மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே!?

மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே!?

ல்லா கருத்துக் கணிப்பு சொல்றமாதிரி இவருக்கு தோல்வி அடைந்தாலும் கவலை இல்லை… இருந்தவரைக்கும் ஒவ்வொரு நாளும் ஜெய்ச்சார்டா இந்த மனுசன்….ஒவ்வொரு நாளும் என்பதை விட ஒவ்வொரு நொடியும் முதலமைச்சராக ஜெய்த்து கொண்டே இருந்தார். எங்கேயோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து பகுதி நேர அரசியலில் சேர்ந்து..கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அந்த ஐந்து பேர் அணியில் அம்மா jjவின் குட் புக்கில் இடம் பிடித்து.. அந்த ஐந்தில் பெஸ்ட்னு பெயர் வாங்கி… ஏற்கனவே முதல்வரா இருந்தவரை வெற்றி கொண்டு… விழுந்தும் ,புரண்டும் ,தவழ்ந்தும் முதல்வ ராகிய அடுத்த நொடியில் இருந்தே தமிழ்நாட்டின் பாகுபலி யாக அவதரித்தார்….! அதிலும் சட்ட சபை நடந்த காலமெல்லாம் தவறாம சென்று எதிர்கட்சி வைக்கும் குற்றச்சாட்டுகளை பதிலடி கொடுத்து பேசி தூள் கிளப்புவாரு பாருங்க…. சான்சே இல்ல…டாப்… இவர்…!

இடையில் வந்து ஆக்கிரமித்த தினகரனை ஓட விரட்டிட்டு … சீறிய ஓபிஎஸ்ஸ கூப்பிட்டு கட்சிக்கு உள்ள ஒருங்கிணைப்பாளராக்கி கிட்டயே வச்சு கொண்டு….நாளைக்கு கவிழ்ந்து விடும் , நாளைக்கு கவிழ்ந்து விடும் நினைத்த கட்டை வண்டிய நாலரை வருசமா ஒரு ஒரு சின்ன ஸ்க்ரேச் கூட இல்லாமல் பென்ஸ் கார் விட வேகமாக ஓட்டி காண்மித்து விட்டார். மோடி அமித்ஷா போன்ற மலையவே கைக்குள் போட்டு… அவர்களையே இவருக்காக இந்த தேர்தல்ல மெனங்கெட்டு தொகுதி வாரியா உழைக்க விட்டார் பாருங்க… அதே மோடியும் ,ஷாவும் நம்பர் 1 எங்க ஊர் குஜராத் இல்லை, தமிழ்நாடுதான்னு சொல்ல வச்சரே…. அது அம்மா jj வால் கூட முடியவில்லை.

இப்பவும் 100 தொகுதி வெற்றியோடு அசுர பலத்தில் இருந்து கொண்டு கழுத்தில் கத்தியை வச்சி காத்திருந்த திமுகவை வை இடைத்தேர்தல் வீழ்த்தி சட்டையை கிழித்து கொண்டு ஓட விட்ட பெருமை பாருங்கள்…என்னையும் முதல்வர்னு மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் , நானும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் னு சொல்ல வச்சார் பாருங்க…..அம்மா , கருணாநிதி காலத்திலே மாற்றம் முன்னேற்றம்னு முதல்வர் வேட்பாளர் துள்ளிய அன்புமணி வாயாலயே …சிறந்த முதல்வர் அண்ணன் எடப்படியார் முதல்வர் ஆக்க வேண்டும்ன்னு பிரச்சாரம் பண்ண வச்சார் பாருங்க…..!

அதுமட்டுமா, ஏற்கனவே முதல்வரக இருந்தேன்னு சொன்ன ஓபிஸ் யையே முதல்வர் வேட்பாளர் சீனில் இருந்து தூக்கி வெளியே போட்டு , மாண்புமிகு முதலமைச்சர்னு கூப்பிட வச்சாரே…. மாடி மேல சி.பி.ஐ விசாரணை… கீழ தொகுதி பேச்சுவார்த்தை நடந்த சரித்திரங்கள் எல்லாம் நம் தமிழ் நாட்டில் உண்டு… அடிமை அஇஅதிமு… சி.பி.ஐ கிட்ட அதிமுக அமைச்சர்கள் ஊழல் செஞ்சி மாட்டி இருக்காங்க… பைல் மாட்டி இருக்கு… அது இது-ன்னு ஏக ஏளனமாக பேசிய எதிர் கட்சிகளை மிரள வைத்தவர் இவர்…!

2001ல கருணாநிதி ஆட்சி காலத்துல தமிழ்நாட்டுல அப்ப ஒன்னுமே இல்லாத பி.ஜே.பிக்கு தி.மு.க 21 சீட்டு கொடுத்தாங்க… ஆனா இப்ப கண்ணுல விரல விட்டு ஆட்டும் மோடி அமித்ஷா மத்திய ஆட்சி காலத்தில… 60 தொகுதி கேட்ட பிஜேபி முருகனை 20 கொடுத்து கிளம்புனு சொன்ன தந்திரம் பாருங்க…. சாட்சாத் எடப்பாடியாரால விட யாராலயும் இந்த சாமார்தியம் முடியாது…கட்சி ஆரம்பிச்ச கருணா எம்ஜிஆர் காலத்திலேயே 30 தொகுதி வரை கேட்ட ராமதாஸ்க்கு வெறும் 23 னை கொடுத்து கிளம்புங்க… ன்னு அனுப்பிவிட்ட திறமையை எண்ணி பாருங்கள் விட…அந்த விஜயகாந்த் கட்சியை சத்தம் இல்லாமல் அடித்து துரத்திய அசுரத்தனம் கலந்த ஆளுமையை பாருங்கள்…..!

அப்பப்பப்…. சூப்பர் சார் ரியல் சூப்பர் ஸ்டார்…அரசியல் ஆசை முளைத்த சூப்பர் ஸ்டார் ரஜினி கூட அரசியல் ஆசையை நிராசை ஆக்கின ஆளுமை பாருங்கள்..ராகுல், ஸ்டாலின் , தயாநிதி, கனி மொழி, உதயநிதி மாதிரி அப்பன் பாட்டன் சம்பாதித்து கொடுத்த உழைப்பில் பிழைத்து வெற்றி பெறுவது பெரிய விஷயம் இல்லை……

தானே சம்பாதித்து உருவாக்கி அதில் ஜெய்ச்சு காட்டுவதுதான் வெற்றி…. அதுமட்டுமா …
காமராஜர் மாதிரி நீர் மேலாண்மை, நிர்வாகம் ,கல்வி என்று 4 ரரை வருஷத்தில் ஜொலிச்சு காட்டிவிட்டார்….

எப்பேர்பட்ட புயல், வெள்ளம் கூட எடப்படியார்கிட்ட தோற்று போனது……ஓடி ஒழிந்த நிவர் புயலை கூட பார்த்தோமே… வரவே பயப்படுதுனு சொல்லணும்..நன்றாக செழித்த மழை….கமிஷன் அடிச்சான் கொள்ளை அடிச்சான்னு புலம்பலுக்கு நடுவில் எத்தனை திட்டங்கள்…புல்லட் வேகத்தில் நடைபெற்றது…. கொரோனோவையும் லாக் டவுனை நிர்வகிதத்தில் நாட்டுக்கே ரோல் மாடல் ஆனரே

சூப்பர் சார்!!!

ஆக எடப்படியார் உலக மக்களுக்கு கற்று கொடுத்த விஷயம்…..

# கிடைக்கும் வாய்ப்பை கெட்டியாக பிடிக்கணும்…

# பிடிச்ச வாய்ப்பை சிந்தாமல் சிதறாமல் செதுக்க வேண்டும்,

# சுத்தி இருக்கும் சோதனைகளை சாதனை ஆக்க வேண்டும்… # அப்படி செதுக்கி கிடைச்ச சாதனை வெற்றியை பந்தா பகுமானம் இல்லாமல் வெள்ளந்தி மாதிரி சாதாரணமாக எடுத்துக்கிட்டு கடந்து செல்ல வேண்டும்… காலத்தால் அழிக்க முடியாத மிக பெரிய ஆளுமை லீடர்ஷிப் நீங்க.. அது மட்டுமல்ல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்ம பக்கத்து வீட்டில் இருக்கும் பரிச்சயமான அங்கிள் மாதிரி ஒரு பீல் னு சொல்லும் இளைஞர்கள் ஏராளம்

எனவே.. அரசியல் மட்டுமல்ல , தொழில் பண்றவுங்க, பெரிய பதவியை அடையனும்னு நினைப்பவர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாக பார்க்கலாம்

இதை சொல்ற நான்.. அதிமுக காரனோ , அவரால் ஆதாயம் பெற்றவனோ , இனிமேல் ஏதாவது ஆதாயம் பெறப் போவனோ கிடையாது…. நான் ஒரு நோட்டா ஓட்டர்.. நானே அவரை பல முறை திட்டி இருக்கிறேன்..

.பிகு :-

இதுவரை நான் சொன்னதை விட சரித்திரம் பேச… அவர் ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க… ..அதை நாமக்கல் நகராட்சி அலுவலக துவக்கவிழாவில்… ஒரு முறை நேரில் பார்த்து அவரோடு பேசி சிரித்து அனுபவித்தவன் என்ற முறையில் சொல்றேன்.  கல் நெஞ்சும் கரையும் எதார்த்த முகம்

மக்களே,
நீங்க யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்க , நோட்டாவுக்கு கூட போடுங்க…
அது அந்த வெள்ளை மனசு மனிதர் பாகுபலி பழனிச்சாமி II மீண்டும் ஒருமுறை முதல்வராகி விடுங்கள் எடப்பாடியாரே!

வரலாறு பேசும் முதல்வராக திகழ்வீர்கள்…

எதிர்கட்சிகளின் விமர்சனங்களை தவிடுபொடியாக்கி அனைத்து மக்களாலும் உங்களை மீண்டும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் முதல்வராக பார்க்க ஆசைப்படுபவர்களில் நானும் ஒருவன்.

என்றும் கழகப் பணியில் தியாகராய நகர் A.மாரியப்பன்.,
தியாகராய நகர் பகுதி கழக துணைச் செயலாளர்

Related Posts