32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 99 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 99)
மேரேஜ் மெட்டிரியலாகத்தான் இந்திய சமூகம் 80 % பெண்களை வைத்துள்ளது! Exclusive

மேரேஜ் மெட்டிரியலாகத்தான் இந்திய சமூகம் 80 % பெண்களை வைத்துள்ளது!

“செருப்பால் அடிக்கனும்” – ஆம்.. கொஞ்சம் பச்சையாக் பேசப்போகிறேன் . சமூகத்திற்கான கோபம் இது. பெண்கள் முன்னேறிவிட்டார்கள், அவர்களுக்கு என்ன சிக்கல், 2023 ல் ஏன் இப்படி பெண் முன்னேற்றம் பேசுகிறீர்கள் என்று பேசும் பலருக்கான பதில் மேலே உள்ளது. பாலியில் சீண்டல் பேருந்தில் வந்தால் நான் முதல் வரியை செய்வேன். அப்படிப்பட்ட உணர்வை பெண் முன்னேற்றதிற்கு எதிர் கருத்து கொண்டிருப்பவர்கள் மேல் கொண்டேன். நேற்று முதன் முதலில் 16 வயது குழந்தை தன் குழந்தையுடன் இருந்ததை பார்த்தேன். […]

March 31, 2023 admin
மூன்றாவது உலகப்போர் மூளும் : பிறகு? Exclusive

மூன்றாவது உலகப்போர் மூளும் : பிறகு?

இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் உலகில் நடந்த போர்களில் அதற்கு காரணம் யார் என்று பார்த்தால் கண்டிப்பாக அதன் பின்னால் அமெரிக்கா இருக்கும். அப்படிப்பட்ட போர்கள் வரும்போதெல்லாம், அமெரிக்காவின் பொருளாதாரம் அடிவாங்கி இருக்கும் அல்லது, போரில் தாக்கப்படும் நாடு, அமெரிக்க பொருளாதார ஆதிக்கத்திற்கு எதிரானதாக இருக்கும். உக்ரைன் போருக்கு முன்பு, போர் ஆரம்பிப்பது, முடிப்பது எல்லாம் அமெரிக்காவின் கையில்தான் இருந்தது, இன்று அது கைவிட்டுப்போனது. அதற்கு இரண்டு காரணம், அமெரிக்காவின் நேட்டோ அணியை யாரும் வெல்ல முடியாது என்ற […]

March 30, 2023 admin
பீகார் ஆக மாறும் தமிழ்நாடு Exclusive

பீகார் ஆக மாறும் தமிழ்நாடு

பீகார் மாநிலத்தின் பாகல்பூர்.. 1979 -1980 -விஷ்ணு தயாள் ராம் என்ற காவல்துறை கண்காணிப்பாளரின் பணிக்காலத்தில் பாகல்பூர் பகுதியில் குற்றங்களை குறைப்பதற்கு ஒரு குரூரமான முறை அமல்படுத்தப்பட்டது. அது குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்களில், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு ஊசி போடும் சிரிஞ்ச் வழியாக அமிலத்தை ஊற்றி அவர்களுடைய கண் பார்வையை நிரந்தரமாக பறிப்பது. அதன் மூலம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் பாவத்தை போக்குவது. அவ்வாறு சுமார் 33 நபர்களின் கண் பார்வை நிரந்தரமாக பறிக்கப்பட்டதாக அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. […]

March 29, 2023 admin
கருத்துரிமையில் அவதூறு செய்யும் உரிமையும் அடங்கும்! Exclusive

கருத்துரிமையில் அவதூறு செய்யும் உரிமையும் அடங்கும்!

கடந்த மூன்று நாட்களாக ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. அவர் செய்தது தவறு என்று பாஜக அபிமானிகள் தவிர யாருமே சொல்லவில்லை என்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. காரணம், ‘மோடி என்ற பெயர் கொண்ட எல்லாரும் திருடர்களாக இருக்கிறார்களே, அது எப்படி?’ என்று ராகுல் எழுப்பிய கேள்வி அவதூறு வகையை சேர்ந்தது. அந்த வாக்கியம் பிரதமரை நேரடியாக ‘திருடன்’ என வர்ணிக்கிறது. கூடவே ‘மோடி’ என்ற surname கொண்ட லட்சக்கணக்கானோரையும் அவதூறுக்கு உள்ளாக்குகிறது. நியாயமாக […]

March 26, 2023 admin
ராகுல் எம்.பி. பதவி பறிபோனதற்கான அடிப்படை காரணம் என்ன தெரியுமா? Exclusive

ராகுல் எம்.பி. பதவி பறிபோனதற்கான அடிப்படை காரணம் என்ன தெரியுமா?

இரண்டு நாட்கள் முன் வரை எம்பியாக இருந்த ராகுல் காந்தி, தற்போது தனது அந்த பதவியை இழந்து நிற்கிறார். அவரது பதவி பறிபோனதற்கான அடிப்படை காரணம் மோடி குறித்து அவர் பேசியது அல்ல; மாறாக, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சரி என்று நினைத்து செய்த ஒரு செயல்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அந்த செயல் என்ன என்பதையும், எப்படி அவரே தனது இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக […]

March 25, 2023 admin
லாட்டரி திட்டம் மூலம் அரசுக்கு மிகத் துல்லியமான வரி வசூல்! Exclusive

லாட்டரி திட்டம் மூலம் அரசுக்கு மிகத் துல்லியமான வரி வசூல்!

ஒரு நாட்டின் வரி வசூலை உடனடியாக 75% அதிகப்படுத்தவேண்டும். கண்டிஷன்கள்: அதிரடி ரெய்டுகள் கூடாது. வரிகளை அதிகப்படுத்தக்கூடாது. மக்கள் கழுத்தில் கத்தி வைக்கக்கூடாது. ஒரே ஒருமுறை வரி கட்டி உங்கள் பாவ மன்னிப்பை வாங்கிக்கொண்டு பழைய ப்ராடுகளை கழுவிக்கொள்ளுங்கள் போன்ற அறிவிப்புகள் கூடாது. இந்த வரி வசூல் என்பது அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பங்கேற்கும் ஒன்றாக இருக்கவேண்டும். வாய்ப்பே இல்லை என்று தோன்றும் இந்தக் கண்டிஷன்களை வைத்து அனாயசமாக டீல் செய்து மொத்த நுகர்வோர்களையும் […]

March 22, 2023 admin
நாடெங்கும் விற்பனைப் பொறுப்புகளில் பாலின இடைவெளி! Exclusive

நாடெங்கும் விற்பனைப் பொறுப்புகளில் பாலின இடைவெளி!

இந்தியாவில் விற்பனைத் துறையின் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் 13% மட்டுமே உள்ளனர் என்றும், இந்தியாவில் விற்பனைப் பணியாளர்களில்/ விற்பனைத்துறை உழைப்புச் சக்தியில் பெண்கள் 19% மட்டுமே உள்ளனர் என்றும் உலகின் மிகப் பெரிய இணைய தொழில் முறை வலைத்தளம் லிங்க்ட் இன் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண் விற்பனை நிர்வாகிகள் ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை போன்ற அடுக்கு 1 நகரங்களில் உள்ளனர். தகவல் தொழில் நுட்பச் சேவைகள், சில்லறை விற்பனைத் துறைகள் ஆகியவை […]

March 22, 2023 admin
இனி யுடியூப் பேட்டிகளும் வேண்டாம் என்று ஒதுக்கப் போகிறார்கள்! Exclusive

இனி யுடியூப் பேட்டிகளும் வேண்டாம் என்று ஒதுக்கப் போகிறார்கள்!

மதன் ரவிச்சந்திரனும், வெண்பா கீதாயனும் அளித்துவரும் அவர்களின் ஸ்டிங்க் ஆபரேஷன் வீடியோக்கள் பார்க்கும்போது.. முதலில் அவர்கள் இருவரின் தைரியத்தை வியக்கத் தோன்றுகிறது. அடுத்து.. ஜனநாயகத்தில் பொறுப்புமிக்க நான்காவது தூண் என்று மதிக்கப்படும் ஊடகத்துறையிலும் நேர்மையைக் கழற்றி மதுவுக்கும், கரன்சிக்கும், தங்கத்திற்கும், எலெக்ட்ரானிக் பொருள்களுக்கும் விலை போகிற நபர்களின் நிஜ முகங்கள் பார்க்க..அருவெறுப்பாக இருக்கிறது. இவரா, இவருமா என்று அதிர்ச்சியாக இருக்கிறது. ஊடகத் துறை என்றில்லை, கல்வி, மருத்துவம், ஆன்மிகம், விளையாட்டு, கலை என்று எந்தத் துறையில் இது […]

March 18, 2023 admin
பள்ளி இறுதி பொதுத் தேர்வுக்கு 50000 பேர் வரவில்லை.. ஏன்?! Exclusive

பள்ளி இறுதி பொதுத் தேர்வுக்கு 50000 பேர் வரவில்லை.. ஏன்?!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 3,225 தேர்வு மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுவதற்காக பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ப்ளஸ் டூ ஆங்கில பொதுத்தேர்வில், 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற தமிழ் பொதுத்தேர்விலும் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. […]

March 16, 2023 admin
ரம்மி : அன்றும் இன்றும்! Exclusive

ரம்மி : அன்றும் இன்றும்!

இன்று தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்படும் ‘ஆன்லைன் ரம்மி’ பற்றி யோசித்துப் பார்க்கிறேன்… இன்று கெளரவமான விளையாட்டாகக் கருதப்படும் இது, நான் சிறுவனாக கிராமத்தில் இருந்தபோது (சுமார் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு) ‘சீட்டாட்டம்’ என்றே அருவருப்புடன் அழைக்கப்பட்டது. நான் முதன்முதலில் இந்த சீட்டுக் கட்டைத் தொட்டுப் பார்த்ததும் ‘அதையெல்லாம் தொடக்கூடாது’ என்று என் தந்தை அதை வெடுக்கென்று பிடுங்கி எறிந்ததும் இப்போது என் நினைவுக்கு வருகிறது. அந்த சீட்டுக் கட்டு எப்படி என் கைக்கு வந்தது? அப்போதெல்லாம் […]

March 16, 2023 admin
உடனடி செய்திகள்