32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 161 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 161)
நிர்பயா நிதியை பயன்படுத்த அக்கறை காட்டாத தமிழக அரசு! Running News2

நிர்பயா நிதியை பயன்படுத்த அக்கறை காட்டாத தமிழக அரசு!

டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2013 – 14ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த ‘நிர்பயா நிதி’ என்ற பெயரில்,1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்தது. ஆனால், அந்நிதியிலிருந்து எந்த பணிகளும் மேற்கொள்ளப்பட வில்லை. இதன் […]

July 22, 2017 admin
இந்தாண்டின் பெஸ்ட் பிக்சர் லிஸ்டில் சேர்க்க வேண்டிய படம் – விக்ரம் வேதா! Running News2

இந்தாண்டின் பெஸ்ட் பிக்சர் லிஸ்டில் சேர்க்க வேண்டிய படம் – விக்ரம் வேதா!

நம் கோடம்பாகத்தில் இப்போதெல்லாம் வாரந்தோறும் நாலு படங்களுக்கும் மேலாகவே ரிலீஸ் ஆகிறது. அப்படம் வெளியாவதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட டீம் மீடியாக்களை சந்தித்து தங்கள் குழுவின் பெருமையை காது கிழியும் அளவுக்கு சொல்வது வாடிக்கைதான். அந்த வகையில் நேற்று வெளியான விக்ரம் வேதா பட டீமும் லாஸ்ட் வீக் பத்திரிகையளர்களை சந்தித்தது. அப்போ பேசிய நடிகர் மாதவன் – உலக நாயகன் கமல்ஹாசனுடன் அன்பே சிவம், மன்மதன் அம்பு ஆகிய படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். அதே போல் பாலிவுட்டில் […]

July 21, 2017 admin
ஹிப் ஹாப் தமிழா ஆதி வழங்கிய ‘ மீசைய முறுக்கு’ – விமர்சனம்! Running News2

ஹிப் ஹாப் தமிழா ஆதி வழங்கிய ‘ மீசைய முறுக்கு’ – விமர்சனம்!

முன்னொரு காலத்தில் இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிட்டு வந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, உம்மா புகழ் அனிருத்துடன் இணைந்து ஒரு சில படங்களில் பாடல்கள் பாடினார். இந்த இருவர் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் பெரிய அளவில் வெற்றிபெறவே, சுந்தர்.சி தான் இயக்கி விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆதியை மியூசிக் டைரக்டராக அறிமுகம் செய்தார். அதையடுத்து இவர் இசையமைத்த ‘அரண்மனை-2’ ‘தனி ஒருவன்’ போன்ற படங்களின் பாடல்களும் ஓரளவு ஹிட்டான நிலையில் தொடர்ந்து இவருக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் […]

July 21, 2017 admin
“‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தைத் திரையரங்கம் வந்து ஏன் பார்க்க வேண்டும்?’ – இயக்குநர் ஞானவேல் விளக்கம்! Running News2

“‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தைத் திரையரங்கம் வந்து ஏன் பார்க்க வேண்டும்?’ – இயக்குநர் ஞானவேல் விளக்கம்!

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.. இவர் பிரபல வார இதழ் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.. இந்தப்படத்தின் கதாநாயகனாக அசோக் செல்வன் மற்றும் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க, படத்திற்கு இசையமைத்துள்ளார் நிவாஸ் கே.பிரசன்னா. வரும் 28ம் தேதி ரிலீஸாகும்  இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஞானவேல் ஆயிரத்தில் ஒருத்தனுக்கும் கூட்டத்தில் ஒருத்த னுக்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கினார்.. அதாவது, “சூப்பராக படிக்காத, அதேசமயம் மோசமாகவும் இல்லாத […]

July 20, 2017 admin
சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் ; ஸ்பான்ஸர் கிடைக்காததால்  கேன்சல்! Running News2

சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் ; ஸ்பான்ஸர் கிடைக்காததால் கேன்சல்!

கடந்த 21 ஆண்டுகளாக தடையின்றி நடைபெற்று வந்த புகழ்பெற்ற சென்னை ஓப்பன் ஏடிபி டென்னிஸ் போட்டித் தொடர் நிதிப்பற்றாக்குறை காரணமாக 2018-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏடிபி டென்னிஸ் சென்னை ஓபன் போட்டியாகும். 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடர் 21 ஆண்டுகளாக சென்னை மண்ணில் நடைபெற்று வந்தது. தமிழகத்தில் இருந்து ஏராளமான டென்னிஸ் வீரர்கள் உருவாக அடித்தளம் அமைத்த தொடரும் கூட. இந்த டென்னிஸ் தொடரை நடத்த தமிழ்நாடு அரசு, ஒவ்வோர் […]

July 20, 2017 admin
நான் காமராஜர் வழியில் நடப்பேன். ஆனால் திருமணம் செஞ்சுக்குவேன்! – விஷால் Running News2

நான் காமராஜர் வழியில் நடப்பேன். ஆனால் திருமணம் செஞ்சுக்குவேன்! – விஷால்

தயாரிப்பாளர் சங்கம் தலைவர் மற்றும் நடிகர் சங்கம் செயலாளர் விஷால் கைவசம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’, பி.எஸ்.மித்ரனின் ‘இரும்பு திரை’, லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, பிரபு தேவாவின் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’, வெங்கடேஷின் ‘நாளை நமதே’, பேரரசு படம், மலையாளத்தில் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’ என அடுத்தடுத்து படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது. இதில் ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷால் கணியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ்வாக வலம் வரவுள்ளாராம். மேலும், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் மிக […]

July 19, 2017 admin
பெண் காவலர்களின் அவஸ்தையை  வெளிப்படுத்த தயாராகும் ‘மிக மிக அவசரம்’ Running News2

பெண் காவலர்களின் அவஸ்தையை வெளிப்படுத்த தயாராகும் ‘மிக மிக அவசரம்’

மெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும்,  மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும் ஆண் காவலர்களும் /பெண் காவலர்களும்  தங்கள் கடமையின் காரணமாக துரத்தித் துரத்தி தடியால் அடிக்கிறார்கள். அவ்வாறு அடிக்கக் கிளம்பிய காவலர்களில் பலர் கிராமம் அல்லது விவசாயக் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும்! மதுக்கடை வேண்டாம் என்று மாரிலடித்து போராட்டம் நடத்தும் தாய்மாரின் கன்னத்தில் ‘பளார்…பளார்’ என பொதுமக்கள் கண்ணெதிரே அறைகிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். அவரின் சேவையைப் பாராட்டி பதவி உயர்வும் கிடைக்கிறது.  அதே இடத்தில் […]

July 18, 2017 admin
நம்ம இந்தியாவிலே ஏழை – பணக்காரன் இடைவெளி இப்போதைக்கு குறையாது! Running News2

நம்ம இந்தியாவிலே ஏழை – பணக்காரன் இடைவெளி இப்போதைக்கு குறையாது!

உலகிலேயே அதிக ஊதியம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை வெளியிட்டால் கட்டாயம் அதில் ஒரு இந்திய நடிகர் இருப்பார். ஆனால், இதே இந்திய நாட்டில்தான் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிக மாக இருக்கிறது. செல்வந்தர்கள் மேலும் மேலும் செல்வந்தர்களாகிக் கொண்டே இருக்க, ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வுகளை வைத்துக்கொண்டு, வெறும் உள்கட்ட மைப்பு (infrastructure) வளர்ச்சியை முன்னிறுத்தினால் அது நாட்டினுடைய வளர்ச்சி அல்ல. நம்இந்தியாவில் 56 சதவிகிதம் செல்வ வளத்தை பணக்காரர்களே […]

July 18, 2017 admin
உடனடி செய்திகள்