32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 123 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 123)
அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி!- தமிழக அரசு அறிவிப்பு. Exclusive

அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி!- தமிழக அரசு அறிவிப்பு.

வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில், தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு தற்போது அனுமதித்துள்ளது. எனவே, முக்கிய தொழிற்சாலைகள், […]

April 22, 2021 admin
தேர்தல் ஆணையம் சரி இல்லை!- கமல்ஹாசன் நேரடிப் புகார்! Exclusive

தேர்தல் ஆணையம் சரி இல்லை!- கமல்ஹாசன் நேரடிப் புகார்!

”தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழந்து விடுவதும், மர்ம கண்டெய்னர்கள் நள்ளிரவில் வளாகங்களுக்குள் நுழைவதும், திடீரென வைஃபை வசதிகள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உருவாவதும் லேப்டாப் உடன் மர்ம நபர்கள் நடமாடுவதும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புகின்றன. தேர்தல் முறையாக நடத்தப்பட்டு, முடிவுகள் நேர்மையாக அறிவிக்கப்படுகின்றன என்னும் நம்பிக்கையை வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம்” என்று மக்கள் நீதி […]

April 20, 2021 admin
தமிழகத்தில் இரவு ஊரடங்கு தொடக்கம் : பேருந்துகளின் நேர அட்டவணை வெளியீடு! Exclusive

தமிழகத்தில் இரவு ஊரடங்கு தொடக்கம் : பேருந்துகளின் நேர அட்டவணை வெளியீடு!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக இரவு 10 மணிக்குள் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று சேரும் வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதை ஒட்டி நாட்டின் பல்வேறு போக்குவரத்து கழகங்கள் தாங்கள் இயங்கும் நேரத்தை அறிவித்துள்ளன. நாடெங்கும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகவும் அதிகமாக […]

April 20, 2021 admin
மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி !- மத்திய அரசு அனுமதி! Exclusive

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி !- மத்திய அரசு அனுமதி!

கொரோனா சூழல் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற் கொண்டார். அதைத் தொடர்ந்து மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 50 விழுக்காடு மருந்தை மாநில அரசுகளுக்கு வழங்கவும். வெளிச் சந்தைகளில் கொரோனா தடுப்பூசியை விற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், மாநில அரசுகள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய […]

April 19, 2021 admin
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு : 20ஆம் தேதி முதல் அமல்! – முழு விபரம்! Exclusive

தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு : 20ஆம் தேதி முதல் அமல்! – முழு விபரம்!

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலையாகி பரவி அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 20 முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார்/ பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. மேலும் […]

April 18, 2021 admin
மீன்பிடித் தடைக் காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துடுச்சு! Exclusive

மீன்பிடித் தடைக் காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துடுச்சு!

இந்த ஏப்ரல், மே மாதங்களில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் என்பதால், இக்காலங்களில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவும் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதாவது மீன் இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த காலத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு, தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியான கன்னியாகுமரி கடல் பகுதி முதல் சென்னை திருவள்ளூா் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் விசைப்படகுகள் இன்று முதல் ஜூன் […]

April 15, 2021 admin
தமிழ்நாட்டில்  ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது! Exclusive

தமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது!

நம் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 10 முதல் 24-ம்தேதி வரையிலும், ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரையிலும் நிழல் இல்லா நாள் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது. இந்த கொடுங் கொரோனா தொற்று காலத்திலும் நிழல் இல்லா நாள் நிகழ்வை வீட்டிலிருந்தே ஒவ்வொருவரும் வீட்டு மாடி, தரைப்பகுதிகளில் அறிவியல் சாதனங்களின்றி எளிய முறைகளில் கண்டு களிக்கலாம். ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நிகழும் இந்த அரிய நிகழ்வு என்பது கூடுதல் சிறப்பு. நிழல் […]

April 13, 2021 admin
என்னைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணி பேசும் அன்புமணிக்காக பரிதாபப்படுகிறேன் – திருமா! Exclusive

என்னைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணி பேசும் அன்புமணிக்காக பரிதாபப்படுகிறேன் – திருமா!

பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி என்னைக் கொச்சைப் படுத்துவதாக எண்ணிக்கொண்டு கல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாத ஒட்டுமொத்த உழைக்கும் சமூகத்தையே இழிவுபடுத்துகிற ஒரு உளவியலை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவரின் நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அரக்கோணத்தில் இரு தலித் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் எதிர்கட்சிகளும் இந்த […]

April 12, 2021 admin
அனைத்து அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் 2 வாரத்தில் தடுப்பூசி போட்டுக்கோங்கோ! Exclusive

அனைத்து அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் 2 வாரத்தில் தடுப்பூசி போட்டுக்கோங்கோ!

தமிழகம் முழுக்க கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அடுத்த 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் மருத்துவ நிபுணர்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதலமைச்சர், இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று மார்ச் மாதத்தில் […]

April 12, 2021 admin
ஸ்ரீவில்லிபுத்தூர்  தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனாவுக்குப் பலி! Exclusive

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனாவுக்குப் பலி!

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இத்தொகுதிக்கு வத்திராயிருப்பைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாதவராவ் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். அவருக்கு வயது 63. வேட்புமனு தாக்கல் செய்த கையோடு, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இரண்டு நாட்கள் மட்டுமே பிரச்சாரத்தில் […]

April 11, 2021 admin
உடனடி செய்திகள்