இபிகோ 124-A ராஜ துரோக ஷரத்தை சுப்ரீம் கோர்ட்டே நீக்க முன் வர வேண்டும்!

இபிகோ 124-A ராஜ துரோக ஷரத்தை சுப்ரீம் கோர்ட்டே நீக்க  முன் வர வேண்டும்!

மோடி தலைமையிலான பாஜக கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் என்ற தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் மட்டும் 10,898 பேர் மீது தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமான அளவுக்கு வருகின்ற குற்றபதிவு ராஜ துரோகம் தான். ஏதோ நாடே ராஜ துரோகத்தில் நிரம்பி இருப்பது போலவும் மற்றும் மக்கள் கிளர்ச்சி மனநிலையில் இருப்பதாகவும் அரசே தோற்றத்தை உருவாக்குகிறது.என்கிறார்கள் பத்திரிகையாளர்கள் 2018ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டே அரசை விமர்சிப்பது தேசதுரோகம் ஆகாது எனத் தெரிவித்தது. ஆனாலும் தனது போக்கை நிறுத்திக்கொள்ளாத மோடி அரசு, தேசதுரோக சட்டத்தின் மூலம் ஜனநாயகத்தைக் கொல்லும் செயலில் இறங்கியுள்ளதுதான் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தும், கடந்த 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில், 798 வழக்குகளில் 10,898 பேர் மீதுதேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒன்பது பேர் இளம் சிறார். மோடி பிரதமரான பிறகு 65 சதவிகித வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படி 124-A ராஜ துரோக பிரிவு பயன்படுத்தப்பட்டதைப் பற்றி சில இணையவாசிகள் ஆராய்த போது மோடி அரசின் சட்டங்களை எதிர்த்துக் கருத்து சொல்வது, போராட்டம் நடத்துவது என்று நிராயுதபாணியாக மக்கள் செய்வது எல்லாவற்றையும் 124-A ராஜ துரோக பிரிவு அல்லது ஊபா UAPA-வுக்குள் குற்றமாக்குகிறது. “போஸ்டர் வைத்திருத்தல் சமூக வலைத்தளங்களில் போடப்படும் பதிவுகள் முழக்கங்களை எழுப்புதல் மற்றும் தனிப்பட்ட செய்தி தொடர்புகள்” போன்ற ‘தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய சாதாரண முறைகளையும் கூட ‘ராஜ துரோகக்’ குற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது மோடி அரசு என்கிறார்கள்

குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் ஹத்ராஸ் பாலியல் வல்லுறவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஹத்ராஸில், ஒரு பத்திரிகையாளர் உட்பட 18 பேர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 25 சி.ஏ.ஏ வழக்குகளில் 3,700 பேர் மீது குற்றம்சாட்டியுள்ளது. ஜார்க்கண்டில் பதல்கடி போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பழங்குடியினர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டை பா.ஜ.க அரசு சுமத்தியது. பட்டிதார், ஜாட்கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில், நாட்டில் அதிக தேசத்துரோக வழக்குகளைக் கொண்ட மாநிலமாக பீகாரை மாறியுள்ளது. அதன்படி, பீகாரில் 168, உத்தரப்பிரதேசம்- 115, ஜார்க்கண்ட்- 62, கர்நாடகா- 50 தமிழ்நாட்டில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கூடங்குளம் போராட்டத்திற்கு எதிராக 80 சதவிகித வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. உ.பி.யில், 115 வழக்குகளில் 77 சதவிகிதம்ஆதித்யநாத் முதல்வரான பிறகு. இவற்றில் பெரும்பாலானவை ‘தேசியவாதம்’ தொடர்பானவை என தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலைப் பார்த்தாலே மேற்படி சட்டம் போகும் பாதையை தெரிந்து அதை உடனடியாக நீக்க சுப்ரீம் கோர்ட்டே முன் வர வேண்டும் என்பதே இந்திய பிரஜையின் எதிர்பார்ப்பு!

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!