வேட்பாளர் சொத்து விவரங்களை வருமான வரிக் காரங்க கண்டுக்கவே மாட்டானுஹளா!

வேட்பாளர் சொத்து விவரங்களை வருமான வரிக் காரங்க கண்டுக்கவே மாட்டானுஹளா!

வருமான வரித்துறை மாதிரியான ஒரு ஜோக்கரை பார்க்கவே முடியாது..இப்போது தேர்தல் நேரத்தில் தமிழகத்தின் தங்க நிகர் தலைவர்கள் பிரமுகர்கள் தங்களது சொத்து விவரங்களை வேட்பு மனுக்களோடு தெரிவித்துள்ளனர்.. அவற்றையெல்லாம் ஆழமாக படிக்க படிக்க அவ்வளவு காமெடியாக இருக்கும்..!

அந்த காலத்து அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா போன்ற சிறுவர் கதைப் புத்தகங்கள் இல்லாத குறையை இந்த பிரமாண பத்திரங்கள் நிச்சயம் போக்கும்.. ஒருத்தர் சில கோடியில் கார் வாங்கி இருப்பார். ஆனால் அவருக்கு ஆண்டு வருமானம் சில ஆயிரங்கள் மட்டுமே இருக்கும். அந்தக் காரை கடன் மூலமும் வாங்கி இருக்க மாட்டார். னத்திலிருந்து அந்த கார் பொத்தென்று விழுந்து இருக்கும்..

இன்னொரு தலைவரின் தினசரி வருமானம் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும். ஆனால் குளுகுளு மலைப்பிரதேசத்தில் ஏக்கர் கணக்கில் எஸ்டேட் வாங்கி இருப்பார்.

பல பேருக்கு சில லட்ச ரூபாய் மதிப்பிலான அளவிற்குக்கூட வீடு நிலம் சொத்து என எதுவுமே அவர்கள் பெயரில் இருக்காது .. காதில் கேட்டாலே செருப்பை கழட்டி அடிக்க தோன்றும் விஷயம் என்னவென்றால், எங்கு சென்றாலும் பெரும் பட்டாளத்துடன் திரியும் இவர்களின் தினசரி செலவே குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயாவது இருக்கும்..

இப்படிப்பட்ட பிறவிகளின் சொத்து மற்றும் வருமான வரி விவரங்களை வைத்து வருமான வரித்துறையினர் பிரித்து மேயலாம்.. இதையெல்லாம் எப்படிடா வாங்கினீர்கள் என்று வழக்குப் போட்டு சாகடிக்கலாம். இவர்களை விட கேவலமான பிறவிகள் ஆன அவர்கள், இதனை செய்யவே மாட்டார்கள்.

ஆனால் மாத சம்பளக்காரர்கள், சிறு வியாபாரிகள் போன்றவர்களை பிடித்து இதை ஏன் ஃபைல் செய்யவில்லை அதை ஏன் ஃபைல் செய்யவில்லை என்று சங்கைப் பிடிப்பார்கள்..!

ஏழுமலை வெங்கடேசன்

error: Content is protected !!