32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2455 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 130 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 130)
கரையான்களால் அரிக்கப்பட்டு தள்ளாடும் நிலையில் ஊடகத்தினர்! எடிட்டர் ஏரியா

கரையான்களால் அரிக்கப்பட்டு தள்ளாடும் நிலையில் ஊடகத்தினர்!

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையினரின் இன்றைய போக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஒவ்வொரு ஊடகம், பத்திரிக்கை ஏதாவது ஒரு அரசியல் கட்சி பின்புலத்தை கொண்டுதான் செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் நன்கு அறிவார்கள். நடுநிலை ஊடகங்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம், ஒரு சில காலங்களில் ஊடகங்கள் சுதந்திரமாகவும், உண்மைகளை உரக்கச் சொல்லியும் எந்தவித அச்சுறுத்தலுக்கும் இடம் கொடுக்காமல் செயல்பட்டு வந்தது. அதனால் பல தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அதிகாரிகள் முதல் […]

March 25, 2021 admin
தமிழகத் தேர்தலில் வாக்குறுதிகளின் தாக்கம் என்ன? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு எடிட்டர் ஏரியா

தமிழகத் தேர்தலில் வாக்குறுதிகளின் தாக்கம் என்ன? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

தேர்தல் என்றாலே உடனடியாக நினைவிற்கு வருவது கட்சிகளின் வாக்குறுதிகள் என்றால் மிகையாகாது. ஏனெனில் மக்களின் பிரச்சினைகளைக் களைவதற்கு கட்சிகள் கொடுக்கும் உறுதிமொழியே வாக்குறுதிகள். பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கையை வளமாக்க அரசியல் கட்சிகள் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றன என்ற அணுகுமுறையை வெளிக்காட்டுவதே வாக்குறுதிகள். இத்தகைய வாக்குறுதிகளின் தொகுப்புதான் தேர்தல் அறிக்கை. மாறாக, தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்டவற்றை வாக்குறுதிகளாக வழங்குவதும் உண்டு. தமிழகம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து பலஅரசியல் தலைவர்களின் கொள்கைகளை கவனித்து வந்துள்ளது. விடுதலை அடைந்த 1947 […]

March 25, 2021 admin
சிலர் நடத்துகின்ற நாடகம்தான் இந்த கருத்துகணிப்புகள்! – வி.எம்.எஸ் Exclusive

சிலர் நடத்துகின்ற நாடகம்தான் இந்த கருத்துகணிப்புகள்! – வி.எம்.எஸ்

தமிழகத்தில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் கருத்துக் கணிப்புகளும் தேர்தல் முடிவுகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை -காரணம் ஒரு தொகுதியில் குறைந்தபட்சம் 5,000 பேரிடமாவது மாதிரி வாக்கெடுப்பை நடத்தி இருக்க வேண்டும். அப்படி நடத்தினாலும் அந்த முடிவுகளை பாரபட்சமில்லாமல் அந்த நிறுவனங்களின் நிர்வாகம் வெளியிட வேண்டும் .ஆனால் அவ்வாறு கருத்துக்கணிப்புகளை திருத்தம் செய்யாமல் வெளியிடுவதில்லை. ஏதோ ஒரு அணியினரை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவும், தாங்கள் திருப்தியாக வேண்டும் என்பதற்காகவும் , சிலர் நடத்துகின்ற நாடகம்தான் இந்த கருத்துகணிப்பு முடிவுகள் எல்லாம் […]

March 24, 2021 admin
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பழங்கால ஆணாதிக்க விதி! Exclusive

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பழங்கால ஆணாதிக்க விதி!

நானும் தோழர் கீதாவும்  மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தோம்.. நான் அதிசயமாகத் துப்பட்டா போட்டிருந்தேன்..தோழர் கீதா துப்பட்டா அணியவில்லை.. துப்பட்டா அணியாமல் உள்ளே செல்லக்கூடாது எனத் தடுத்து நிறுத்தினார்கள் அங்கிருந்த காவலர்கள்…! கீதா, “ஏன் துப்பட்டா போட்டா தான் அனுமதிப்போம்னு சொல்றீங்க?? நீங்க போலீஸ் தானே? கோவில்ல தானே வேலை செய்றீங்க? நீங்களும் தானே துப்பட்டா போடல, எங்களை மட்டும் ஏன் போடச் சொல்றீங்க?? ” என பெண் காவலர்களைப் பார்த்துக் கேட்டார்.. உடனே ஒரு ஆண் […]

March 23, 2021 admin
ஜனநாயக நிஜ நாயகன் எப்போது வருவாரோ? Running News

ஜனநாயக நிஜ நாயகன் எப்போது வருவாரோ?

தேர்தல் ஆணையராக வருவோர், தம்மை நியமனம் செய்தவர்களின் கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் காலங்களில் நடப்பதை உச்சநீதிமன்றம் சில பல சூழல்களில் கடும் கண்டனத்துடன் எச்சரிக்கையே செய்துள்ளது., அத்துடன் புதிய ஜனநாயகப் பாதையைச் செப்பனிட்டுக் கொண்டு வரும் ஆணையைப் பிறப்பித்துள்ளது.ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தவென்று தனித்தனியே மாநிலத் தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களை நியமிப்போர் மாநில அளவில் ஆளும் கட்சியினராக இருப்போர் தான். முதல் அமைச்சராகப் பார்த்து யாரை வேண்டுமானாலும் இந்த பதவிக்கு உரியவரை நியமனம் […]

March 20, 2021 admin
தேர்தல்தான் வருது! தேர்தல் சீர்திருத்தம் எப்ப வரும்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

தேர்தல்தான் வருது! தேர்தல் சீர்திருத்தம் எப்ப வரும்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இந்தியாவில் தேர்தல்களும், ரயில் விபத்துக்களும் அடிக்கடி நடைபெறும் வழக்கம் என்று மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி சொல்வார்.இப்படி அடிக்கடி தேர்தல் நடைபெறுவதைத் தடுக்க பிரதமர் மோடி கொண்டு வரும் சீர்திருத்தம் ஒரே நாடு; ஒரே தேர்தல்.அதாவது மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவை ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் எனும் புதியமுறை. இந்தியாவில் 1960கள் வரை தேர்தல்கள் இப்படி இணைந்தே நடந்தன. தமிழகத்திலும் பலமுறை நடந்துள்ளது. கடைசியாக 1996 ஆம் ஆண்டில் ஒரே நாளில் இரண்டு தேர்தல்களும் […]

March 19, 2021 admin
வேட்பாளர் சொத்து விவரங்களை வருமான வரிக் காரங்க கண்டுக்கவே மாட்டானுஹளா! Slider

வேட்பாளர் சொத்து விவரங்களை வருமான வரிக் காரங்க கண்டுக்கவே மாட்டானுஹளா!

வருமான வரித்துறை மாதிரியான ஒரு ஜோக்கரை பார்க்கவே முடியாது..இப்போது தேர்தல் நேரத்தில் தமிழகத்தின் தங்க நிகர் தலைவர்கள் பிரமுகர்கள் தங்களது சொத்து விவரங்களை வேட்பு மனுக்களோடு தெரிவித்துள்ளனர்.. அவற்றையெல்லாம் ஆழமாக படிக்க படிக்க அவ்வளவு காமெடியாக இருக்கும்..! அந்த காலத்து அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா போன்ற சிறுவர் கதைப் புத்தகங்கள் இல்லாத குறையை இந்த பிரமாண பத்திரங்கள் நிச்சயம் போக்கும்.. ஒருத்தர் சில கோடியில் கார் வாங்கி இருப்பார். ஆனால் அவருக்கு ஆண்டு வருமானம் சில ஆயிரங்கள் […]

March 18, 2021 admin
தேர்தல் வாக்குறுதிகள்: வாக்குகள் உறுதியா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு Slider

தேர்தல் வாக்குறுதிகள்: வாக்குகள் உறுதியா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

நடைபெறவுள்ள 16 ஆவது பேரவைத் தேர்தலுக்கான ‘தேர்தல் அறிக்கை’களை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. தற்போது முன்னணியிலுள்ள மூன்று முக்கியக் கட்சிகளான ஆளும் அ இ அதிமுக, திமுக அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் (பகுதியாக) ஆகியவை தங்களது அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. ஆளும் அ இ அ திமுகவைப் பொறுத்தவரை கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தப் பிறகு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளோடு புதிதாக சிலவற்றைச் சேர்த்துச் சொல்ல வேண்டியக் கட்டாயம் உள்ளது. அதன்படி, விலையில்லா சலவை […]

March 15, 2021 admin
மனநோயர்களாக(வும்) இருக்கும் வாக்காளர் குரலுக்கு தேர்தல் அறிக்கை பதில் சொல்லுமா? Slider

மனநோயர்களாக(வும்) இருக்கும் வாக்காளர் குரலுக்கு தேர்தல் அறிக்கை பதில் சொல்லுமா?

மனநல மருத்துவத் துறையை தனியாருக்கு ( என் ஜி ஒக்கு ) ஒப்படைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனவரி மாதம் போட்டுப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள ECRC emergency care and recovery centre மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் சிகிச்சைக்கான மையங்களை தனியாரிடம் ஒப்படைத்துள்ளனர். கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் பிரபல அறிவியல் சஞ்சிகையான லான்செட்டின் அறிக்கையின்படி, இந்தியாவில் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள பத்தில் ஒருவருக்கு மட்டுமே அதற்குரிய மருத்துவ உதவி […]

March 13, 2021 admin
அரசியல் விவாதத்தில் ஆர்வமா? அப்ப உங்களுக்குத்தான்..! Slider

அரசியல் விவாதத்தில் ஆர்வமா? அப்ப உங்களுக்குத்தான்..!

அரசியல் ஈர்ப்பு என்பது ஒரு வினோதமான, முற்றிலும் ஆச்சரியமான ஒரு உணர்வு.. சமூகத்தில் தான் சாதிக்க நினைப்பதை எந்த ஒரு தலைவன் முன்னெடுத்துச் செல்கிறானோ அவனை நோக்கி செல்வது. தலைமை ஏற்று வழி நடப்பது.ஆனால் தன்னுடைய எதிர்கால சிந்தனைகள் அனைத்தையும் அவனுக்கே அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பதாகாது. அரசியல் எதிரிகளின் குறைபாடுகளை எந்த அளவுக்கு விமர்சிக்கிறோமோ அதே அளவுக்கு, தான் நம்பும் தலைமை மக்களுக்கான பொது நலன் தாண்டி சொந்த நலனுக்காக விலகிச் செல்கிறதா என்பதையும் அடிக்கடி […]

March 12, 2021 admin
உடனடி செய்திகள்