32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 95 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 95)
ஆசிரியர் தொழில் எனக்கு சரிப்படவில்லை. விருப்ப ஓய்வில் செல்வதுதான் ஒரே வழி! Exclusive

ஆசிரியர் தொழில் எனக்கு சரிப்படவில்லை. விருப்ப ஓய்வில் செல்வதுதான் ஒரே வழி!

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், மறுதேர்வுக்கு ஒரு வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டும்..ஆனால் தேர்ச்சியடையாத மாணவர்களில் ஓரிருவர் தவிர பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வந்து மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க வில்லை. இறுதிநாள் நெருங்கிக் கொண்டிருந்தது.மாணவர்களைத் தொலைபேசியில் அழைத்தபோது, அலைபேசிகள் அணைத்து வைக்கப் பட்டிருக்கின்றன. ஆசிரியர்களின் எண்களை ப்ளாக் செய்து வைத்திருக்கிறார்கள்..வேறு அலைபேசியில் அழைத்தால் குரல் கேட்டவுடன் கட் செய்து விடுகிறார்கள். பெற்றோர்க்கு அழைத்தாலும் எடுப்பதில்ல.பொறுப்பான பதிலில்லை. மாணவர்கள் ஊருக்குப் போயிருக்கிறார்கள் எப்போது […]

June 10, 2023 admin
ஒரு டாக்டர் 16000 உயிர் காக்கும் சிகிச்சைகளை செய்திருக்க முடியுமா? Exclusive

ஒரு டாக்டர் 16000 உயிர் காக்கும் சிகிச்சைகளை செய்திருக்க முடியுமா?

ஜூன் 6, அதிகாலை .. சகோதரர் மருத்துவர். கவுரவ் காந்தி அவர்கள் இதய செயல் முடக்கத்தால் மரணித்தார். இதய நோய் சிறப்பு நிபுணரான அவர் இதய செயல் முடக்கத்திற்கு உள்ளாகி மரணித்த செய்தி எஃகுக் கோட்டைக்குள் நாம் இருப்பினும் மரணத்தை வெல்ல நம்மால் முடியாது எனும் சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது. அனைவரும் தான் பிறக்கிறோம் வாழ்கிறோம்.. இறக்கிறோம் .. ஆனால் சிலர் மட்டுமே பிறர் வாழ தங்களின் வாழ்வை மெழுகுவர்த்தி போலக் கரைத்து வாழ்கின்றனர். “பகிர்ந்தாலும் தீ […]

June 8, 2023 admin
அரசியலுக்கு ஒற்றை முகம் அல்ல; பல முகங்கள் உண்டு! Exclusive

அரசியலுக்கு ஒற்றை முகம் அல்ல; பல முகங்கள் உண்டு!

எதேச்சையாக இன்றை என் கண்ணில் தட்டுப்பட்டது ஒரு கட்டுரை. அது இன்றைய ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுதி பயோனியர் பத்திரிக்கையில் 2012-ஆம் ஆண்டு மே 14 அன்று வெளியான கட்டுரை. அழகாகவும் அருமையாகவும் எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரையை மறுவாசிப்பு செய்தேன். அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் திருமணம் வேறு பெங்களூரில் நேற்று (ஜூன் 7) எளிமையான முறையில் நடந்ததுள்ளது.கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாஎம்.பி.,யாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூரு ஜெயநகரில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். யாருடைய ஆருடத்திற்கும் […]

June 8, 2023 admin
2024 வெறும் நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் குறிக்கவில்லை. Exclusive

2024 வெறும் நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் குறிக்கவில்லை.

இந்திய வரலாற்றில் 1947-ஐ விட 2024 மிக மிக முக்கியமானது. இந்தியாவின் தேசியப் பாதுகாப்பை, இறையாண்மையை, ஒருமைப்பாட்டை, சமூக அமைதியை, வருங்காலத்தை, ஏன் ஒட்டுமொத்த இருப்பையே 2024- தான் தீர்மானிக்கும். ஆனால் அன்றாட வாழ்க்கையைக் கழிப்பதிலேயே கவனம் செலுத்தும் ஏழைபாழைகளுக்கு இது தெரியாது. ஓரளவு கல்வியும், செல்வமும், ஏராளமான (சாதி மதம் கலந்த) தேசிய உணர்வும் பெற்றிருக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த, இந்திய அரசியல் மற்றும் குடிமைச் சமூகங்களில் சஞ்சரிக்கும் பலருக்கு மேற்படி உண்மை புரியாது, புரியவில்லை. […]

June 6, 2023 admin
இப்படியான விபத்துகளில் அரசுகள் பாடம் கற்றுக்கொள்ளும் பக்குவத்தை கடந்து விட்டன! Exclusive

இப்படியான விபத்துகளில் அரசுகள் பாடம் கற்றுக்கொள்ளும் பக்குவத்தை கடந்து விட்டன!

கிட்டத்தட்ட ஐம்பது சதவீத ஊழல். ஊழியர் பற்றாக்குறை, நிர்வாகக் குளறுபடிகளால் பராமரிப்பின்மை இவற்றால் எளிய மக்களின் பொதுப் போக்குவரத்து பெரும் நம்பிக்கை இழப்பிற்கு உள்ளாகி இருக்கிறது இந்த விபத்தின் மூலம். ரயில் பயணம் -அன்றாடக் கூலி வேலைகளுக்காக வடக்கிலிருந்து தென் மாநிலங்களை நோக்கி வருவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தென் மாநிலங்கள் கல்வி வசதி பெற்றுள்ளதால் உதிரி உடல் உழைப்பிற்குப் போதிய ஆட்கள் கிடைப்பது கடினம் என்ற நிலை இருப்பது ஒரு பகுதி […]

June 4, 2023 admin
50 ஆயிரம் கோடி வருமானம் பார்த்த IPL வரி ஏய்ப்பு செய்கிறதா? Exclusive

50 ஆயிரம் கோடி வருமானம் பார்த்த IPL வரி ஏய்ப்பு செய்கிறதா?

இப்போது IPL வரி செலுத்தாமல் ஏமாற்றுகிறது என்றால் உபிஸ் தங்கள் கேடி பிரதர்ஸ் மற்றும், கோல்மால் புரத்தின் கார்ப்பரேட் முதலாளிகளைத் தான் இவர்கள் குறிவைக்கிறார்கள் என்று ஒரு பக்கம் தாக்குகிறார்கள். மறுபக்கம் இந்த வருமான வரித்துறை மத்திய அரசின் கீழ் உள்ளது என்பதால் மோடி தவறு செய்கிறார் என்று குற்றம் சொல்வதாக நினைத்து சங்கிகள் ஒரு பக்கம் திட்டுகிறார்கள். இது எங்கள் தல தோனியை இழிவு படுத்தவதாக இன்னொருபுறம் தாக்குதல். எல்லோரும் எமோஷனலாகவே சிந்திக்கிறார்கள்(அந்த கமெண்ட்களை கூகுள் […]

June 2, 2023 admin
அகாடா என்றழைக்கப்படும்  மல்யுத்த மைதானத்துக்கு வெளியே …! Exclusive

அகாடா என்றழைக்கப்படும் மல்யுத்த மைதானத்துக்கு வெளியே …!

டெல்லியில் கடந்த ஐந்து மாதங்களாக ஒரு துயர நாடகம் அரங்கேறி வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இயங்குபவர் ப்ரஜ் பூஷண் சரண் சிங். இவர் பாஜக எம்பியும் கூட. உத்திரப் பிரதேச பாஜகவின் அதிமுக்கிய தலைவர். சென்ற ஜனவரி மாதம் இவர் மீது பாலியல் அத்துமீறல், நிதி மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை மல்யுத்த வீர்களும் வீராங்கனைகளும் வைத்தார்கள். அவை எதன் மீதும் தீவிர நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது […]

June 1, 2023 admin
ஐரோப்பிய பொருளாதாரத்தை வீழ்த்தும் நேட்டோ ராணுவம்! Exclusive

ஐரோப்பிய பொருளாதாரத்தை வீழ்த்தும் நேட்டோ ராணுவம்!

அமெரிக்காவின் வழிகாட்டுதலில் நேட்டோ (NATO) ராணுவக் கூட்டணியின் சமீப நடவடிக்கைகள் அனைத்துமே ரஷ்யாவை வீழ்த்த வழி காண்பது மட்டுமே என்று தெரிகிறது. உக்ரைனில் அமைதியை நிலைநாட்டப் போகிறோம் என்றார்கள் அல்லவா? அதாவது உக்ரைனில் அமைதி திரும்ப நடவடிக்கைகள் என்ன எடுத்தார்கள்? அதைக் கேட்கும் அதிகாரம் ஐநா சபைக்கு நிச்சயம் இருக்கிறது. ஆனால் இதுவரை அமெரிக்காவின் கூட்டாளிகளான நேட்டோ நாடுகள் ரஷ்யாவை வீழ்த்த எடுத்து வரும் முயற்சிகள் உலக வரலாற்றை மாற்றியமைக்கும் நடப்புகளாக மாறி இருக்கிறது. இப்படி நேரடியாக […]

May 31, 2023 admin
செங்கோல் உருட்டுகள் நடப்பதன் காரணம் என்ன தெரியுமோ?..! Exclusive

செங்கோல் உருட்டுகள் நடப்பதன் காரணம் என்ன தெரியுமோ?..!

பாஜகவினர் – அது மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிற பிரதமர் ஆனாலும் சரி, உள்துறை அமைச்சர் ஆனாலும் சரி, பேஸ்புக்கில் இருக்கிற அரைவேக்காடுகள் ஆனாலும் சரி – பொய்களை கட்டுக்கட்டாக அவிழ்த்து விடுவார்கள் என்பது உலகுக்கே தெரிந்த விஷயம். எனவே, செங்கோல் விஷயத்தில் சொன்னதும் உருட்டுதான் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை. ஏன் என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் தெளிவாக்குகிறேன். செங்கோல் விஷயத்தில் அமித் ஷா உருட்டியது என்ன? மே மாதம் 28ஆம் தேதி நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் […]

May 27, 2023 admin
வாளாக சுழற்றி அடிக்கும் செங்கோல் ..! Exclusive

வாளாக சுழற்றி அடிக்கும் செங்கோல் ..!

“செங்கோல் விவகாரத்தில் whatsapp பல்கலைக்கழக தகவல்களை வைத்துக்கொண்டு கதை அளந்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.ஆட்சி மாற்றத்தின் அடையாள என செங்கோலை நேருவிடம் மவுண்ட் பேட்டர்ன் பிரபு கொடுத்ததற்கான அரசு ஆவணம் எதுவும் இல்லை” – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொல்லுகிறார் என்றால் திருவாவடுதுறை ஆதீனம் நேருவிடம் செங்கோல் கொடுத்தார் என்று. செங்கோலின் மகத்துவத்தை தெரியாமல் நேரு அதை ஒரு வாக்கிங் ஸ்டிக் போல கருதி அலகாபாத் மியூசியத்திற்கு […]

May 27, 2023 admin
உடனடி செய்திகள்