32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2455 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 128 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 128)
கந்து வட்டிக் கொடுமை : கார்ட்டூனிஸ்ட் பாலா மீது போடப்பட்ட வழக்கு ரத்து! Exclusive

கந்து வட்டிக் கொடுமை : கார்ட்டூனிஸ்ட் பாலா மீது போடப்பட்ட வழக்கு ரத்து!

கந்து வட்டி கொடுமை காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நான்குபேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆட்சியாளர்களை விமர்சித்து கார்ட்டூன் வரைந்ததற்காக என் மீது போடப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்திருக்கிறது.. ஆட்சியாளர்களால் அடக்குமுறைக்குள்ளாகும் கருத்து சுதந்திரத்தை நேசிக்க கூடிய ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையளிக்கக் கூடிய தீர்ப்பை அளித்திருக்கிறது நீதிமன்றம். மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் இளங்கோவன் அவர்களுக்கும், நெல்லை மாவட்ட நீதியரசர் ராமதாஸ் அவர்களுக்கும் நன்றிகள். அரசுக்கு எதிராக கார்ட்டூன் வரைந்த […]

April 20, 2021 admin
திறந்த புத்தகத் தேர்வு முறை சரிதான் : ஆனால்..!? Exclusive

திறந்த புத்தகத் தேர்வு முறை சரிதான் : ஆனால்..!?

புத்தகங்களைப் பார்த்து எழுதலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறதாம். வழக்கம்போல ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பொங்கல்கள் சமைக்கப்படுகின்றன. நான் என்னளவில் திறந்த புத்தகத் தேர்வுக்கு ஆதரவாளன். என் வேலை தொழில்நுட்பப் பொறியாளர்களுக்கு இயந்திரங்களின் இயங்குமுறையைக் கற்பிப்பது என்பதால், என் வகுப்புகளில் முதலில் சொல்வது – புத்தகங்களைப் பார்க்காமல் வேலையில் இறங்காதீர்கள், நீங்கள் மனப்பாடம் செய்த நாளில் இருந்து எவ்வளவோ மாறியிருக்கலாம்.அப்படிப்பட்ட நபர்களுக்குச் சொல்லித்தருவதால், தேர்வையும் திறந்த புத்தகத் தேர்வுமுறையாகத்தான் அமைப்பேன். ஞாபகசக்தியை மதிப்பிடுவது நோக்கமல்ல, சரியான விடையை விரைவாகத் […]

April 19, 2021 admin
விவேக் மாரடைப்புக்கும் தடுப்பு மருந்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? Exclusive

விவேக் மாரடைப்புக்கும் தடுப்பு மருந்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

ஒருவருக்கு தடுப்பு மருந்து ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அதன் விளைவு அரை மணி நேரத்திற்குள்ளேயே தெரிந்து போய் விடும். அதற்குத்தான் ஊசி போட்டவுடன் ஒரு மணி நேரம் அங்கேயே உட்கார வைத்து பார்த்து அப்புறம் அனுப்புகிறார்கள். 12 மணி நேரம் கழித்து வரவேண்டும் என்றால் காய்ச்சல், அசதி போன்றவைதான் வரும். நடிகர் விவேக்குக்கு வந்த மாரடைப்புக்கும் தடுப்பு மருந்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பது இப்போதைக்கு யாருக்குமே தெரியாது. அப்படி ஏதாவது அதீதமான தொடர்பு இருக்கிறது என்றே […]

April 17, 2021 admin
கும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? Exclusive

கும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?

உத்தரகாண்ட் மாநிலத்தின் அரித்துவாரில், கும்பமேளா நிகழ்வையொட்டி, ‘புனிதக் குளியல்’ எனப்படும் நிகழ்வு அமாவாசை நாளான 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற்றது . கொரோனா பரவல் அச்சமூட்டி வரும் நிலையில்தான் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தக் கும்பமேளா கூடலில், மொத்தம் 3 ‘புனிதக் குளியல் நிகழ்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் ‘புனிதக் குளியல்’ நிகழ்வு, கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. அதனையடுத்து, இரண்டாவது நிகழ்வு இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் […]

April 13, 2021 admin
வெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி! Exclusive

வெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி!

மீனல் ஹக் எட்டாங் கிளாஸ் படிக்கிறான். 14 வயசு. “பிரண்ஸ்லாம் ரோட்ல கிரிக்கெட் ஆடிட்டு இருந்தோம். அந்த வழியா வந்த மிலிட்டரி கலர் லாரி எங்க பக்கத்ல நின்னுச்சு. திபுதிபுனு அதுல இருந்து ஜவான்ஸ் குதிச்சாங்க. எலக்சன் பூத் பக்கத்ல கிரிக்கெட் ஆட்றது தப்புனு எங்கள புடிச்சுட்டு போக வந்துட்டாங்கன்னு நெனச்சோம். வாங்கடா போய்ருவோம்னு சொல்லிகிட்டே ஓட ஆரமிச்சோம். அவங்க துரத்திட்டு வந்தாங்க. ஒருத்தர் என்னய புடிச்சிட்டாரு. இந்தில என்னமோ கேட்டாரு. எனக்கு இந்தி தெரியாது. தெரியாம […]

April 12, 2021 admin
ஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா? Exclusive

ஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா?

ஜக்கி வாசுதேவ் நம் நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை விடுவிப்பதற்காக ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளார். அதற்கு ‘கோயில் அடிமை நிறுத்து’ என்ற புதிய நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. இந்து சமயத் தலைவர்கள் பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்துக் கோயில்கள் இந்துக்களின் கட்டுப்பாட்டில் இல்லையா என்ற ஒரு தொனி இவ்வியக்கத்தால் எழுப்பப்பட்டுள்ளது.கோயில்கள் இந்து சமய அறநிலைய வாரியத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, அதன் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாலேயே இந்துக்களுடைய மதவுரிமை பறிக்கப்படுவதாகப் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. […]

April 11, 2021 admin
எய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை! Exclusive

எய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன் டெல்லி எய்ம்ஸ்சின் MD கவுன்சலிங்கிற்கு தேர்வாகிச் சென்ற எங்கள் குடும்பத்துத் தம்பிக்கு, அங்கு அவர் முறை வந்தபோது ஃபாரன்சிக் மெடிசின் மட்டுமே இருந்ததாலும், ஏற்கனவே எய்ம்ஸில் தென்னிந்திய மாணவர்கள் வட இந்தியப் பேராசிரியர்களால் தொடர்ந்து 72 மணி நேரங்கள் வேலை செய்யப் பணிக்கப்படும், வேற்றுமையாக நடத்தப்படும் கதைகளெல்லாம் கேள்விப்பட்டும் வேண்டாமென்று வந்து விட்டார். தற்போது இங்கு இளநிலை அரசு மருத்துவராகப் பணியாற்றி வரும் அவர், அதன் பின்னும் ஒவ்வொரு வருடமும் மருத்துவ மேற்படிப்புக்கான […]

April 10, 2021 admin
மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே!? Exclusive

மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே!?

எல்லா கருத்துக் கணிப்பு சொல்றமாதிரி இவருக்கு தோல்வி அடைந்தாலும் கவலை இல்லை… இருந்தவரைக்கும் ஒவ்வொரு நாளும் ஜெய்ச்சார்டா இந்த மனுசன்….ஒவ்வொரு நாளும் என்பதை விட ஒவ்வொரு நொடியும் முதலமைச்சராக ஜெய்த்து கொண்டே இருந்தார். எங்கேயோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து பகுதி நேர அரசியலில் சேர்ந்து..கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அந்த ஐந்து பேர் அணியில் அம்மா jjவின் குட் புக்கில் இடம் பிடித்து.. அந்த ஐந்தில் பெஸ்ட்னு பெயர் வாங்கி… ஏற்கனவே முதல்வரா இருந்தவரை வெற்றி கொண்டு… விழுந்தும் […]

April 8, 2021 admin
தமிழகத் தேர்தல்: இது 3.75 கோடியினரின் தீர்ப்போ? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு Election Special

தமிழகத் தேர்தல்: இது 3.75 கோடியினரின் தீர்ப்போ? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

தமிழகத்தின் 16 ஆவது பேரவைக்கானப் பொதுத்தேர்தல் வாக்களிப்பு தொடங்கி விட்ட்து. வாக்காளர்களில் பெரும்பாலோர் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இறுதி முடிவெடுத்தி ருப்பார்கள் எனக் கருதலாம். வாக்குப்பதிவு நாளான இன்று 6 ஆம் தேதியன்று காலை வரை நிலவரம் மாறவும் வாய்ப்பிருந்தது. ஏனெனில் அலையற்றத் தேர்தலில் கடைசி தருணத்தில் ஏதேனும் ஒரு அலை வருமோ என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அச்சூழ்நிலையில் தமிழக வாக்காளர்கள் எதை வைத்து வாக்களிப்பார்கள் என்பதை விட யாருக்கு வாக்களிப்பார்கள் என்று கணிப்பதற்கே அதிக […]

April 6, 2021 admin
எம்ஜிஆர்-கலைஞர் பரப்புரை _! Exclusive

எம்ஜிஆர்-கலைஞர் பரப்புரை _!

எம் ஜி ஆரும் கலைஞரும் அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாகக் கருத்து மோதல்கள் நடத்தி வந்த காலம் அது. தினமலர் நாளிதழில் நிருபராக நான் அந்த காலத்தில் பரபரப்பான பணியில் இருந்தேன். பொதுத் தேர்தல்களின் போது இவ்விரு ஆளுமைகளின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் செய்தி எழுதுகின்ற பணி அடியேனுக்குக் கிடைத்து வந்தது. ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாள் நிறைவு நிகழ்ச்சியைச் செய்தியாக்கும் பணியும் ஒவ்வொரு முறையும் எனக்குத்தான் கிடைத்து வந்தது. […]

April 5, 2021 admin
உடனடி செய்திகள்