூன்றிலும் காணப்படும் ஒரே நோக்கம் தமிழ் நாட்டை ₹70 இலட்சம் கோடி பொருளாதாரமாக ஆக்கிக் காட்ட வேண்டும் என்பதேயாகும். ஆனால் கடன் அச்சுறுத்துகிறது. தமிழ்நாடு தற்போது ₹20-25 இலட்சம் கோடி பொருளாதாரமாகவுள்ளது. அரசின் நிதிநிலை அறிக்கை ₹10-12 இலட்சம் கோடிகளுக்கு நிகராகவுள்ளது. இதில் கடன் ₹7 இலட்சம் கோடி அளவில், 2022 மார்ச் மாதத்தில் இருக்கும் என்பது […]

August 19, 2021 admin
நமது கோயில்களில் ஆகம விதிமுறைகள் – கொஞ்சம் பிளாஷ் பேக்! Exclusive

நமது கோயில்களில் ஆகம விதிமுறைகள் – கொஞ்சம் பிளாஷ் பேக்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பணி நியமன ஆணைக்குப் பிறகு எழும் விவாதங்களில் வழக்கம் போல ‘ஆகமம்’ என்கிற சொல் தற்போது மீண்டும் அடிபடுகிறது. உண்மையிலேயே நமது கோயில்களில் ஆகம விதிமுறைகள் நேர்மையாகப் பின்பற்றப்படுகிறதா? என்கிற கேள்வி எழுந்ததும் அதற்கு விடை காண நீதியரசர் மகராசன் குழுவின் ஆய்வறிக்கையை மீண்டும் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1982 இல் கோயில் வழக்கங்களில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப் பட்டது. நீதியரசர் […]

August 18, 2021 admin
ஆப்கானிஸ்தான்: இனி என்ன நடக்கக் கூடும்? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு! Exclusive

ஆப்கானிஸ்தான்: இனி என்ன நடக்கக் கூடும்? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

சமூக வலைத்தளங்களில் கடந்த இரு நாட்களாக அதிகம் பேரை கவர்ந்துள்ள விஷயம், ஆப்கானிஸ்தான். என்ன சேதி? பொதுவாகவே சமூக ஊடகவாசிகள் அறிவுப்பூர்வமான சேதிகளை விட உணர்ச்சிப்பூர்வமான சேதிகளில்தான் ஆர்வம் காட்டுவார்கள். ஆப்கன் தாலிபான்களின் வன்முறை ஹாலிவுட் படஙகளை ஜூஜூபி ஆக்கும் தன்மைக் கொண்டவை. விடுவார்களா? பொறி பறக்கிறது. இது ஒருபுறம் இருக்கட்டும். நாம் அறிவுபூர்வமாக இந்த விஷயத்தை அணுகுவோம். ஆப்கனில் 1978-79 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மன்னர் ஆட்சி கலைக்கப்பட்டு இராணுவப் புரட்சிகள் மூலம் நிலையற்ற அரசுகள் […]

August 16, 2021 admin
அதிகார வர்க்கத்தின் அறிவிப்பு பயமாய் இருக்கிறது : ஆனாலும் நம்பிக்கையும் உள்ளது! Exclusive

அதிகார வர்க்கத்தின் அறிவிப்பு பயமாய் இருக்கிறது : ஆனாலும் நம்பிக்கையும் உள்ளது!

பிரம்மாண்டமான தேசியக் கொடி ஒன்றைக் காற்றில் அசைத்தபடி ஆட்டோ ஒன்று கடந்து போகிறது, எங்கிருந்தோ ஜன்னல் வழியாக “ஜாரே ஜஹாங்சே அச்சா” பாடல் வீட்டுக்குள் நுழைகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் 75 ஆவது விடுதலைத் திருநாள் மெல்லிய முணுமுணுப்பாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் நீண்ட நாட்களாக வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள், ஒருவேளை பெருந்தொற்றுப் பரவல் இல்லாதிருந்தால் அவர்கள் பள்ளி அரங்குகளில் தங்கள் நண்பர்களோடு ஏதாவது செய்து கொண்டிருந்திருந்திருப்பார்கள், ஆட்டமும் பாட்டமுமாய் அவர்கள் 75 வருட […]

August 16, 2021 admin
உடனடி செய்திகள்