மாஸ்க் போடலைன்னா 200ரூ ஃபைன் : எச்சில் துப்பினா ரூ500 அபராதம் – சென்னை கார்ப்பரேசன் அதிரடி!

மாஸ்க் போடலைன்னா 200ரூ ஃபைன் : எச்சில் துப்பினா ரூ500 அபராதம் – சென்னை கார்ப்பரேசன் அதிரடி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள், நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி  கொரோனா விதிகளை மீறுவோரிடம் இருந்து அபராதம் விதிக்க மண்டலம் வாரியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மாஸ்க்கை முழுமையாக அணியாவிட்டால் ரூ.200, பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும், கொரோனா குவாரன்டைன் விதியை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் பின்வரும் அட்டவணையின் படி அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

*மாஸ்க் முழுமையாக அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

*பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம்

*கொரோனா குவாரன்டைன் விதியை மீறினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.

*பொது இடங்களில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காவிடில் ரூ. 500 அபராதம்

*வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிடில் ரூ. 5000 அபராதம் வசூலிக்கப்படும்.

*கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ. 5000 அபராதம்

*2 முறைக்கு மேல் கொரோனா விதிகளை மீறினால் கடை, நிறுவனம், அலுவலகத்திற்கு சீல் வைக்கப்படும்.

*சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் இருந்து அபராதம் வசூலிக்க மண்டலம் வாரியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

*ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தினமும் ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில்,சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!