June 1, 2023

லாட்டரி திட்டம் மூலம் அரசுக்கு மிகத் துல்லியமான வரி வசூல்!

ரு நாட்டின் வரி வசூலை உடனடியாக 75% அதிகப்படுத்தவேண்டும்.

கண்டிஷன்கள்:

அதிரடி ரெய்டுகள் கூடாது.
வரிகளை அதிகப்படுத்தக்கூடாது.
மக்கள் கழுத்தில் கத்தி வைக்கக்கூடாது.
ஒரே ஒருமுறை வரி கட்டி உங்கள் பாவ மன்னிப்பை வாங்கிக்கொண்டு பழைய ப்ராடுகளை கழுவிக்கொள்ளுங்கள் போன்ற அறிவிப்புகள் கூடாது.
இந்த வரி வசூல் என்பது அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பங்கேற்கும் ஒன்றாக இருக்கவேண்டும். வாய்ப்பே இல்லை என்று தோன்றும் இந்தக் கண்டிஷன்களை வைத்து அனாயசமாக டீல் செய்து மொத்த நுகர்வோர்களையும் டாக்ஸ் இன்ஸ்பெக்டர்களாக மாற்றிய நாடுதான்.. தைவான்.


[email protected]
1950-51 -தைவான் அரசு ஒரு அறிவிப்பினை வெளியிடுகிறது.

ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் அரசாங்கத்தால் லாட்டரி குலுக்கல் நடத்தப்படும். முதல் பரிசு இவ்வளவு, பம்பர் இவ்வளவு, இரண்டாம் பரிசு இவ்வளவு என்று பரிசுத்தொகை அறிவிக்கப்படுகிறது. அதுதான் கேரளாவுலயே இருக்கே, சமீபத்தில் சேட்டன் ஒருவர்கூட பெட்ரோல் ஊற்றி ஒரு லாட்டரி கடைக்கு தெவசம் பண்ணினாரே என்கிறீர்களா?

அங்கேதான் அருமையாக ஒரு டிவிஸ்ட்டை வைத்தார்கள் தைவான் ஆட்சியாளர்கள். தைவானில் விற்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் வழங்கப்படும் இன்வாஸில் அதாங்க பில், ஒரு குறிப்பிட்ட வரிசை எண்கள் வழங்கப்பட்டது. இந்த வரிசை எண்தான் உங்களுக்கான பரிசு எண்.
அந்த பில்தான் லாட்டரி டிக்கெட். அந்த பில்லில் இருக்கும் எண் லாட்டரி அடித்தால் உங்களுக்குப் பரிசு.

மக்கள் மூக்குப் பொடி, சொக்கலால் பீடி வாங்கினாலும், பில்லு குடுய்யா என் சிப்ஸு என்று கேட்டு வாங்கி குட்டிப் போடும் மயிலிறகைப் போல பத்திரப்படுத்தினார்கள்.

லாட்டரி முடிவுகள் வெளி வரும்போது பரிசு விழுந்திருக்கிறதா என்று பார்க்கலானார்கள்.

என்ன ஒரு ஐடியா?

டாக்ஸ் இல்லாம போடுங்க சேட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. 200 ரூவா டாக்ஸ் பில்லுக்கு 10 லட்சம் லாட்டரி அடித்தால் யாருக்கு நட்டம்? உட்கார்ந்த இடத்தில் வரி வசூல் விண்ணைப் பிளந்தது.

2011 ம் ஆண்டில் பணவீக்கம்லாம் வந்துடுச்சிப்பா, ஒரே அமவுண்ட் குடுத்தா எப்படி என்று பரிசுப் பணத்தை அதிகரித்து எல்லாம் மக்கள் வயிற்றில் பம்பர் பரிசை வார்த்திருக்கிறார்கள்.

மக்களிடம் பெருவதிலிருந்தே மக்களுக்குத் திருப்பி அளிக்கவேண்டும் எளிய கான்செப்ட். இருபக்கமும் வெற்றி. சூதாட்டத்திலும் ஒரு நேர்மை.
பில் வாங்குவதை நீதி, நேர்மை, நாட்டுப்பாதுகாப்பு, எல்லையில் ராணுவ வீரர்கள் என்று சோகத்தைப் பிழியாமல் மக்களே வெறித்தனமாக வரிகள் செலுத்திய பில்லை வாங்க இது வழி செய்தது. வரி ஏய்ப்புகள் குறைந்தது. வெறும் 9 லட்சமாக இருந்த வரி வசூல் இந்த திட்டம் அறிவித்த உடன் 13 கோடியாக வசூலானது.

சூதாட்டம் அரசுக்கு தெரியாத வழியில் பெட்டிங் எல்லாம் இல்லாமல், நேர்மையான லீகலான வழியில் இந்த லாட்டரி திட்டம் அரசுக்கு மிகத் துல்லியமான வரி வசூல் டாட்டாக்களை வழங்கியது. இப்படியாக தைவானின் பில் வாங்கி வரிகட்டினால் லாட்டரி என்பது பெரும் வரி வருமானத்தை அரசுக்கு ஈட்டித்தந்தது.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்” – ஔவையார்

தகவல் உதவி – Twitter.
புத்தகம் – Actionable Gamification – Yu Kai Chou
https://www.etax.nat.gov.tw/etwmain/en/etw183w

சங்கர் ஜி