32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 30 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 30)
உலக பிரெய்ல் தினம்: ஒரு தோல் கருவி குத்திய கண்ணில் உதித்த பேரொளி! Exclusive

உலக பிரெய்ல் தினம்: ஒரு தோல் கருவி குத்திய கண்ணில் உதித்த பேரொளி!

கண்கள் என்பது வெறும் கருவிதான், உண்மையான பார்வை மனதில்தான் இருக்கிறது. புத்தரும் காந்தியும் தங்கள் கால்களால் உலகைப் பார்த்தவர்கள்; பயணங்கள் தந்த அனுபவத்தால் வாழ்வை அளந்தவர்கள். பார்ப்பதற்குக் கண்கள் ஒரு கருவி மட்டுமே, கண்கள் இல்லாமலும் பார்க்கவும், படிக்கவும்  இயலும் என்பதைத் தன் அறிவாலும் மனதாலும் நிரூபித்துக் கொண்டிருப்பவர்களைப் போற்றும் நாளே இந்த உலக பிரெய்ல் தினம். 1. ஒரு விபத்தும்… ஐந்து வயது இருளும்… 1809 ஜனவரி 4-ல் பிரான்ஸின் ஒரு சின்ன கிராமத்தில் லூயி […]

January 4, 2026 admin
யாதும் ஊரே யாவரும் கேளிர்: இன்று உலகளாவிய குடும்ப தினம்! Exclusive

யாதும் ஊரே யாவரும் கேளிர்: இன்று உலகளாவிய குடும்ப தினம்!

புத்தாண்டு என்றாலே கொண்டாட்டம், கேக், பட்டாசு என்றுதான் நமக்குத் தோன்றும். ஆனால், ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னால் ஒரு உன்னதமான நோக்கம் ஒளிந்திருக்கிறது. அதுதான் ‘உலகளாவிய குடும்ப தினம்’ (Global Family Day). “உலகமே ஒரு குடும்பம்” என்கிற உயரிய தத்துவத்தை உலகிற்கு உரக்கச் சொல்லும் நாள் இன்று. எப்படித் தொடங்கியது இந்த தினம்? இந்த தினத்தின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. 1997-ல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, வரும் காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்காக […]

January 1, 2026 admin
உலகளாவிய அமைதி நேரம்: மௌனத்தின் வழி மனிதாபிமானம்! Exclusive

உலகளாவிய அமைதி நேரம்: மௌனத்தின் வழி மனிதாபிமானம்!

ஆண்டுதோறும் டிசம்பர் 31-ம் தேதியை உலகம் புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஆரவாரத்தோடும், வாணவேடிக்கை சத்தங்களோடும் அணுகுகிறது; இத்தகைய கொண்டாட்ட ஆரவாரங்களுக்கு மத்தியில்தான், இன்றைய உலகச் சூழலில் அமைதியின் அவசியம் உணரப்பட்டு, ஆண்டுதோறும் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 11:30 மணி முதல் ஜனவரி 1 அதிகாலை 12:30 மணி வரையிலான அந்த ஒரு மணி நேரம், ‘அமைதிக்கான சர்வதேச நேரமாக’ (Universal Hour of Peace Day) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. போர்களும், வன்முறைகளும், அதிகாரப் போட்டிகளும் மலிந்துவிட்ட […]

December 31, 2025 admin
டிசம்பர் 31: வணிகப் பிடியில் சிக்கிய பாரதம்… விடுதலையாய் சிலிர்த்தெழுந்த நள்ளிரவு! Exclusive

டிசம்பர் 31: வணிகப் பிடியில் சிக்கிய பாரதம்… விடுதலையாய் சிலிர்த்தெழுந்த நள்ளிரவு!

உலகம் முழுவதும் டிசம்பர் 31-ம் தேதியை கொண்டாட்டங்களுக்கும், புத்தாண்டு வரவேற்பிற்குமான இரவாகக் கருதி மகிழும் வேளையில், இந்திய வரலாற்றின் பக்கங்களில் இத்தேதி ஒரு தீர்க்கமான முரண்பாட்டைக் கொண்டிருக்கிறது; 1600-ம் ஆண்டு இதே நாளில் லண்டன் மாநகரில் ராணி எலிசபெத் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கிய வர்த்தக அனுமதி, வெறும் நறுமணப் பொருட்கள் வணிகத்திற்கானதாகத் தொடங்கி, பின்னாளில் ஒரு மாபெரும் தேசத்தையே 350 ஆண்டுகால அடிமைச் சங்கிலியில் பிணைத்த கசப்பான தொடக்கப் புள்ளியாக அமைந்தது. வியக்கத்தக்க வரலாற்றுச் சுழற்சியாக, அதே […]

December 31, 2025 admin
தேசிய நுகர்வோர் தினமின்று:விழிப்புணர்வே நுகர்வோரின் கவசம்! Exclusive

தேசிய நுகர்வோர் தினமின்று:விழிப்புணர்வே நுகர்வோரின் கவசம்!

“நீரின்றி அமையாது உலகு” என்பது போல, நுகர்வின்றி எந்த மனித வாழ்வும் அமையாது. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நுகர்வோராகவே இருக்கிறோம். இந்த நுகர்வோரின் நலனைப் பேணவும், வணிகச் சுரண்டல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 24-ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வரலாற்றுப் பின்னணி: போராட்டமும் அங்கீகாரமும் நுகர்வோர் பாதுகாப்பு என்பது இன்று நேற்றல்ல, 1800-களிலேயே அமெரிக்காவில் இதற்கான விழிப்புணர்வுத் தீப்பொறி உருவானது. […]

December 24, 2025 admin
தேசிய விவசாயிகள் தினம்: சரண் சிங் நினைவும்… மறக்கக்கூடாத நிதர்சனமும்! Exclusive

தேசிய விவசாயிகள் தினம்: சரண் சிங் நினைவும்… மறக்கக்கூடாத நிதர்சனமும்!

இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளைச் சிறப்பிக்கும் வகையில், இன்று (டிசம்பர் 23) தேசிய விவசாயிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர்  சரண் சிங்கின் பிறந்தநாளான இன்று, விவசாயிகளின் பங்களிப்பை நினைவு கூரும் அதே வேளையில், அவர்கள் சந்திக்கும் துயரங்களை உரக்கச் சொல்ல வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது. யார் இந்த சவுத்ரி சரண் சிங்? இந்தியாவை 10-க்கும் மேற்பட்ட பிரதமர்கள் ஆண்டிருந்தாலும், சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாகக் கொண்டாடுவதற்கு வலுவான காரணங்கள் உண்டு. […]

December 23, 2025 admin
தேசியக் கணித நாள்:கணித மேதை ராமானுஜன் நினைவுக் குறிப்புகள்! Exclusive

தேசியக் கணித நாள்:கணித மேதை ராமானுஜன் நினைவுக் குறிப்புகள்!

அறிவியலுக்கு அன்னை என்றும், அனைத்துத் துறைகளின் ஆணிவேர் என்றும் அழைக்கப்படுவது கணிதம். உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா வழங்கிய பங்களிப்பு ஈடு இணையற்றது. குறிப்பாக, ‘பூஜ்ஜியம்’ (Zero) என்ற மாபெரும் தத்துவத்தை உலகுக்கு அறிமுகம் செய்ததே இந்தியாதான். ஆரியபட்டாவுக்குப் பின் 16-ம் நூற்றாண்டில் கணிதத்துறையில் சற்று பின்தங்கியிருந்த இந்தியாவை, 20-ம் நூற்றாண்டில் மீண்டும் உலக அரங்கில் தலைநிமிரச் செய்தவர் மாமேதை சீனிவாச ராமானுஜன். 10 வயதில் ஆசிரியரை அதிரவைத்த கேள்வி! 1887 டிசம்பர் 22-ல் ஈரோட்டில் […]

December 22, 2025 admin
உலக தியான நாளின்று – ‘நான்’ யார் என்பதை உணரும் ஒரு பயணம்! Exclusive

உலக தியான நாளின்று – ‘நான்’ யார் என்பதை உணரும் ஒரு பயணம்!

மன மற்றும் உணர்வு ரீதியான நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 21-ம் தேதியை ‘உலக தியான நாளாக’ (World Meditation Day) அறிவித்துள்ளது. இன்றைய அவசர உலகில், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அமைதி எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் வருடாந்திர நிகழ்வாக இது அனுசரிக்கப்படுகிறது. தியானம் என்பது ஒரு மதம் சார்ந்த சடங்கு அல்ல; அது ஒரு உள்நிலை விஞ்ஞானம். அதைப்பற்றிய ஒரு விரிவான அலசல் இதோ: உண்மையில் தியானம் என்றால் என்ன? பொதுவாகக் […]

December 21, 2025 admin
பெண் துறவு காத்த அசோகரின் மகள் – இன்று சங்கமித்தை நாள்! Exclusive

பெண் துறவு காத்த அசோகரின் மகள் – இன்று சங்கமித்தை நாள்!

வரலாற்றின் பக்கங்களில் போர்களும், ரத்தமும் படிந்த கதைகளுக்கு மத்தியில், அமைதியையும் அன்பையும் சுமந்து சென்ற ஒரு புனிதப் பயணத்தின் நினைவு நாள் இன்று. ஆம், இன்று டிசம்பர் 21 – சங்கமித்தை நாள். தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றும் மக்களால் உலகம் முழுவதும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு புனிதத் திருநாள். தேரவாதம்: பழமையின் பாதை புத்தரின் போதனைகள் காலப்போக்கில் பல கிளைகளாகப் பிரிந்தன. மகாயானம், வஜ்ரயானம், சர்வாஸ்திவாதம் எனப் பல பிரிவுகள் இருந்தாலும், பௌத்தத்தின் மிகப் பழமையான […]

December 21, 2025 admin
மனிதாபிமானப் படை:‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ அமைப்பின் வீர வரலாறு! Exclusive

மனிதாபிமானப் படை:‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ அமைப்பின் வீர வரலாறு!

மருத்துவ உலகில் ‘சுயாதீனமான செயல்பாடு’ மற்றும் ‘சாட்சியம் அளித்தல்’ (Témoignage) ஆகிய இரண்டு ஆயுதங்களைக் கொண்டு உலகெங்கும் உள்ள போர் முனைகளிலும், பேரிடர் பகுதிகளிலும் உயிர்களைக் காக்கும் பணியைச் செய்து வருகிறது Médecins Sans Frontières (MSF) எனப்படும் ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ அமைப்பு. ஆம்.. உலகில் எந்த இடத்தில்  போர் மூண்டாலும் சரி, இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்தாலும் சரி, எவ்வித அரசியல் லாபமோ, மத அடையாளமோ இன்றி முன்னால் வந்து நிற்பது ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ (Doctors Without Borders) […]

December 20, 2025 admin
உடனடி செய்திகள்