தன் யானை பலம் தெரியாத திருமாவளவன்!

திருமாவளவன் பத்தி சர்ச்சை கிளப்றதுக்குனே ஒரு கோஷ்டி இருக்கு. ரொம்ப நாளாவே இது நடக்கு. அவருக்கும் தெரியும். பெரும்பாலும் சைலன்டா கடந்து போயிருவார். சில சமயம் இப்டி காட்டமா பதில் சொல்லி அடுத்த சர்ச்சைக்கு க்யூ குடுப்பார். கை கட்டிக்றது என்னோட இயல்புனு அவர் சொல்றது நெசம். மீசை முறுக்ற போசுக்கு சம்பந்தமே இல்லாம ரொம்ப அடக்கமான தலைவர். எதார்த்தமா ஒரு பிளாஸ்டிக் சேர இழுத்து போட்டு உக்கார்றதும் அதுல அடக்கம்.
அடங்க மறு!னு எங்கள எழுப்பி விட்டுட்டு அவரு மட்டும் அடக்கமா இருந்தா எங்கள எவன் சார் மதிப்பான்?னு கேக்றவங்க இருக்காங்க. புரியாம கேக்றாங்க. அடி பணிவது வேற, அடக்கமா, பணிவா நடந்துக்றது வேற. அடக்கம் அமரருள்..னு ஏதோ சொல்லுவாங்க. பதவி வரும்போது பணிவும் வர வேண்டும்னு ஒருத்தர் பாடிருக்கார். பணிவும் துணிவும் ஒரே இடத்ல இருக்க முடியாதுனு யாரு சொல்லிருக்காங்க? ஒருத்தரும் இல்ல.
டிஜிட்டல் போட்டோகிராபிலாம் வரதுக்கு முன்னாடி பெரிய ஜமீன்தார், மேதைகள்லாம் கைகட்டி உக்காந்துதான் போஸ் குடுப்பாங்க. என்ன கம்பீரமா கைகட்டி உக்காந்திருக்கார், பாரு..னு கமென்ட் அடிப்பாங்க. ஏவிஎம் சரவணன் நிக்கும்போதே கைகட்டுதான். அவர் யாருக்கு எப்ப பயந்தாரு?
பிளாஸ்டிக் சேருக்கும் மறுபக்கம் உண்டு.
ராஜகண்ணப்பன் உக்காந்து இருக்றது சிம்மாசன சோபா. கோடம்பாக்கத்துல செட் ப்ராப்பர்ட்டி வாடகைக்கு விடுறவங்க ஆரமிச்ச ஸ்டைலு இப்ப நீக்கமற நிறைஞ்சிருக்கு. பொதுவா நம்ம எல்லாருமே ஆண்ட பரம்பரை இல்லையா, அதான் அரியணை ஆசை ஆழ் மனசுல அட்ணக்கால் போட்டு உக்காந்திருக்கு.
நிற்க. ஒண்ணா உக்காந்து டீவி பாக்க வசதியாதான் எல்லா வீட்லயும் சோபா அல்லது சேர் போட்ருப்பாங்க. விசிட்டர்ஸ் அதிகம் வர்ற வீடா இருந்தா எதிர் வரிசை இருக்கும். சைடுல உக்காந்தா முகம் பாத்து பேச முடியாது. எதிர்ல உக்காந்தா நடுவுல ஆளுக அங்கிட்டும் இங்கிட்டும் போய்கிட்டு இருப்பாங்க. அதான் பக்கத்லயே ஒரு சேர இழுத்து போட்டு உக்காந்திருக்காரு திருமா. அதுவே நட்பு அல்லது உரிமைய வெளிப்படுத்ற செயல்தான்.
ராஜகண்ணப்பன் சோஷல் மீடியாக்கு பயந்த ஆளா தெரியல. அப்டி இருந்தா இதை எல்லாம் ஊகிச்சு செட்டப்பையும் கெட்டப்பையும் மாத்திருப்பார். இதுக்கெல்லாம் டென்சன் ஆக தேவையில்லை, திருமா. உங்க ரூட்ல ஜம்முனு போய்ட்டே இருங்க.
All said, அரும்பாக்கம் மேட்டர்ல நீங்க வேற மாதிரி டீல் பண்ணிருக்கலாம்னுதான் இப்பவும் தோணுது. What to do, யானைக்கு தன் பலம் தெரியாதுல்ல.
கதிர்