32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2455 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 133 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 133)
சட்டமும் பட்டாக்கத்தியும்..!விஜய் சேதுபதி அப்பாடக்கரா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு எடிட்டர் ஏரியா

சட்டமும் பட்டாக்கத்தியும்..!விஜய் சேதுபதி அப்பாடக்கரா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

பிரபல கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் பயோ பிக்சரில் நடிப்பதாக இருந்த நிலையில் கண்டனங்களுக்கு உடன்பட்டு அதிலிருந்து முரளியே விலக்கிவிட்டதாக தகவல் அளிக்கப்பட்டு உலகப் பிரபலமானார் மக்கள் செல்வன். இப்போது மீண்டும் ஒரு பின்வாங்கல். மாஸ்டர் படம் வி.சேயின் படம் அதில் ஏன் விஜய் நடித்தார் என்று பாராட்டுதல்களுக்கு திருஷ்டி வந்து விடக்கூடாது என்று அவரே முடிவு செய்து விட்டாரோ? நடிகர் விஜய் சேதுபதி தனதுபிறந்தாள் கொண்டாட்டத்தின்போழுது பட்டகத்தியை வைத்து கேக் வெட்டி கொண்டாடிய படம் சமூக வலைத்தளங்களில் […]

January 16, 2021 admin
தகவல்களைப் பற்றிய ஒரு தகவல்! – பா.ராகவன்! Running News

தகவல்களைப் பற்றிய ஒரு தகவல்! – பா.ராகவன்!

முன்னொரு காலத்தில் மனோரமா இயர்புக் வாங்குவதும் படிப்பதும் எனக்கு மிகுந்த விருப்பத் துக்குரிய செயலாக இருந்தது. எந்த அரசுத் தேர்வோ, வேலை வாய்ப்போ எனக்கு நோக்கமாக இருந்ததில்லை. அதற்குத்தான் அந்தப் புத்தகம் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் என் பொது அறிவை விருத்தி செய்தே தீருவது என்ற வெறியுடன் வருடம்தோறும் வாங்கி வாசிப்பேன். ஒரு எழுநூறு எண்ணூறு பக்கப் புத்தகத்தை அப்படியே மனத்தில் ஏற்றிக்கொள்வது இயலாத காரியம். குறிப்பாக, என்ன முட்டிக்கொண்டாலும் மாதங்கள், தேதிகள் நினைவில் இருக்காது. […]

January 15, 2021 admin
விமானப்படைக்கு  தேஜாஸ்சின் வருகை எதைக் காட்டுகிறது? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு எடிட்டர் ஏரியா

விமானப்படைக்கு தேஜாஸ்சின் வருகை எதைக் காட்டுகிறது? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமை யிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேஜாஸ் விமானங்கள் இந்தியாவிற் குள்ளேயே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் எனும் மத்திய அரசு நிறுவனத்தில் தயாரிக்கப்படுவதாகும். இந்நிறுவனம் பாதுகாப்புத்துறையின் கீழ் வருவதாகும். கடந்த 2017 ஆம் ஆண்டில் கோரப்பட்ட விமானங்களின் அளிப்பு இப்போது அமைச்சரவையின் ஒப்புதல் மூலம் விமானப்படைக்கு வழங்கப்படவுள்ளது. இதில் என்னச் சிறப்பு? முதல் சிறப்பு மத்திய அரசின் தற்சார்புக் கொள்கை. தேஜாஸ் விமானங்கள் 50% இந்தியாவில் தயாரிக்கப்பட்ட […]

January 14, 2021 admin
சென்னை நிரந்தரமாக வெள்ளக்காடாக போகுது!- பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை Running News

சென்னை நிரந்தரமாக வெள்ளக்காடாக போகுது!- பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை

அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்தை 53ஆயிரம் கோடி செலவில் 6110 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய முனையும் நிலையில் சென்னையை நிரந்திரமாக வெள்ளக்காடாக மாற்றப்போகும் அதானி துறைமுக விரிவாக்கத்தை கைவிடும்படி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா காட்டுப்பள்ளி கிராமத்திற்கு அருகில் காமராஜர் துறைமுகத்திற்கு வடக்கே அமைந்துள்ளதுதான் காட்டுப்பள்ளி துறைமுகம். அதானி நிறுவனத்திற்கு சொந்தமான இந்த துறைமுகம் தற்போது ஆண்டிற்கு 24.65 மில்லியன் சரக்குகளை கையாளும் திறம் கொண்டது. இத்துறைமுகத்தை […]

January 13, 2021 admin
சிக்னல், டெலிகிராம் யாருக்குச் சொந்தம்?  ரமேஷ் கிருஷ்ணன் பாபு! எடிட்டர் ஏரியா

சிக்னல், டெலிகிராம் யாருக்குச் சொந்தம்? ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

வாட்ஸ் அப்பின் புதிய விதிமுறைகளைக் காரணம் காட்டி பலபேர் இப்போது சிக்னல், டெலி கிராம் எனப் புதிய செய்திச் செயலிகளுக்கு கட்சி மாறிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மூல காரணமாக இருந்தவர் டெஸ்லாவின் உரிமையாளரும், உலகின் நெ 1 பணக்காரருமான இலான் மஸ்க் ஆவார். வாட்ஸ் அப் தனது பயனர்களிடம் அவர்களது தரவுகள் வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கிற்கு வழங்கப்படும் என்று தெரிவித்த உடன் பலருக்கு இதன் பொருள் புரியவில்லை. ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் பயனர்கள் பலர் வாட்ஸ் […]

January 12, 2021 admin
இராத்திரி நேர இரயிலு சுற்றுச்சூழலுக்கு நல்லதா?  ரமேஷ் கிருஷ்ணன் பாபு! Running News

இராத்திரி நேர இரயிலு சுற்றுச்சூழலுக்கு நல்லதா? ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

உலகம் முழுக்க கொரோனா அச்சம் பரவிப் பொதுப் போக்கு வரத்து அடியோடு நின்று மக்கள் வீட்டை விட்டு வெளியே போவது எனும் பழக்கத்தையே மறக்கும்படியான நிலையில் மீண்டும் மெல்ல பொதுப் போக்குவரத்து குறித்து அறிவிப்புகள் வெளிவருகின்றன. அப்படி வந்துள்ள ஒரு அறிவிப்பு நான்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்து இராத்திரி இரயில் ஓட்டப் போவதாக வந்து உள்ளதாகும். அதென்ன இராத்திர இரயிலு? இரயிலுனாலே இராத்திரிதானேன்னு நீங்க கேக்குறது புரியுது! நம்மூரில் சகஜம். ஆனால் எல்லா நாடுகளிலும் சகஜமாக இருக்குமா? ஐரோப்பாவில் […]

January 12, 2021 admin
கருத்துச் சுதந்திரமும், காயச் சுதந்திரமும்! – ரமேஷ் கிருஷ்ணன் பாபு எடிட்டர் ஏரியா

கருத்துச் சுதந்திரமும், காயச் சுதந்திரமும்! – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

கருத்துச் சுதந்திரத்தைப் போற்றிக்காப்பது அடிப்படை ஜனநாயக அம்சங்களில் ஒன்று. இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம். ஆனால், அதே கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டு ஜனநாயக வழிமுறைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்படி நடந்து கொண்டால் ஜனநாயக உரிமைகளுக்கு வரைமுறைகள் கொண்டு வரப்படும். இல்லையென்றால் இரண்டுமே வாழாது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வெறும் சடங்கு போன்ற நிகழ்வு ஒன்றிற்காக அதுவும் தனது தேர்தல் தோல்வியை உறுதிப் படுத்தும் நிகழ்வைக் குலைக்க கருத்துச் சுதந்திரத்தை பணயமாகப் பயன் படுத்தியதோடு அல்லாமல் தனது […]

January 9, 2021 admin
அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதல் எதைக் காட்டுகிறது? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு எடிட்டர் ஏரியா

அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதல் எதைக் காட்டுகிறது? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

”அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்ந்தவை மன வருத்தம் தருகின்றன. முறையான, அமைதியான விதத்தில் அதிகார மாற்றம் தொடர்ந்து நிகழ வேண்டும். சட்டவிரோதமான போராட்டங்களால் ஜனநாயக வழிமுறைகள் வீழ்ச்சியடைய அனுமதிக்கக்கூடாது” – இப்படிச் சொன்னது நமது பிரதமர் மோடி. அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் கலவரம் என்பதும், அதுவும் அதிபர் ஒருவரே அத்தகைய கலவரத்திற்குக் காரணமாக இருந்ததும் கரும் புள்ளியாக அமைந்து விட்டது. உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாய் தன்னை முன் வைக்கும் அமெரிக்கா இன்று இன ரீதியான பிளவுகளுக்குள் […]

January 8, 2021 admin
அமெரிக்காவில் விமோசனத்துக்கு 12 நாள்கள் இருக்கின்றன. இங்கே? எடிட்டர் ஏரியா

அமெரிக்காவில் விமோசனத்துக்கு 12 நாள்கள் இருக்கின்றன. இங்கே?

மோதியை இந்தியாவின் டிரம்ப் என்றோ, டிரம்பை அமெரிக்காவின் மோதி என்றோ அரை குறையாக நம்மில் சிலர் புரிந்துகொண்டிருக்கிறோம். நானும் அப்படித்தான் புரிந் து கொண்டு இருந்தேன். அருந்ததி ராயின் வீடியோ ஒன்றை இரண்டாண்டுகள் முன்பு பார்க்கும் வரை. எவ்வளவு துல்லியமாக டிரம்பையும், மோதியையும், அமெரிக்காவையும், இந்தியாவையும் 2 ஆண்டுகள் முன்பே வேறுபடுத்திப் பார்த்திருக்கிறார் அருந்ததி ராய் என்பது, இன்றைய அமெரிக்க நிகழ்வுகளைப் பார்த்த பிறகு மேலும் நன்றாக உறைக்கிறது. அந்த வீடியோவை இக்கட்டுரையின் இறுதியில் இணைக்கிறேன். “கோளாறாகிப் போன […]

January 7, 2021 admin
அம்மாடி.. இதுதான் வாழ்க்கையா?! எடிட்டர் ஏரியா

அம்மாடி.. இதுதான் வாழ்க்கையா?!

இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன? – உயிரோடு இருப்பதா? – மகிழ்ச்சியாக இருப்பதா? – பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா? – தோல்விகளில் கற்றுக் கொள்வதா? – வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா? – தன்னலமற்ற அர்ப்பணிப்பா? – தத்துவங்களின் அணிவகுப்பா? …. இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். […]

January 2, 2021 admin
உடனடி செய்திகள்