50 ஆயிரம் கோடி வருமானம் பார்த்த IPL வரி ஏய்ப்பு செய்கிறதா?

50 ஆயிரம் கோடி வருமானம் பார்த்த IPL வரி ஏய்ப்பு செய்கிறதா?

ப்போது IPL வரி செலுத்தாமல் ஏமாற்றுகிறது என்றால் உபிஸ் தங்கள் கேடி பிரதர்ஸ் மற்றும், கோல்மால் புரத்தின் கார்ப்பரேட் முதலாளிகளைத் தான் இவர்கள் குறிவைக்கிறார்கள் என்று ஒரு பக்கம் தாக்குகிறார்கள். மறுபக்கம் இந்த வருமான வரித்துறை மத்திய அரசின் கீழ் உள்ளது என்பதால் மோடி தவறு செய்கிறார் என்று குற்றம் சொல்வதாக நினைத்து சங்கிகள் ஒரு பக்கம் திட்டுகிறார்கள். இது எங்கள் தல தோனியை இழிவு படுத்தவதாக இன்னொருபுறம் தாக்குதல். எல்லோரும் எமோஷனலாகவே சிந்திக்கிறார்கள்(அந்த கமெண்ட்களை கூகுள் சர்ச்சில் பார்த்தால் தெரியும்? :-))

ஆனால் உண்மை என்ன என்பதை புரிந்து கொள்ள மட்டும் நாம் யாரும் பொதுவாக யோசிப்பதில்லை. அதாவது முற்றிலும் தான் சார்ந்த கட்சியின் சார்பு நிலை எடுப்பதால் நாம் செய்யும் தவறுதான், அரசியல் கட்சிகளை தவறு செய்யத்தூண்டும் எரிபொருள். அதனால் அதை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, அதன் உண்மையான பின்னணி என்ன என்பதை புரிந்து கொள்ள ஒரு முயற்சி. IPL நிறுவ்ணம் BCCI நிறுவனத்தின் ஒரு துணை அமைப்பு. அது தான் கிரிக்கெட்டை வளர்க்க ஏற்படுத்தப்பட்டதால் அவ்வாறு சொல்லிக் கொள்கிறது. அது சாரிட்டி அமைப்பாக பிஸினெஸ் செய்யும் அது ஒரு பொருளை அம்பானியிடம் கொடுக்கும்போது அதற்கு வரி இல்லை. ஆனால் Branchise எடுத்த அம்பானி நிறுவனம் ஒரு பிரைவேட் அல்லது கார்ப்பொரேட் நிறுவனம, அதை சந்தையில் விற்கும்போது அதற்கு அம்பானி நிறுவனம் கட்டாயம் வரி செலுத்தும் என்பதால் IPL கட்டும் வரிதான் அது என்று ஆகாது.

அதை வேறு வகையில் ஒரு உதாரணத்துடன் விளக்கலாம். ஏர்டெல் நிறுவனம் ஒரு கார்பொரேட் நிறுவனம். அந்த நிறுவனம் அலைவரிசையை அரசாங்கத்திடம் இருந்து பணம் கட்டி ஏலம் எடுக்கிறது. அதன் மூலம் அரசுக்கு வருமானம். அதன் பின்பு பலவகைகளில் அது வாங்குகிற அல்லது செலவு செய்கிற ஒவ்வொரு பொருட்களுக்கும் GST செலுத்துகிறது. கடைசியில் அது நமக்கு சர்வீஸ் செய்யும்போது ஒரு ₹1000 Broadband ஐ விற்க அதற்கு 18% GST வரியாக ₹180 நம்மிடம் வாங்கி அதை அரசுக்கு செலுத்துகிறது. கடைசியில் அது லாபம் ஈட்டிய பின்பு வரும் Net Profit என்ற லாபத்திற்கும் 25% வரி செலுத்துகிறது. (அப்படி பார்த்தால் அதிகம் லாபம் பார்ப்பது அரசாகத்தான் இருக்கும். அது என்ன செயகிறது? என்ன செய்ய வேண்டும் என்பதை தனி பதிவாக செய்கிறேன்) இப்போது ஏர்டெல் நிறுவனம் தன்னை சாரிட்டியாக அறிவித்துகொள்கிறது என்றால், அது விற்கும் அந்த Broadband சர்வீஸுக்கு 18% வரி செலுத்தாது. ஆனால் அந்த Biradband சர்வீஸை கொண்டு நான் நடத்தும் தொழிலுக்கு நான் வரி செலுத்துகிறேன். அப்படிய் என்றால் ஏர்டெல் சாரிட்டி வரி செலுத்துதவாதக் அர்த்தம் இல்லை.

IPL க்கு ஆதரவாக பேசுபவர்கள் இப்படித்தான் அம்பானி செலுத்தும் வரியை IPL வரி செலுத்துவதால சொல்கிறார்கள். அதுபோல தான் வாங்கும் பொருளுக்கு செலுத்தும் GST வரியைக்கூட அது செலுத்தும் வரியாக தங்கள் பக்க நியாயமாக முன் வைக்கிறார்கள். இதுதான் வித்தியாசம். (இதை நான் ஒரு முறை GST Very Senior நிலையில் உள்ளவரிடம் கன்ஃபர்ம் செய்துகொள்கிறேன். புரிதலில் தவறு இருந்தால் கமெண்ட் செய்கிறேன்! )
இப்போது இருக்கும் இந்த புரிதலின்படி, கீழ்கண்ட இந்த கேள்விகளுக்கும் மட்டும் பதில் சொல்லுங்கள்?

1) Is IPL a Charity Organization or not? If Charity, why Is it right? IPL ஒரு சாரிட்டி நுறுவனமா இல்லையா?

2) What is IPL paid direct tax as organization fort the last few years and this year? கடந்த சில வருடங்களொல் IPLநேரடியால செலுத்திய வரி எவ்வளவு?

3) If IPl is paying Tax properly, what is ongoing conflict with Tax office and why case is pending in Tax Tribunal?

இதுபற்றி சில பகிர்வுகள்

2017 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுகளை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் இப்போதைய வருமானம் என்பது என்ன? 50 ஆயிரம் கோடி என்கிறார்களே அது உண்மையா?

இதில் உள்ள வரி ஏய்ப்பு விஷயங்களை இந்திய அரசு நன்கு புரிந்துள்ளது, அதனால் அதற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதாவது நிர்மலா சீதாராமன் தலைமையிலான நிதி அமைசகம் வருமான வரி துறை ஒரு பக்கம் இதை தவறு என்று அதற்கான நடவடிக்கைகள் எடுக்கிறது. ஆனால் இந்திய அரசையே மோடியரசு என்று பார்ப்பதால், வரி ஏய்ப்பு சொல்பவதும் பாஜக, அதே சமயம் IPL போர்டில் உள்ள பாஜகவினர் அதை எதிர்க்கிறார்கள்.

அப்படியானால் பாஜக ரெட்டை வேடம் போடுகிறதா? இது அரசின் துறைகள் சம்பந்த விஷயங்கள். இதை மோடி தலையிட்டு ஒரே நிமிஷத்தில் தீர்ப்பை சொல்லவிட்டால் இரு பக்கமும் ஏற்றுக்கொள்வார்கள், எல்லாம் சரி செய்துவிட முடியும்! ஆனால் செய்ய மட்டார், ஏனெனில் அப்த துறைகளுக்கு என்று ஒரு நியாயம் இருக்கும், அதை அவர்கள் தீர்த்துக்கொள்வதுதான் சரி என்று நினைத்திருக்கலாம், அல்லது அவரது கவனத்திற்கு செல்லாமல கூட இருக்கலாம், அல்லது தெரிந்தும் அதில் சில அரசியல்/ஓட்டு சிக்கல்கள் இருப்பதால், அதை அவர்களே நீதி மன்றம் மூலம் தீர்த்துக்கொள்ளட்டும் என்று கூட விட்டிருக்கலாம்.

காத்திருப்போம், ஆனால் அதுவரை இந்த வரி இழப்பு என்பது ஒரு பக்கம் அரசு நஷ்டமாக தொடர்கிறது. மறுபக்கம், ₹250 டிக்கெட் ₹2500 பிளாக்கில் விற்கப்பட்டு, தவறானவர்கள் தவறான வழியில் காசு சேர்ப்பது தொடர்கிறது. இதில் IPL ஐ ஆதரிப்பவர்கள் பொய் என்கிறார்கள், எதிர்ப்பவர்கள் உண்மை என்கிறார்கள் என்று நினப்பது தவறு. ஆனால் இடையில் ஒரு நியாயம் என்ற தராசில் எடைபோட வேண்டியவர்களாக மக்கள் இல்லை என்பதுதான் இந்தியாவின் பிரச்சினை! இன்னும் சொல்லப்போனால் Charity Organization என்ற பெயரில் நடக்கும் பல கொள்ளைகளுக்கு இந்த் IPL பிரச்சினை ஒரு தீர்வாகும் என்று நம்பலாம்!?

இந்த பிரச்சினையில் சட்டப்படி IPL செய்வது சரியே ஆனால் தார்மீகமாக அது செய்வது தவறு!

மரு.தெய்வசிகாமணி

error: Content is protected !!