வெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி!

வெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி!

மீனல் ஹக் எட்டாங் கிளாஸ் படிக்கிறான். 14 வயசு.

“பிரண்ஸ்லாம் ரோட்ல கிரிக்கெட் ஆடிட்டு இருந்தோம்.

அந்த வழியா வந்த மிலிட்டரி கலர் லாரி எங்க பக்கத்ல நின்னுச்சு. திபுதிபுனு அதுல இருந்து ஜவான்ஸ் குதிச்சாங்க.

எலக்சன் பூத் பக்கத்ல கிரிக்கெட் ஆட்றது தப்புனு எங்கள புடிச்சுட்டு போக வந்துட்டாங்கன்னு நெனச்சோம்.

வாங்கடா போய்ருவோம்னு சொல்லிகிட்டே ஓட ஆரமிச்சோம். அவங்க துரத்திட்டு வந்தாங்க. ஒருத்தர் என்னய புடிச்சிட்டாரு.

இந்தில என்னமோ கேட்டாரு. எனக்கு இந்தி தெரியாது. தெரியாம விளையாடிட்டோம், இனிம செய்ய மாட்டோம்னு பெங்காலில சொன்னேன்.

அவருக்கு நா சொன்னது புரியல. கோபமாகி, லத்தியால என்னய அடிச்சாரு. இடுப்புலயும் முதுகுலயும் அடி பலமா விழுந்துச்சு. வலி தாங்க முடியல. வாந்தி வந்துது. அப்டியே மயங்கி விழுந்துட்டேன். அவ்ளதான் ஞாபகம் இருக்கு.

மீனல் ஹக் அப்பா மஜீத் மியான். கூலி தொழிலாளி. சொல்றார்:

பையன் ரோட்ல விழுந்து வலியில துடிக்கிறான். வாய்ல நுரை தள்ளுது. எலக்சன் ஆபீசர் பாத்துட்டு ஓடியாந்தாரு. பாத்துகிட்டு இருந்த ஜனங்களும் வந்துட்டாங்க.

ஏரியா பசங்கதான் இவங்க. விளையாடாதேனு சொன்னா போயிருவாங்க. லத்தியால அடிக்கிற அளவு என்ன தப்பு செஞ்சிட்டாங்க? என்று மக்கள் எகிற, தூக்குங்க ஆஸ்பிடலுக்கு கொண்டு போவோம் என்றார் தேர்தல் அதிகாரி.

உடனே ஜவான்ஸ் எல்லாருமா தடுத்து, நாங்க கொண்டு போய்க்கிறோம்னு சொல்லி, பையன அவங்க வண்டீல ஏத்திகிட்டு போய்ட்டாங்க. எந்த ஆஸ்பிடல்னுகூட சொல்லல.

இதுக்கு அப்றம்தான் சமூக ஊடக போராளிகள் களமிறங்கி, வதந்திகளை பரப்பினர். அதை நம்பி கும்பல்கள் திரள, போலிங் பூத் ஏரியாவே டென்ஷன் ஆனது.

துப்பாக்கியால் சுட்டது போலீஸ், ராணுவம் இல்லை. சி ஐ எஸ் எஃப் என்கிற தொழிற்சாலை பாதுகாப்பு படையினர். ஓட்டு போட வரிசையில் நின்றவர்களும் குண்டு பாய்ந்து செத்திருக்கிறார்கள்.

  • மொழி பிரச்னைதான் முதல் புள்ளி.

கதிர்

Related Posts

error: Content is protected !!