32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 58 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 58)
அப்பாலே போ சாத்தானே! Exclusive

அப்பாலே போ சாத்தானே!

தொடர்ந்து கைபேசித் திரையை ஸ்க்ரோல் செய்வது நம் சிந்திக்கும் திறனை எப்படி சிதைக்கிறது என்பதை விளக்கி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதன் சில துளிகள்: 1. டிஜிட்டல் ஊடகம் நீங்கள் எதனை விரும்புகிறீர்களோ அதனைத் தொடர்ந்து உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பொருளில் தொடர் கவனம் செலுத்தாமல், ஆழமாக சிந்திக்காமல் இருக்கச் செய்கிறது. 2. இதனால் நீண்ட ஒரு செய்தித்தாள் கட்டுரையை அல்லது ஆவணத்தைக் கிரகிக்கும் திறன் பாதிக்கப்படுகிறது. 3. அது […]

February 9, 2025 admin
அமெரிக்காவின் மனிதாபிமானமற்றப் போக்கை மோடி அரசு உணர வேண்டும்! Exclusive

அமெரிக்காவின் மனிதாபிமானமற்றப் போக்கை மோடி அரசு உணர வேண்டும்!

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய 15,756 இந்தியர்களில் 104 பேரை, முதல் கட்டமாக தனது இராணுவ விமானத்தின் மூலம் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறது அமெரிக்கா. திருப்பியனுப்பியதில் தவறில்லை. ஆனால், அவர்கள் கை விலங்கிடப்பட்டும் கால்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டும் அனுப்பியதுதான் பிரச்னையாகியிருக்கிறது.ஐரோப்பியர்களின் குடியேற்ற நாடுதான் அமெரிக்கா. அப்படி அவர்கள் குடியேறியபோது, அந்தக் கண்டத்தின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்களை எப்படி நடத்தினார்கள், ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து அடிமை வியாபாரிகளால் பிடித்துவரப்பட்டு விற்கப்பட்ட கறுப்பின மக்களை விலைக்கு வாங்கி, எப்படியெல்லாம் நடத்தினார்கள் -உழைப்பைச் […]

February 8, 2025 admin
UG படிக்க யார் போனாலும் இந்திய வங்கிகளில் கல்விக்கடன்  வாங்காதீர்கள்! Exclusive

UG படிக்க யார் போனாலும் இந்திய வங்கிகளில் கல்விக்கடன் வாங்காதீர்கள்!

மகள் சிங்கப்பூர் NUS ல் படிக்க செல்கையில் 1 சிங்கப்பூர் டாலருக்கு 59₹ இருந்தது, இப்போது 66.160₹ இந்த மத்திய அரசினால் இந்தியர்களுக்கு பலன் துளியும் இல்லை, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே அதீத பயன், டாலர் விலை ஏற்றத்தால் தீ போல இங்கே விலைவாசி ஏறுகிறது,அங்கே வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல்லாயிரம் ரூபாய் இந்திய மதிப்பில் சம்பளம் ஏறுகிறது என்பதே உண்மை. இந்தியாவில் விலைவாசிக்கு தப்பிய எந்த பொருளும் இல்லை, மருந்துகள் கூட விதி விலக்கில்லை, […]

February 8, 2025 admin
பாஜக எனும் பூதம் வளரப் பார்க்கிறது என்பதை நிரூபித்த திருப்பரங்குன்றம்! Exclusive

பாஜக எனும் பூதம் வளரப் பார்க்கிறது என்பதை நிரூபித்த திருப்பரங்குன்றம்!

திருப்பரங்குன்றத்தில் இந்துத்வா சாதித்தா? என கேள்வி எழுப்பினால், ‘ஆம்’ என்பதை தவிர வேறு பதில் இல்லை. இதனால், தேர்தலில் பாஜக வெற்றி பெறவா போகிறது? என சால்ஜாப்பு கேள்வியை முன்வைத்தால், இதுபோன்ற பல சம்பவங்களின் தொகுப்பு, பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.ஆளும் தரப்பு மீது எழும் கடுமையான அதிருப்தியால், மாற்று கட்சியை மக்கள் தேடத் தொடங்கும் போது ‘குருக்க இந்த கவுசிக் வந்தா’ என பாஜக வருமானால், மக்கள் அதை […]

February 6, 2025 admin
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் யார் தெரியுமோ? Exclusive

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் யார் தெரியுமோ?

சட்ட விரோதமான குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து திரும்பவும் நாடு கடத்தப்படுவதும் அவர்கள் ராணுவ விமானத்தில் குவிக்கப்பட்டு இந்தியாவில் இறக்கப் படுவதும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. இவர்களை ‘என்ஆர்ஐக்கள்’ என்று வகைப்படுத்தி அவர்களை மோடி ஆதரவாளர்களாகவும், ‘சங்கி’களாகவும் சித்தரித்து பதிவுகள் பார்க்கிறேன். ‘நல்லா வேணும்’ எனும் தொனி பரவி விரவிக் கிடக்கிறது.இவர்கள் எல்லாருமே சட்டவிரோத குடியேறிகள். முறைப்படி விசா வாங்கிக் கொண்டோ, வேலை அல்லது மாணவர் கேட்டகிரியிலோ போனவர்கள் இல்லை. அநேகமாக ஏதோ ஒரு ஏஜெண்ட்டைப் பிடித்து சிலே, […]

February 6, 2025 admin
திருப்பம் தரும் திருப்பரங்குன்றமும், மதுரை எழுச்சியும்! Exclusive

திருப்பம் தரும் திருப்பரங்குன்றமும், மதுரை எழுச்சியும்!

மதுரை மக்கள் தெளிவாக உள்ளார்கள். மதுரை மக்களுக்கு பாடமெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. கையில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு தேவையில்லாத விவகாரங்களை ஊதி ஊதிப் பெரிதாக்கிவிட்டு, கேட்டால் “பாஜக உள்ளே வந்துவிடும்” என்று சொல்லி தொடர்ந்து பூச்சாண்டி காட்டப்பட்டது. இன்று மதுரை மண்ணில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்து அவர்கள் தரப்பு கூட்டத்தை கூட்டியும் காண்பித்து உள்ளார்கள். இது அப்பட்டமான ஆளும் வர்க்கத்தின் சித்தாந்த தோல்வியின் வெளிப்பாடாகத் தான் பார்க்க வேண்டும். திராவிடம், பெரியார் என்று இவர்களின் “பேனர்” […]

February 5, 2025 admin
அவிழ்க்க உதவும் மில்லியன் டாலர் பரிசும், சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துருப் புதிரும்! Exclusive

அவிழ்க்க உதவும் மில்லியன் டாலர் பரிசும், சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துருப் புதிரும்!

உங்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் பரிசாக வேண்டுமா? சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துருப் புதிரை அவிழுங்கள்.ஒரு இந்திய மாநிலத் தலைவரால் வழங்கப்படும் இந்த மகத்தான பரிசு வெண்கலக் காலத்தின் நாகரீகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவது மட்டுமல்ல நீண்டகாலப் பண்பாட்டுப் போரை முடித்து வைப்பதுமாகிறது. நூறாண்டுகளுக்கு மேலாக பல அறிஞர்களைக் குழப்பிய புரியாத புதிர் இது, இப்போது கவர்ச்சிகரமான நம்பமுடியாத பரிசுத் தொகையோடு வந்து நிற்கிறது. சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துருக்களைப் புரிந்து கொண்டு அதன் பொருளைக் கண்டடைபவர்களுக்கு […]

February 4, 2025 admin
அமெரிக்கன் பிராண்ட் அரசியல்! Exclusive

அமெரிக்கன் பிராண்ட் அரசியல்!

டிரம்ப் 2.0 வின் கீழ் அமெரிக்காவில் நடக்கும் விஷயங்களை பார்ப்பது ஸ்லோமோஷனில் ஒரு ரயில் விபத்தை பார்ப்பது போல இருக்கிறது. அமெரிக்காவின் முதுகெலும்பே அதன் தனி மனித மைய நோக்கும் அதன் தொழில்முனைப்பும் தான் . இந்த இரண்டு குதிரைகளையும் வெற்றிகரமாக பூட்டி சவாரி செய்வதுதான் முதலீட்டியம் (free market capitalism ) . அமெரிக்க முதலீட்டியம் உலகமயமாக்கல் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டியது . எங்கு விலை குறைவோ அங்கு பொருட்களை வாங்கியது . எங்கு […]

February 2, 2025 admin
சீனம் முன்னேறுகிறது? இந்தியா ஏன் தடுமாறுகிறது?? Exclusive

சீனம் முன்னேறுகிறது? இந்தியா ஏன் தடுமாறுகிறது??

சீனம் எப்படி இவ்வளவு முன்னேறியிருக்கிறது என வியப்பவர்கள் கவனிக்கத் தவறுவது என்னவெனில் அந்த நாடு திட்டமிட்ட முறையில் கல்விப் புலங்களிலிருந்து மதத்தையும் அதனுடன் தொடர்புடைய மூடநம்பிக்கைகளையும் நீக்கி விட்டது என்பதைத்தான். ராகுவும் கேதுவும்தான் உங்கள் எதிர்காலத்தை நிச்சயிப்பவை என நாள்தோறும் தொலைக்காட்சிகள் சொல்லிக் கொண்டிருக்கும் சூழலில் ‘தம் மீதே நம்பிக்கை வைத்திருக்கும்’ மனிதர்களை உருவாக்க முடியாது.சமீபத்தில் நான் கர்னாடக மாநிலத்தின் கடற்கரைப் பகுதியிலிருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் நடந்த ஒரு பயிற்சிப் பட்டறைக்குச் சென்றிருந்தேன். அங்கு படிக்கும் […]

February 1, 2025 admin
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான பிரச்னை என்ன? Exclusive

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான பிரச்னை என்ன?

நேத்து மனதை கஷ்டப்படுத்திய செய்தியாக இதை படித்ததும் தோன்றியது… !பிள்ளைகள் சரிவர ஆதரிக்கவில்லை என்பதால் கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து இறந்த தம்பதிகள்… குறித்த செய்திதான் அது! நடுத்தர வர்க்க குடும்பமாக தான் தெரிகிறது… சமீபகாலமாக இது மாதிரியான செய்திகளை நிறைய முறை கேள்விப் படுகிறேன்… !ரொம்பவும் வேதனையான விஷயம் தான்.. பொதுவாக இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது! பொருளாதார கஷ்டம் நோய் கொடுமைகள் பிள்ளைகள் அன்போ ஆதரவோ இல்லை என்பதாக.. -இந்திய பெற்றோர்களை பொறுத்தவரை பிள்ளைகள் […]

January 31, 2025 admin
உடனடி செய்திகள்