சனி, ஞாயிறு & லீவு நாட்களில் பீச் பக்கம் உலா வரத் தடை!

சனி, ஞாயிறு & லீவு நாட்களில் பீச் பக்கம் உலா வரத் தடை!

மிழகமெங்கும் எகிறிக் கொண்டே போகும் கொரோனா தொற்று பரவலை தடுக்க இன்று முதல் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தமிழ்நாடு அரசு புதிய தளர்வுகளையும், கூடவே மேலும் சில கட்டுப்பாடுகளையும் மீண்டும் அறிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களில் 11-4-2021 முதல் செல்ல தடை விதிக்கப்படுகிறது எனவும் வழிப்பாட்டு தலங்கள் அதிகப்பட்சம் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது எனவும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இன்று முதல் (10.4.2021) பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகளும்/ தளர்வுகளும், நாளை முதல் (11.4.2021) நடைமுறைப் படுத்தப்படும்.

அ) புதிய கட்டுப்பாடுகள்

i) சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவது 11.4.2021 முதல் தடைசெய்யப்படுகிறது.

ஆ) புதிய தளர்வுகள்

i) அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய, இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு, தற்போது, சம்பந்தப்பட்ட வழிபாட்டுத்தலங்களுடைய வழக்கமான நேரம் வரையிலேயோ அல்லது அதிகபட்சம் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டிற்காக, அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது.

இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

ii) இந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள், முதல் 7 நாட்களுக்கு மட்டும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி, அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றியும், அனைத்து காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு, தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!