கொரனா பரவல் : கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு!

நாடு முழுக்க கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே போவதை அடுத்து கோயில் திருவிழா, பேருந்துகளில் நின்று பயணிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு E-Pass கட்டாயம் என்றும் சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை கடைகளுக்கு தடை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகமெங்கும் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு கூடிக் கொண்டே போகிறது. இப்போதைக்கு சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் வீடு வீடாக இன்று முதல் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக 16000 களப்பணியாளர்கள், தன்னார்வலர்களை மீண்டும் பணியில் அமர்த்த முடிஅவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 100 மருத்துவர்கள், 4,000 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதே சமயம் தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறையுடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவற்றை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் இதோ: