மனநோயர்களாக(வும்) இருக்கும் வாக்காளர் குரலுக்கு தேர்தல் அறிக்கை பதில் சொல்லுமா?

மனநோயர்களாக(வும்) இருக்கும் வாக்காளர் குரலுக்கு தேர்தல் அறிக்கை பதில் சொல்லுமா?

னநல மருத்துவத் துறையை தனியாருக்கு ( என் ஜி ஒக்கு ) ஒப்படைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனவரி மாதம் போட்டுப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள ECRC emergency care and recovery centre மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் சிகிச்சைக்கான மையங்களை தனியாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் பிரபல அறிவியல் சஞ்சிகையான லான்செட்டின் அறிக்கையின்படி, இந்தியாவில் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள பத்தில் ஒருவருக்கு மட்டுமே அதற்குரிய மருத்துவ உதவி கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்து வருவது இன்னும் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. அடுத்த சில ஆண்டுளில், உலகில் உளவியல் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று எச்சரிக்கை செய்திருந்தது

இந்தியா முழுவதும் மிகப் பெரிய அளவில் மாறிவரும் சூழ்நிலை கவலையளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் நகரங்களும், நவீன வசதிகளும் நாளுக்குநாள் விரிவடைந்து வருகின்றன. கிராமங்களை சேர்ந்த மக்கள் அதிகள வில் புதிய நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இவையனைத்தும் மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதே சூழ்நிலையில், மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருகின்றன.”குடும்பங்களின் பிளவு, தனிமை, தொழில் நுட்பங்களின் வரவு ஆகியவை மேற்கத்திய கலாசாரத்தை நோக்கி தள்ளுவது மக்களிடையே மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மனஅழுத்தம் குழந்தைகளை கூட விட்டுவைக்கவில்லை. இந்தியாவிலுள்ள 1.2 சதவீத குழந்தைகள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சரியான மருத்துவ உதவி கிடைக்காத பட்சத்தில், அது உடல் சார்ந்த மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனையாக உருமாறுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரித்து இருந்தது.

இச்சூழலில்தான் பொது சுகாதாரத்துறையில் மனநலத்துறையில் தான் நேரடியான தனியார் மயமாக்கலை முதன் முதலில் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். அதை அடுத்து வாக்காளனாக மட்டும் அல்ல மனநோயர் சார்பிலும் மனநோயர் உடனாளர் சார்பிலும் தேர்தலில் போட்டி யிடும் எல்லா கட்சிகளுக்கும் அந்த கட்சிகளில் போட்டியிடும் மருத்துவர்களுக்கும் ஒரு சில கேள்விகள் ?

பொது சுகாதாரத்துறை தனியார்மயமாக்கப்படுவது குறித்து உங்கள் கட்சியின் நிலைபாடென்ன?

நீங்கள் ஆட்சிக்கட்டிலில் ஏறினால் என் ஜி ஒவிடம் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் திரும்பப் பெறப்படுமா ?

என்னை பொறுத்தவரை இது பேசு பொருளாக்கப்பட வேண்டும் அரசு மனநலக்காப்பகத்தில் உள்ள 800க்கும் குறையாத நோயர்களின் வாக்குகள் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான மனநோயர்கள் வாக்களிக்கப் போகும் முதல் சட்டமன்ற தேர்தல் இது.

அவர்களின் குரல் தேர்தல் ஆரவாரத்தில் ஒலிக்காமல் ஒன்றுமில்லாமல் ஆக்கப்படலாம்….!

அரவிந்தன் சிவக்குமார்

error: Content is protected !!