விவேக் மாரடைப்புக்கும் தடுப்பு மருந்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

விவேக் மாரடைப்புக்கும் தடுப்பு மருந்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

ருவருக்கு தடுப்பு மருந்து ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அதன் விளைவு அரை மணி நேரத்திற்குள்ளேயே தெரிந்து போய் விடும். அதற்குத்தான் ஊசி போட்டவுடன் ஒரு மணி நேரம் அங்கேயே உட்கார வைத்து பார்த்து அப்புறம் அனுப்புகிறார்கள். 12 மணி நேரம் கழித்து வரவேண்டும் என்றால் காய்ச்சல், அசதி போன்றவைதான் வரும். நடிகர் விவேக்குக்கு வந்த மாரடைப்புக்கும் தடுப்பு மருந்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பது இப்போதைக்கு யாருக்குமே தெரியாது.

அப்படி ஏதாவது அதீதமான தொடர்பு இருக்கிறது என்றே ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டாலும், அந்த ஆராய்ச்சியை நாம் நமது சமையல் அறையிலோ, டிவி முன்னால் டீ சாப்பிட்டுக் கொண்டோ செய்ய முடியாது. Virologist, Microbiologist, Epidemiologist என்று நிறைய நிபுணர்கள் இது குறித்து பரிசோதனைக் கூடங்களில் ஆராய்ந்து உண்மையை கண்டுபிடிப்பார்கள். அதற்கு குறைந்தது ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை ஆகலாம். இந்தப் புகாரில் குந்துமணி அளவு வலு இருந்தாலும் இந்த நிபுணர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அதனை எடுத்துக் கொண்டு ஆராய்வார்கள். அதன் அறிக்கையை வெளிப்படையாக பகிரவும் செய்வார்கள். (காரணம் அறிவியல் அப்படித்தான் இயங்குகிறது.)

நம்மைப் பொருத்த வரை இதுவரை உலக அளவில் நாம் பார்த்த வேக்சின் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மாரடைப்பு ஒரு முக்கிய பிரச்சினையாக வெளிப்படவில்லை. எனவே, இது இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை என்றுதான் இப்போதைக்கு நாம் யோசிக்க வேண்டும். An odd co-incidence. ஒரு அதீத தற்செயல். அவ்வளவுதான்.

எனவே, நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்: நாமே பெரிய வைராலஜிஸ்ட்கள் போல வீட்டு கிச்சனில் ‘ஆராய்ச்சி’ செய்து வதந்திகளைப் பரப்பாமல் வாயை மூடிக்கொண்டு இருக்கலாம்.

அது மட்டுமே சமூகத்துக்கு நாம் இப்போதைக்கு செய்ய வேண்டிய சேவை.

– Sridhar Subramaniam

error: Content is protected !!