மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பழங்கால ஆணாதிக்க விதி!
நானும் தோழர் கீதாவும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தோம்.. நான் அதிசயமாகத் துப்பட்டா போட்டிருந்தேன்..தோழர் கீதா துப்பட்டா அணியவில்லை.. துப்பட்டா அணியாமல் உள்ளே செல்லக்கூடாது எனத் தடுத்து நிறுத்தினார்கள் அங்கிருந்த காவலர்கள்…!
கீதா, “ஏன் துப்பட்டா போட்டா தான் அனுமதிப்போம்னு சொல்றீங்க?? நீங்க போலீஸ் தானே? கோவில்ல தானே வேலை செய்றீங்க? நீங்களும் தானே துப்பட்டா போடல, எங்களை மட்டும் ஏன் போடச் சொல்றீங்க?? ” என பெண் காவலர்களைப் பார்த்துக் கேட்டார்..
உடனே ஒரு ஆண் காவலர் வந்து கோபத்துடன் “இது யூனிபார்ம்; இதை மதிக்காம இப்படில்லாம் பேசக்கூடாது” என்றார்…
நான் : “யாரும் யூனிபார்ம மதிக்காம பேசல சார்… எங்கள ஏன் உள்ள விட மாட்றீங்கனு தான் கேட்டோம்.. துப்பட்டா இல்லாம உள்ள விடக்கூடாதுன்னு எந்தச் சட்டம் சொல்லுது? அல்லது உங்க கிட்ட யாரு சொன்னா?? சொல்லுங்க நாங்க High Court ல Challenge பண்ணிக்றோம்” என்றேன்..
உடனே அவர்… “இங்க உள்ளே விட மாட்டோம். அதான் ரூல்ஸ் ..எங்க மேல் அதிகாரி கிட்ட பேசுங்க னு “சொல்லி S.I கிட்ட கூட்டிட்டுப் போனாரு…
“மேடம் நாங்க ரெண்டு பேரும் Advocates… துப்பட்டா இல்லாம உள்ள போகக் கூடாதுனு எந்தச் சட்டம் சொல்லுது சொல்லுங்க??”
“இந்தக் கோவில் அதிகாரி எங்களுக்கு அப்படித்தான் சொல்லி இருக்காரு மேடம்..”
“அப்ப அந்த Order ஐ காமிங்க.. இல்லே துப்பட்டா போடாம உள்ளே விட மாட்டோம்னு Written ல எழுதிக் கொடுங்க..நாங்க வழக்குத் தொடுத்துக்கிறோம்”
உடனே “உங்க நல்லதுக்குத்தான் மேடம் சொல்றோம்” னு சொன்னாங்க..
“நாங்க ரெண்டு பேருமே வளந்ர்தவங்க, அதுவும் இல்லாம வழக்கறிஞர்கள், எங்களுக்கு நல்லது எதுனு யோசிக்கும் பக்குவம் இல்லாதவங்க னு நினைக்கிறீங்களா?”
“இல்லை மேடம்…எல்லாருக்கும் இதைத்தான் சொல்றோம்.. இதைத்தான் எல்லாரும் Follow பண்றாங்க “
“எல்லாரும் ஒரு விஷயத்தைப் பற்றி கேள்வி எதுவும் கேட்காம Follow பண்றாங்கன்றதுக்காக நாங்களும் அதையே பண்ணனும்னு அவசியம் இல்லயே மேடம்”…
“இல்ல இதுக்கு மேல பெரிய அதிகாரிங்க யார வேணுமானாலும் பாக்கத் தயாரா இருக்கோம்..ஆனா துப்பட்டா போட மாட்டோம்” என்றோம்..
“சரிங்க …நீங்க உள்ள போங்க” என சுமார் 20 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு உள்ளே அனுப்பச் சம்மதித்தார்கள்.. துப்பட்டா போட்டிருந்த நானும் துப்பட்டாவைக் கழற்றி மடித்துக் கையில் வைத்துக்கொண்டு… நாங்கள் இருவருமாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பழங்கால ஆணாதிக்க விதியை உடைத்து விட்டுத் துப்பட்டா இல்லாமல் கோவிலுக்குள் நுழைந்தோம்…
நாம் கேள்வி கேட்காமல், போராடாமல் இங்கே எதுவுமே மாறாது.. !!