எய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை!

எய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன் டெல்லி எய்ம்ஸ்சின் MD கவுன்சலிங்கிற்கு தேர்வாகிச் சென்ற எங்கள் குடும்பத்துத் தம்பிக்கு, அங்கு அவர் முறை வந்தபோது ஃபாரன்சிக் மெடிசின் மட்டுமே இருந்ததாலும், ஏற்கனவே எய்ம்ஸில் தென்னிந்திய மாணவர்கள் வட இந்தியப் பேராசிரியர்களால் தொடர்ந்து 72 மணி நேரங்கள் வேலை செய்யப் பணிக்கப்படும், வேற்றுமையாக நடத்தப்படும் கதைகளெல்லாம் கேள்விப்பட்டும் வேண்டாமென்று வந்து விட்டார்.

தற்போது இங்கு இளநிலை அரசு மருத்துவராகப் பணியாற்றி வரும் அவர், அதன் பின்னும் ஒவ்வொரு வருடமும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வை விடாமல் எழுதி வருகிறார். சென்ற வருடம் இங்கிருந்து தேர்வாகி அங்கு சென்ற அவரது சீனியரிடம் சமீபத்தில் பேசியபோது அவர் சொல்லியிருக்கிறார்;

கடந்த நான்கைந்து மாதங்களாக எய்ம்ஸில் பாடங்களை இந்தியில் மட்டுமே எடுக்கிறார்கள். புரியாமல் எழுந்து கேள்வி கேட்கும் தென்னிந்திய மாணவர்களிடம் ‘உனக்குப் புரிய வைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை, வேணும்னா இந்தி படிச்சுட்டு வந்து நீயே புரிஞ்சுக்க முயற்சி செய்’ என்று அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு அவர்கள் வேலையைத் தொடர்கிறார்களாம்.

இரண்டு லட்சம் ரூபாய் ஆண்டுக் கட்டணம் கட்டிவிட்ட நிலையிலும் நான் படிப்பை விட்டுவிட்டு ஊருக்கே திரும்பி விடலாம் என்ற மனநிலைக்கு வந்து விட்டேன். இனி தயவுசெய்து எய்ம்ஸ் மட்டுமல்ல, எந்த வட மாநில மருத்துவக் கல்லூரிக்கும் இடம் கிடைத்தால் கூட வராதீர்கள், எல்லா இடங்களிலும் இதுதான் நிலைமை. முடிந்தவரை தென்னிந்தியாவிலேயே பார்த்துக் கொள்ளுங்கள் என்றிருக்கிறார் அவர்.

Anitha N Jayaram

error: Content is protected !!