32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2455 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 134 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 134)
ரஜினியின் அரசியல் வெடி நமத்து போனதன் பின்னணி! Running News

ரஜினியின் அரசியல் வெடி நமத்து போனதன் பின்னணி!

இப்போது ரஜினியை ஆதரித்தே ஆகவேண்டும். ஏன் தெரியுமா? ‘ரஜினியாக இருப்பதன் கஷ்டம் ரஜினிக்கு தான் தெரியும்…’ இந்த வாக்கியம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது ரஜினியை அதிகமாகவே பிடிக்கிறது. காரணம் அவர் எடுத்த முடிவுக்கு பின்னால் இருக்கும் துணிச்சல். உண்மையில் ரஜினி கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்குவதைவிட இப்படி வரவில்லை என்று அறிவிக்கத் தான் அதிக துணிச்சல் தேவைப்பட்டது. காரணம் ரஜினியை சூழ்ந்திருந்த நெருக்கடி. டிசம்பர் 3ந்தேதி அரசியல் கட்சியை அறிவித்தபோது ரஜினியை கவனித்தவர்களால் இதை உணர முடியும். […]

December 29, 2020 admin
ஹாதராஸ் வழக்கில் சி.பி.ஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தாகி விட்டது! எடிட்டர் ஏரியா

ஹாதராஸ் வழக்கில் சி.பி.ஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தாகி விட்டது!

ஹாதராஸ் வழக்கில் சி.பி.ஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அந்தப் பெண் வன் புணர்வுக்கு உள்ளாகிக் கொலையுண்டதாக அறிக்கை உறுதி செய்கிறது. கைதான நால்வர் மேலும் கூட்டு வன்புணர்வு மற்றும் கொலைப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் நடந்து தேசத்தையே உலுக்கிய பொழுது பா.ஜ.க அபிமானிகள் அங்கே வன் புணர்வே நடக்கவில்லை என்று கற்பூரம் அடித்துச் சொன்னார்கள். அதற்காகப் பல்வேறு மருத்துவச் சான்றிதழ்களை தூக்கிக் கொண்டு வந்து பகிர்ந்தார்கள். அந்தப் பெண் […]

December 19, 2020 admin
அச்சு &காட்சி ஊடகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் போனதெப்படி? Running News

அச்சு &காட்சி ஊடகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் போனதெப்படி?

இம்மாத ‘கேரவன்’ ஆங்கில இதழில் இந்தியாவில் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் எவ்வாறு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது என்பதையும், இந்த ஊடகங்களின் செய்தி அறைகளில் மோடி அரசின் ஆதிக்கத்தின் கீழ் எப்படி செய்திகள் தயாரிக்கப் படுகின்றன என்பதைப் பற்றியும் விரிவான அலசல் கட்டுரைகள் வெளி வந்துள்ளன. அதில் தமிழகத்தைப் பற்றி வந்துள்ள கட்டுரையில் நிறைய விவரங்கள் அடங்கியுள்ளது! 90 க்கு முன்பு பிராமண மயமாக இருந்த ஊடகத்துறை, அதன் பின் இட ஒதுக்கீட்டின் […]

December 16, 2020 admin
இந்தியாவின் உடனடித் தேவை – குளிர்சாதன கிடங்குகள்/அரங்குகள் அல்ல! எடிட்டர் ஏரியா

இந்தியாவின் உடனடித் தேவை – குளிர்சாதன கிடங்குகள்/அரங்குகள் அல்ல!

கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசி இந்தியாவில் சாதாரண மக்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல் இல்லை. அப்படியே கிடைத்தாலும், பெரும் சவால் காத்திருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். 2 முதல் 8 டிகிரியிலிருந்து மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் இத் தடுப்பூசிகள் பராமரிக்கப்பட வேண்டும். அதற்கான குளிர்பதனப் பெட்டகங்கள், கிடங்குகள் இப்போதும் இனிவரும் நாள்களிலும் நமக்கு ஆதாரத் தேவை. இத்தகைய மருந்து சேமிப்புக் கிடங்குகளைக் கையாளும் நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்பு அடுத்த ஆண்டு […]

December 14, 2020 admin
தொடரும் விபத்துக்கு உண்மையான குற்றவாளிகள் யார் தெரியுமா? Running News

தொடரும் விபத்துக்கு உண்மையான குற்றவாளிகள் யார் தெரியுமா?

தொப்பூர் கணவாயில் மீண்டும் ஒரு கோர விபத்து நடைபெற்றிருக்கிறது. கட்டுப்பாட்டை இழந்த சரக்குந்து மோதி 14 மகிழுந்துகள் சேதப்பட்டிருக்கின்றன. இதுவரை நான்கு பேர் உயிரிழந் திருக்கிறார்கள். இன்னும் பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். விபத்தை ஏற்படுத்திய சரக்குந்தின் ஓட்டுநர் தொப்பூர் காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டார். அவரை காவல்துறையினர் தேடிப்பிடித்து கைது செய்திருக்கின்றனர் என்பது செய்தி. ஆனால் உண்மையான குற்றவாளிகள் எந்தத் தண்டனையும் இன்றி எப்போதும்போல அவர்கள் இல்லங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தொப்பூர் கணவாயில் உள்ள இந்த இடத்தில் […]

December 13, 2020 admin
புதியக் கட்டடங்களும், பழைய ஜனநாயமும்! எடிட்டர் ஏரியா

புதியக் கட்டடங்களும், பழைய ஜனநாயமும்!

நாடாளுமன்றத்திற்கு புதியக் கட்டடம் ஒன்றைக் கட்டும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டி உள்ளார். நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த விஷயத்திற்கு ஒரு முடிவு வந்துள்ளது. இப்போது இருக்கும் கட்டடம் நூற்றாண்டு பெருமைக் கொண்டது. எனினும் எதிர்காலத்தில் இடப்பற்றாக் ந்குறையை எதிர்நோக்குகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இடம் இல்லை என்பதால் இந்த அதிகரிப்பை 2026 ஆம் ஆண்டு வரை தள்ளிவைத்தாகி விட்டது. தொகுதி மறுசீரமைப்பின் போது தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றவில்லை என்பது நினைவுகூறத்தக்கது. இப்புதிய […]

December 12, 2020 admin
இது இரண்டாவது இந்திய சுதந்திரப்போர்! Running News

இது இரண்டாவது இந்திய சுதந்திரப்போர்!

விவசாயிகள் போராட்டத்தை வழக்கம்போல இழுத்தடித்து பிசுபிசுக்க வைக்கும் வேலைகளை மத்திய அரசு. ஒரு புறம் செய்கிறது. மறுபுறம் விவசாயிகள் எழுச்சியோடு போராடி வருகின் றனர். டெல்லியின் கடுங்குளிர், வயது மூப்பு காரணமாக இதுவரை 6 விவசாயிகள் மரண மடைந்து உள்ளார்கள்.தன்னுடைய மகள் திருமணத்தில்கூட கலந்து கொள்ளாமல் போராட்டக் களத்தில் நிற்கிறார் பஞ்சாப் விவசாயி சுபாஷ் சீமா. குர்சிம்ரத் கவுருக்கு 11 வயதாகிறது. ஆறாம் வகுப்பு படிக்கிறாள். தன் பெற்றோரோடு போராட்டக் களத்துக்கு வந்திருக்கிறாள். விவசாயிகள் எப்படி உணவுப் […]

December 11, 2020 admin
தற்கொலை எனும் பிணியை வெறும் அனுதாபத்தால் தடுக்க முடியாது! Running News

தற்கொலை எனும் பிணியை வெறும் அனுதாபத்தால் தடுக்க முடியாது!

‘ஏன் இப்படி போய்ட்டே? தைரியமா இருக்க வேணாமா? நீ எல்லாம் இப்படி செய்யலாமா?, தற்கொலைதான் தீர்வா? தற்கொலை கோழைத்தனம் இல்லையா?’ என்பது போன்ற ஆறுதல் தேறுதல் கம் அட்வைஸ்களுக்குள் ஒருபோதும் அடங்காதவை தற்கொலைகள். நானறிந்த வரையில் இரண்டு வகைகளில் சுயகொலைகளை மனிதர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். உடல் நலமின்மை மற்றும் மன நலமின்மை தொடர்பில் மரணத்தை தேர்ந்தெடுப்பது ஒரு வகை. தீராத நோய், அதன் வாதை என அவதியுறும்போது, அதைத் தாங்குவதற்குப் பதில் இறந்துவிடுவதே மேல் எனத் தீர்மானித்தல். மன […]

December 9, 2020 admin
வெல்லட்டும் விவசாயிகளின் உரிமைப் போராட்டம்! Running News

வெல்லட்டும் விவசாயிகளின் உரிமைப் போராட்டம்!

அம்பானி, அதானி மற்றும் பிற கார்பரேட் பெரு முதலாளிகளின் நிறுவனங்கள் இந்தியாவின் உணவு தானியங்கள் சந்தையில் களம் இறங்கினார்கள், ஆனால் அங்கே ஏராளமான பிரச்சனைகள் அவர்களுக்காக காத்திருந்தன. பிரச்சனை 1 : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உணவு தானியங்கள் தொடர்பாக வெவ்வேறு சட்டங்கள், நடைமுறைகள் இருந்தன. அதனால் உணவு தானியங்களை கொள்முதல் செய்வதில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வழிமுறைகளை அவர்கள் கையாள வேண்டியதிருந்தது. மோடியின் தீர்வு: மாநிலங்களிடமிருந்து இந்த உரிமைகளை கையகப்படுத்தி ஒரே நாடு ஒரே […]

December 7, 2020 admin
உடனடி செய்திகள்