ஹிப் ஹாப் தமிழா ஆதி வழங்கிய ‘ மீசைய முறுக்கு’ – விமர்சனம்!

ஹிப் ஹாப் தமிழா ஆதி வழங்கிய ‘ மீசைய முறுக்கு’ – விமர்சனம்!

முன்னொரு காலத்தில் இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிட்டு வந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, உம்மா புகழ் அனிருத்துடன் இணைந்து ஒரு சில படங்களில் பாடல்கள் பாடினார். இந்த இருவர் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் பெரிய அளவில் வெற்றிபெறவே, சுந்தர்.சி தான் இயக்கி விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆதியை மியூசிக் டைரக்டராக அறிமுகம் செய்தார். அதையடுத்து இவர் இசையமைத்த ‘அரண்மனை-2’ ‘தனி ஒருவன்’ போன்ற படங்களின் பாடல்களும் ஓரளவு ஹிட்டான நிலையில் தொடர்ந்து இவருக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில்தான் தற்போது ‘மீசைய முறுக்கு’ என்ற பட கதையை உருவாக்கி, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி  இயக்குவதுடன், நடிக்கவும் செய்து ரிலீஸூம் செய்து சாதனை செய்து விட்டார் ஆதி. அதற்கே ஸ்பெஷல் சபாஸ்ஹ் சொல்லலாம்!

இப்படத்தின் மூலம் இரண்டாம் டி ஆர் என்ற தன்னை அடையாளம் காட்டியுள்ள ஆதி, தான் எப்படி இயக்குனர், நடிகர் ஆனேன் என்பதற்கு முன்னரே விளக்கம் அளித்திருந்தார். அதாவது, “நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வீடியோ இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டேன். அதில் என்னுடைய நடிப்பை பார்த்து சுந்தர்.சி. என்னை பாராட்டினார். பின்னர், நான் எழுதிய கதை ஒன்றை அவரிடம் காட்டினேன். அவர் அந்த கதையை படித்துப்பார்த்து தயாரிக்க முன்வந்தார்.அது என்னுடைய கதை என்பதால், நானே இப்படத்தை இயக்கவும் முடிவு செய்தேன். அப்போதுதான் என்னைப் பற்றிய நிறைய விஷங்களை அதில் சொல்லமுடியும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. இதற்கு சுந்தர்.சியும் உறுதுணையாக இருந்தார்” என்று தெரிவித்து இருந்தார்.

அதன்படி வாழ்க்கை அனுபவங்களில் கொஞ்சூண்டு மசாலா சேர்த்து ரெடி செய்து முறுக்கும் மீசையின் கதை என்ன என்று கேட்டால் ‘மிடி​ல்​ கிளாஸ் ஃபேமிலியைச் சேர்ந்த ஆதிக்கு ஒரு தம்பியுடன் மகிழ்ச்சியான குடும்பம். குட்டி பையானா இருக்கும் போதே வெட்கமும், பயந்த சுபாவமுமாய் வளரும் ஆதிக்கு மியூசி-ன்னா உயிர். அப்பா (விவேக்)ன் விருப்பத்துக்காகப் என் ஜினியரிங் எல்லாம் படித்தாலும் தான் விருப்பப்பட்ட இசையில் சாதிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஓடுகிறார்.. ஓடுகிறார்.. தன் ஃபேமிலியை பிரிஞ்சே ஓடுகிறார். இதுக்கிடையிலே காலேஜில் ஹீரோயினுட​ன்​ லவ்வும்,​ வழக்கம் போல் அந்த லவ்வால் பிரச்னையும் வருகிறது. அதே சமயம் கோவை கல்லூரி நண்பர்களுடனான ஜா​லி வாழ்க்கையும்​, அங்குள்ள சீனியர் மாணவர்களுடன் மோதல், நெருக்கம் என​ இருக்கும் ஆதி தன் வாழ்க்கைப் பயணத்தில் காதலில் ​ஜெயித்தாரா? இசையில் சாதித்தாரா? என்பதுதான் இந்த ‘மீசைய முறுக்கு’ திரைக் கதை.

கால் மணி நேரத்திற்கு ஒரு முறை படத்தில் செல்லு ‘ஜெயித்தாலும் தோற்றாலும் மீசைய முறுக்கு படத்தில் நடிகர், பாடகர், இசையமைப்பாளராக ஸ்கோர் செய்திருக்கும் ஆதி டைரக்ட்ர் ரோலில் கோட்டை விட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளி பருவத்திலிருந்து ஆதி காதலிப்பதும். அதையும் விஷ்ணு விஷால் – ஸ்ரீதிவ்யா- ரேஞ்சில் முதிர்ச்சியான காதலாக காட்டியிருப்பதெல்லாம் ரொம்ப ஓவர் மேலும்​ படத்தில் கதையை அப்பப்போ வாய்ஸ் ஓவரில் சொல்வதால் படம் கொஞ்சம் தொய்வடைந்து பார்க்கும் போது சோர்வைத் தருகிறது..

இதில் அப்பா விவேக்கும், ஹீரோ ஆதி ஆகிய இரண்டு பேர் நீங்கலாக மற்றவர்களெல்லாம் பிக் ஸ்கீரினுக்கு புதுசு. என்றாலும் அடிக்கடி யூ டியூப் உள்ளிட்ட இணையத்தளத்தில் வந்து பரிச்சயமான ஸ்டார்களான ஷா ரா , விக்னேஷ், அன்பு, சுதாகர், கோபி என கண்டு களித்தவர்களை வெள்ளித் திரைக்கு அழைத்து வந்து ஒரு படி அவர்களை ஏற்றி தானும் உயரமாக்கி இருக்கிறார் ஆதி..

ஒட்டு மொத்த படத்தையும் ஸ்டூடண்ட்ஸ், லவ் ஃபீல் கொடுத்துள்ளதுடன் பாடல் காட்சிகளையும் குட்டி பசங்களை மனதில் வைத்தே மேக்கிங் செய்திருப்பதால் மிடில் ஏஜ் குரூப்-ப்புக்கு ஒட்ட வில்லை என்றாலும் இளைஞர்களான மாணவர் பட்டாளத்துக்கு பிடித்த பல விஷயங்கள் இருப்பதால் ஆதி எஸ்கேப் என்றுதான் சொல்ல வேண்டும்

மார்க் 5/3