Exclusive
அமைச்சர் நிதானமாகப் பதிலளிப்பதைக் குலைக்கிறார்கள்!
கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்த முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்குப் பிறகு, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஊடகங்களிடம் பேசுகிறார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தெளிவாக எடுத்துரைத்துவிட்டு கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கேள்வி கேட்டு, அமைச்சர் நிதானமாகப் பதிலளிப்பதைக் குலைக்கிறார்கள். ஒரே கேள்வி மீண்டும் வெவ்வேறு வார்த்தைகளில் கேட்கப்படுகிறது. அதுவும் அமைச்சர் பதிலளிப்பதற்குள் அடுத்த கேள்வியை எழுப்புகிறார்கள். பிரச்சினை குறித்த எந்தவித முன் தயாரிப்பும் இன்றி […]