இந்தாண்டின் பெஸ்ட் பிக்சர் லிஸ்டில் சேர்க்க வேண்டிய படம் – விக்ரம் வேதா!

இந்தாண்டின் பெஸ்ட் பிக்சர் லிஸ்டில் சேர்க்க வேண்டிய படம் – விக்ரம் வேதா!

நம் கோடம்பாகத்தில் இப்போதெல்லாம் வாரந்தோறும் நாலு படங்களுக்கும் மேலாகவே ரிலீஸ் ஆகிறது. அப்படம் வெளியாவதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட டீம் மீடியாக்களை சந்தித்து தங்கள் குழுவின் பெருமையை காது கிழியும் அளவுக்கு சொல்வது வாடிக்கைதான். அந்த வகையில் நேற்று வெளியான விக்ரம் வேதா பட டீமும் லாஸ்ட் வீக் பத்திரிகையளர்களை சந்தித்தது. அப்போ பேசிய நடிகர் மாதவன் – உலக நாயகன் கமல்ஹாசனுடன் அன்பே சிவம், மன்மதன் அம்பு ஆகிய படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். அதே போல் பாலிவுட்டில் அமீர்கான், சித்தார்த் ஆகியோருடனும் சேர்ந்து நடித்துள்ளார். ஆனால் இது வரை தான் சேர்ந்து நடித்த நடிகர்களில் கமலுக்கு அடுத்ததாக விஜய் சேதுபதி தான் தன்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் என்று புகழாரம் சூட்டி இருந்தார். அத்துடன் இந்த விஜய் சேதுபதியை பாலிவுட்டுக்கு அழைத்து செல்வேன் என்றும் மாதவன் கூறியிருந்தார். அப்போதைய சூழ்நிலையில் இந்த கமெண்ட் நம் கவனத்தை பெற வில்லை. ஆனால் நேற்று படம் பார்த்த பிறகு மாதவன் சொன்னது சொன்னது அக் மார்க் உண்மை என்று புரிந்தது..

ஆம்.. புஷ்கர் – காயத்ரி என்ற இரட்டை இயக்குநர்களின் கை வண்ணத்தில் ஓரம் போ, வா கோட்டர் கட்டிங் ஆகிய இரு திரைப்படங்கள் வெளியாகி தனிக் கவனத்தை ஈர்த்தது நினைவிருக்கும். இந்த இரண்டு திரைப்படங்களுமே வெறும் கதை சொல்லி என்ற பாணியை மட்டும் கடை பிடிக்காமல் தாண்டிய ஒரு திரைப்படங்கள். அதிலும் ரேஸிங்கை அடிப்படையாக வைத்து வெளியான தமிழ் படங்களில் முதன்மையானது ஓரம் போ- தான். அத்துடன் மேற்படி இரண்டு திரைப்படங்களுமே வட சென்னையை அடிப்படையாகக் கொண்டவை. இப்படி ஷூட் செய்யப்பட்ட படங்க ளில் வெற்றி பெற்ற இடங்களையெல்லாம் வைத்து இந்த விக்ரம் வேதாவை உருவாக்கி தமிழ் ரசிகர்களை முமுமையாக ஆக்ரமித்து விட்டார்கள் என்றே சொல்லலாம்!

டைட்டில் ஓடும் போதே வேதாளம், விக்ரமாதித்யனின் மூலம் கதை தொடங்கி விடுவதே தனி கவனத்தை பெறுகிறது. சென்னையின் முக்கிய தாதாக்களில் ஒருவர் வேதா (விஜய் சேதுபதி) அவரை என்கவுண்டர் செய்ய தயாரான பிரேம் தலைமையிலான அமைப்பில் என்கவுண்டரில் கை தேர்ந்தவரான விக்ரம் (மாதவன்) இருக்கிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி இருக்கும் இடம் குறித்து ரகசிய தகவல் ஒன்று கிடைக்க, மாதவன் உள்ளிட்ட அந்த குழு சம்பவ இடத்திற்கு விரைந்து, அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதில் குற்றவாளி இல்லாத ஒரு நபரையும் என்கவுண்டர் செய்து விடுகிறார்கள். மேலும் அந்த நபரை குற்றவாளி என்றும் போலீஸ் அறிக்கையில் அறிவிக்கின்றனர். இதுஒருபுறம் இருக்க மாதவனுக்கு வழக்கறிரான பிரியா (ஷரத்தா ஸ்ரீநாத்)துடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இதனிடையே, வேதாவுக்கு வைத்த முதல் குறி தோல்வியடைந்ததை அடுத்து, விஜய் சேதுபதி இருக்கும் இடம் குறித்த தகவல் மீண்டும் கிடைக்க, இந்த முறை விஜய் சேதுபதியை கட்டாயம் என்கவுண்டர் செய்துவிட வேண்டும் என்று பெரிய படையே செல்கிறது. அதே சமயம் விஜய் சேதுபதி அவராகவே காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சரணடைகிறார். தனி ஆளாக அதுவும் ஒற்ற வடையை கையில் வைத்துக் கொண்டே அசால்டாக வந்து சரணடைந்த விஜய் சேதுபதியிடம் மாதவன் விசாரணை நடத்துகிறார். அப்போது, தனது வாழ்க்கையில் நடந்த கதை ஒன்றை சொல்லும் விஜய் சேதுபதி, அதிலிருந்து கேள்வி ஒன்றை கேட்கிறார். பதில் கிடைக்காமல் திணறும் போது வேதா எஸ்கேப் ஆகி விடுகிறார். அங்கே ஆரம்பித்து அடுத்தடுத்து விகரமிடம் மாட்டும் போதும் கதை சொல்வதும், அந்தக் கதையின் முடிச்சை அவிழ்க்க மாதவன் முயலும்போது அவருக்கு வேறு சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதுமாகச் செல்கிறது திரைக்கதை. இறுதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது, விக்ரம், வேதாவைப் பிடிக்கிறாரா.. இதனிடையே இப்பிரச்னைக்கு உண்மையான் காரணம் என்ன? வேதாவை என்கவுண்டரில் போட்ட்டாரா இல்லையா என்பதை தியேட்ட்ருக்குப் போய் கண்டு ரசியுங்கள்.!

ரவுடி வேதாளமான சேதுபதியின் கேள்விக்கு பதில் சொல்லும் விக்ரமாதித்தனாக நடித்திருக்கும் மாதவன் கேரக்டர் படத்திற்கு அம்புட்டு பலம். மாதவனைத் தவிர இந்த கதாபாத்திற்கு வேறு யார் நடித்திருந்தாலும் பொருத்தமாக இருக்காது என்று கூறுமளவுக்கு ஒரு போலீசாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நேர்த்தியான நடிப்பால் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. இறுதிச் சுற்று படத்திற்கு பிறகு மாதவன் மீண்டும் தனது ஸ்டைலை நிரூபித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி ஒரு மாஸான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தனக்கான வசனங்களைக் கூட தன் பாணியில் ஹோம் செய்து விட்டு வந்து வெளிபடுத்தி இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவரது தம்பியாக கதிர் குறைவான காட்சிகளில் வந்தாலும், முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

வழக்கறிஞராக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்வுக்கு கதைப்படியும் முக்கியம் இருப்பதால் ஃபர்பகெட்டான் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வரலட்சுமிக்கு கொஞ்சூண்டுதான் ரோல் என்றாலும் ‘ஹக்காங்’ என்ற ஒன்றை வார்த்தையில் ப்பச்சக் என்று மனசில் ஒட்டிக் கொள்கிறார் . இருவரது கதாபாத்திரமும் ரசிக்கும்படி இருக்கிறது. இவர்களுடன் பிரேம் குமார் மஸ்தோ, ராஜ்குமார் என பலரும் படத்திற்கு பக்கபலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறனர்.

சாம்.சி.எஸ். இசையில் பாடல்களை விட . படத்தின் பின்னணி இசையும் குறிப்பாக ‘தனனனனன நா… தனனனனன நா’ பி.ஜி.எம். சவுண்டும் படத்தை பலப்படுத்துகிறது.. பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவில் நமக்கு பரிச்சயமான ஏரியாக்களை புது கோணத்தில் காட்டி அசத்தி உள்ளார்.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி சினிமாவில் இரண்டு ஹீரோ படங்கள் எத்தனியோ பார்த்திருக்கிலாம. அதில் போலீஸ்-ரவுடி மோதல், சவால் படங்களையும் கூட பாத்திருக்கிலாம். இவை அனைத்துமே நல்ல போலீஸ், கெட்ட போலீஸ், கெட்ட ரவுடி, நல்ல ரவுடி ஆகியவர்களைத்தான் காட்டியிருக்கின்றன. ஆனால் இந்த இரட்டை இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி உருவாக்கிய படத்தில் யார் செய்வது கரெக்ட்? யார் தப்பு செய்கிறார்? படம் பார்ப்பவரும் யோசிக்கும் விதத்தில் ஸ்கிரீன் பிளே செய்து இருப்பதும் யதார்த்தமான வசன கோர்வையை இணைத்திருப்பதும் இந்த படம் இந்தாண்டின் பெஸ்ட் பிக்சர் லிஸ்டில் சேர்க்க வேண்டிய படம் என்பது மட்டும் உண்மை.

மார்க் 5/4