திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று!

திமுக பொதுச் செயலாளரும், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். திமுக மகளிரணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் துரைமுருகன் ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு திமுக பொதுச்செயலளார் துரைமுருகன் தீவிர கட்சி பணயில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் லேசான கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து அவர் நேற்று மருத்துவமனையில் பரிசோதனை எடுத்துக் கொண்டார். பரிசோதனையின் முடிவில் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். துரை முருகன் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த தகவலை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலாயம் உறுதிப்படுத்தி உள்ளது.

இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை துரைமுருகன் நேற்று சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது தனக்கு உடல் சோர்வாகவும், அயர்வாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் திமுக தலைவர் ஸ்டாலினும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லையென்று பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.ஆனாலும் துரைமுருகன் உடன் தொடர்பில் இருந்த மற்ற கட்சி நிர்வாகிகளும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!