32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 124 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 124)
கொரோனா தொற்று பாதிப்பு குறைய தரணி ரக்ஷ மகா யாகம்!- சூரியன் நம்பூதிரி சுவாமிகள்! Exclusive

கொரோனா தொற்று பாதிப்பு குறைய தரணி ரக்ஷ மகா யாகம்!- சூரியன் நம்பூதிரி சுவாமிகள்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் குறைக்க வேதங்களில் ‘மருந்தும், மந்திரமும்’ பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் இடம் பெற்றிருக்கிறது. தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பைக் குறைக்க தடுப்பூசிகள் செயலாற்றுவது போல், தரணி ரக்ஷ மஹா யாகத்தைச் செய்தால், இதன் பாதிப்பிலிருந்து உலக மக்கள் விரைவில் விடுதலை பெறலாம். ஆனால் இதனை நடத்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களும், பாரத பிரதமரும், ஹிந்து அமைப்புகளும் முன்வரவில்லை என சூரியன் நம்பூதிரி சுவாமிகள் குற்றம் சாட்டி இருக்கிறார். […]

April 11, 2021 admin
சனி, ஞாயிறு & லீவு நாட்களில் பீச் பக்கம் உலா வரத் தடை! Exclusive

சனி, ஞாயிறு & லீவு நாட்களில் பீச் பக்கம் உலா வரத் தடை!

தமிழகமெங்கும் எகிறிக் கொண்டே போகும் கொரோனா தொற்று பரவலை தடுக்க இன்று முதல் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தமிழ்நாடு அரசு புதிய தளர்வுகளையும், கூடவே மேலும் சில கட்டுப்பாடுகளையும் மீண்டும் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களில் 11-4-2021 முதல் செல்ல தடை விதிக்கப்படுகிறது எனவும் வழிப்பாட்டு தலங்கள் அதிகப்பட்சம் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது எனவும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு […]

April 10, 2021 admin
இபாஸ் எப்படி விண்ணப்பிப்பது என்று கேட்போருக்கான முழுமையான தகவலிது! Exclusive

இபாஸ் எப்படி விண்ணப்பிப்பது என்று கேட்போருக்கான முழுமையான தகவலிது!

கன்னாபின்னாவென பரவி வரும் கொரோனா அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகி உள்ளது. மனம் நொந்து போய் புலம்ப வழி செய்யும் வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். திருவிழா உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க தடை திக்கப்பட்டு உள்ளது.வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருவோர் இபாஸ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் […]

April 10, 2021 admin
கொரோனா தொற்று பரவ 80 லட்சம் வழிகள்!- சென்னை மாநகராட்சி ஆணையர் Exclusive

கொரோனா தொற்று பரவ 80 லட்சம் வழிகள்!- சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையின் 15 மண்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தவாறு உள்ள நிலையில், உங்கள் வீடு தேடி வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் கொரோனா தொற்று குறித்து வெளிப்படையாக பேசுங்கள் என்று பொது மக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாற்றியமைக்கப்பட்ட கள அலுவலர்கள் குழுக்களுடனான ஆலோசனை கூட்டம் கமிஷனர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. அப்போது அவர், “பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் வரை 200-க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு […]

April 10, 2021 admin
மாஸ்க் போடலைன்னா 200ரூ ஃபைன் : எச்சில் துப்பினா ரூ500 அபராதம் – சென்னை கார்ப்பரேசன் அதிரடி! Exclusive

மாஸ்க் போடலைன்னா 200ரூ ஃபைன் : எச்சில் துப்பினா ரூ500 அபராதம் – சென்னை கார்ப்பரேசன் அதிரடி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள், நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி  கொரோனா விதிகளை மீறுவோரிடம் இருந்து அபராதம் விதிக்க மண்டலம் வாரியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மாஸ்க்கை முழுமையாக அணியாவிட்டால் ரூ.200, பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும், கொரோனா குவாரன்டைன் விதியை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி […]

April 9, 2021 admin
முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது! Exclusive

முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது!

தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனை யில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், மறுபக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் குணமடைந்து வீடு திரும்புவோர் […]

April 8, 2021 admin
கொரனா பரவல் : கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு! Exclusive

கொரனா பரவல் : கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு!

நாடு முழுக்க கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே போவதை அடுத்து கோயில் திருவிழா, பேருந்துகளில் நின்று பயணிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு E-Pass கட்டாயம் என்றும் சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை கடைகளுக்கு தடை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு கூடிக் கொண்டே போகிறது. இப்போதைக்கு சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் வீடு வீடாக இன்று முதல் […]

April 8, 2021 admin
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று! Exclusive

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று!

திமுக பொதுச் செயலாளரும், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். திமுக மகளிரணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் துரைமுருகன் ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். […]

April 8, 2021 admin
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்.பி கனிமொழி வீடு திரும்பினார்! Exclusive

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்.பி கனிமொழி வீடு திரும்பினார்!

கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்.பி கனிமொழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரின் உடல் நிலை கொஞ்சம் தேறிய நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் வீடு திரும்பியுள்ளார். கடந்த 20 நாட்களுக்கு மேலாகத் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி கனிமொழிக்கு, ஏப்ரல் 3ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 ஆம் தேதி அவர் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட […]

April 7, 2021 admin
கொஞ்சம் கால அவகாசம் கொடுங்க..!- தேர்தல் ஆணையத்திடம்  உதயநிதி ஸ்டாலின் Election Special

கொஞ்சம் கால அவகாசம் கொடுங்க..!- தேர்தல் ஆணையத்திடம் உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் 31-ம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது “பிரதமர் மோடி, நான் குறுக்குவழியில் வந்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார். இதை யார் சொல்கிறார் என்று பாருங்கள்… எத்தனை முக்கியத் தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, குஜராத்தின் முதல்வரானார் மோடி என்பது உங்களுக்குத் தெரியுமா? என்னிடம் பட்டியலே இருக்கிறது” என்றவர், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட சில தலைவர்களின் பெயரைப் பட்டியலிட்டார் மேலும் பேசிய அவர், “அருண் ஜெட்லி, சுஷ்மா […]

April 7, 2021 admin
உடனடி செய்திகள்