32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 60 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 60)
81 வயதில் இப்படி சீர் கொண்டு செல்வதெல்லாம் சரியல்ல! Exclusive

81 வயதில் இப்படி சீர் கொண்டு செல்வதெல்லாம் சரியல்ல!

எதிர்பார்த்தது போலவே சீர் கொண்டு போன இந்த தாத்தா வைரல் ஆகிவிட்டார். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் வைரல் ஆக்கப்பட்டுவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 81 வயது பெரியவர், தம் மகளுக்காக 14 கி.மீ தூரம் பொங்கல் சீர் கொண்டு போகும் காட்சிகள் சில ஆண்டுகளாக பரவி வருகின்றன. இந்த ஆண்டு அவர் பயணம் துவங்குவது முதல், சைக்கிளில் பயணிப்பதுவரை வீடியோவில் பதிவு செய்யப்படுவதைப் பார்க்கலாம். குறிப்பாக அந்தப் பகுதி மக்கள் அதனை கொண்டாட்டமாக பதிவு செய்வதைக் […]

January 16, 2025 admin
அதானி சாம்ராஜ்யத்தை சரிய வைத்த ஹிண்டன்பர்க் திடீரென மூடல்! Exclusive

அதானி சாம்ராஜ்யத்தை சரிய வைத்த ஹிண்டன்பர்க் திடீரென மூடல்!

குறுகிய விற்பனைக்கு பெயர் பெற்ற அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், கலைக்கப்படுவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். இதுதொடர்பான் அறிக்கைய்ல், “கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து நான் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எங்கள் குழுவுடன் பகிர்ந்து கொண்டபடி, ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பை கலைக்க முடிவு செய்துள்ளேன். நாங்கள் வேலை செய்து கொண்டிருந்த யோசனைகளின் பைப்லைனை நாங்கள் முடித்த பிறகு திட்டத்தை முடிக்க வேண்டும். கடைசியாக போன்சி வழக்குகளை நாங்கள் முடித்து, கட்டுப்பாட்டாளர்களுடன் பகிர்ந்து […]

January 16, 2025 admin
விவசாயிகளுக்கு ‘பொங்கல் பரிசு’-வெந்தபுண்ணில் வேல்! Exclusive

விவசாயிகளுக்கு ‘பொங்கல் பரிசு’-வெந்தபுண்ணில் வேல்!

கடந்த காலங்களில் வங்கிகளில் நகை கடன் வாங்கியவர்கள் – விவசாயிகள் வருடம் ஒரு முறை புதுப்பித்து ரினிவல் செய்து வட்டியை மட்டும் செலுத்தி மீண்டும் புதுப்பித்து வந்தார்கள். இந்த முறை மாற்றப்பட்டு கடந்த 1-1.2025 ஜனவரி முதல் ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர் வைக்கும் தங்க நகை கடன் முறையில் மாற்றம் செய்து அசலையும் வட்டியையும் சேர்த்து பணத்தை செலுத்தித்தான் புதுபிக்க வேண்டும் என்ற உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் விவசாயிகள் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். விவசாயிகள் கஷ்ட்டத்துக்காக […]

January 13, 2025 admin
பெரியார் மேல் ஏன் இத்தனை வன்மம்!? எடிட்டர் ஏரியா

பெரியார் மேல் ஏன் இத்தனை வன்மம்!?

‘கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் – மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு’ – – என்று நூறாண்டுகளுக்கு முன்பே பாரதி பாடியதிலிருந்து என்ன தெரிகிறது? மற்ற வட இந்திய மாநிலங்களைவிட, தமிழ்நாடு கல்வியில் அசுர வேகத்தில் பாய்ந்து கொண்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது. இதை எப்படி அனுமதிப்பது? ‘நாங்கள் தவழ்ந்து கொண்டிருக்கும்போது நீங்கள் ஓடுவதை எப்படி அனுமதிக்க முடியும்? ஓடாதீர்கள்; நில்லுங்கள்’ என்கிறார்கள் அவர்கள். ‘கல்வி சிறந்த […]

January 10, 2025 admin
சீமான் அரசியல் அஸ்தமனமும் பெரியாரின் பெயரால் முடித்து வைக்கப்படும்! Exclusive

சீமான் அரசியல் அஸ்தமனமும் பெரியாரின் பெயரால் முடித்து வைக்கப்படும்!

நீங்கள் ஒரு அறிவு ஜீவியாக இருப்பீர்களோ, நீங்கள் ஒரு புரட்சிக்காரனாக இருப்பீர்களோ, நீங்கள் தான் இந்த மண்ணின் மைந்தர்களின் விடுதலைக்காகப் பிறப்பெடுத்திருக்கும் மீட்பரோ என்று ஒரு தோற்றத்தை உருவாக்க மிக எளிய வழி, பெரியாரைத் தூற்றுவது… ! திராவிடத்தின் பெயரில் பெரியார் தான் இங்கிருந்த சகல சௌபாக்கியங்களையும் மடை மாற்றித் தெலுங்கர்களுக்கும், கன்னடர்களுக்கும் தமிழினத்தின் உயரிய பல்வேறு பண்புகளையும், உடமைகளையும் கூறு போட்டு விற்று விட்டார் என்று புரட்சிக் குரல் எழுப்புவது…!தற்போது அது சீமானின் வழியாக அரசியலுக்குள் […]

January 9, 2025 admin
எது நல்ல புத்தகம்? Exclusive

எது நல்ல புத்தகம்?

ஆழி சூழ் உலகத்தை அறிவு சூழ் உலகமாக்குவது புத்தகங்களே. மனிதர்களைப் போலவே, புத்தகங்களிலும் பல தரங்கள் உள்ளன. அவற்றில் தரமான புத்தகங்களை எப்படித் தேர்ந்தெடுப்பது? இதை நமது கல்வி நிலையங்கள் கற்றுத் தருவதில்லையென்பது நமது பாடத்திட்டங்களில் உள்ள மிகப் பெரிய குறைபாடு. சரி, ஆசிரியர்களாவது சொல்லித் தருகிறார்களா என்றால், அப்படிப்பட்ட ஆசிரியர்கள் வாய்ப்பதும் அரிதிலும் அரிதாக இருக்கிறது. கல்வித் தலமனைத்தும் வியாபாரத் தலங்களான பிறகு, அவை எப்படி அறிவாளிகளை உருவாக்கும்? வியாபாரிகளைத்தான் உருவாக்கும். அதனால்தான் புத்தகங்களின் பணி […]

January 8, 2025 admin
இன்றைய அரசியல் சமூக ஊடகங்களின் தர குறைவு! Exclusive

இன்றைய அரசியல் சமூக ஊடகங்களின் தர குறைவு!

ஒழுங்கின்மைகளுக்கு முக்கிய காரணமாகிக் கொண்டு வருவது இன்றைய தொழில்நுட்ப இணைய வலைத்தளங்கள் தான். இதில் எந்த ஒரு முட்டாளும் இருந்தாலும் கூட வந்து கருத்து சொல்லலாம் என்று ஆகிவிட்ட பிறகு சமூக நலன் சார்ந்த அரசியல் செயல்பாடுகள் யாவும் தன் ஸ்திரத்தன்மையை இழந்து விடுகின்றன. இதில் சில பத்திரிகையாளர்கள் சில ஊடகவாதிகள் பல முகப்புத்தகவாதிகள் பல இன்ஸ்டாகிராமில் இயங்குபவர்கள் டிவிட்டரில் இயங்குபவர்கள் பலரும் அடங்குவார்கள். எதிர் கருத்து இருக்க வேண்டியதுதான் அதற்காக மனம் போன போக்கில் முட்டாள்தனமாக […]

January 6, 2025 admin
2026-யாருக்கு முதல்வர் வாய்ப்பு? – இப்போதைய கணிப்பு! Exclusive

2026-யாருக்கு முதல்வர் வாய்ப்பு? – இப்போதைய கணிப்பு!

2026 இல் திமுக மறுபடியும் ஜெயிக்க வேண்டும் என்றால் ஓரே வழி அதிமுக-பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஏற்பட வேண்டும் . அப்படி இணைந்தால் மட்டுமே மறுபடியும் தமிழகத்தில் இருக்கும் பா.ஜ.க எதிர்ப்பை வைத்து மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கிறது திமுகவும் அதற்கு ஆதரவாக (மட்டுமே) இருக்கும் இங்குள்ள பத்திரிக்கை ஊடகங்களும் . முதலில் திமுக கூட்டணி கட்சிகள் அப்படியே 2026 தேர்தலில் தொடர்ந்தால் மீண்டும் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டது. திமுக. ஆனால் […]

January 5, 2025 admin
டூ மினிட் நூடுல்ஸ் ஊடகங்கள்! Exclusive

டூ மினிட் நூடுல்ஸ் ஊடகங்கள்!

ஊடகவியலாளர்களுக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் கூறி விட்டால் உள்நாட்டுக் கலவரமே வெடித்து விடும் என்று சற்று மிகைப்படுத்தி ஒரு தொலைக் காட்சி விவாதத்தில் கூறினேன். காலம், இடம், சூழல் ஆகியவை கருதியும், சமூகப் பொறுப்புணர்வு, ஊடக நிறுவனத்தின் கட்டுப்பாடுகள், அரசியல் பொருளாதார நலன்கள் ஆகியவற்றால் சலிக்கப் பட்ட செய்திகள்தான் வெளியே வருகின்றன. செய்தித்தாள் போன்ற பாரம்பரிய ஊடகங்களில் பல எச்சரிக்கையுணர்வுடன் கூடிய செக்போஸ்டுகளைத் தாண்டியும் அவை வருகின்றன. செய்திகளை முந்தித் தருவது தினத்தந்தி என்று கூறிக்கொண்டாலும் அடுத்த […]

January 2, 2025 admin
தமிழகம் வளர்ந்த மாநிலமா? Exclusive

தமிழகம் வளர்ந்த மாநிலமா?

தமிழ்நாட்டில் மொத்தம் 2,24,13,920 குடும்ப அட்டைகள் உள்ளன. அவற்றில் 2.09 கோடி அரிசி அட்டைகள். இவர்களுக்கெல்லாம் பொங்கல் பரிசுத் தொகுப்பு உண்டு.மீதமுள்ள சுமார் 15 இலட்சம் அட்டைதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடையாது. தமிழக அரசின் கணக்குப்படி, இந்தப் பதினைந்து இலட்சம் குடும்பங்கள் மட்டும்தான் பச்சரிசி, செங்கரும்பு, வெல்லமெல்லாம் விலைக்கு வாங்கிப் பொங்கல் கொண்டாடும் கொழுகொழு பணக்கார நிலையில் உள்ளன. ஏனைய 2.09 கோடிக் குடும்பங்களும் விலை கொடுத்து அரிசி வாங்கிப் பொங்கல் கொண்டாட முடியாத […]

January 1, 2025 admin
உடனடி செய்திகள்