இந்தியாவின் உடனடித் தேவை – குளிர்சாதன கிடங்குகள்/அரங்குகள் அல்ல!

இந்தியாவின் உடனடித் தேவை – குளிர்சாதன கிடங்குகள்/அரங்குகள் அல்ல!

கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசி இந்தியாவில் சாதாரண மக்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல் இல்லை. அப்படியே கிடைத்தாலும், பெரும் சவால் காத்திருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

2 முதல் 8 டிகிரியிலிருந்து மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் இத் தடுப்பூசிகள் பராமரிக்கப்பட வேண்டும். அதற்கான குளிர்பதனப் பெட்டகங்கள், கிடங்குகள் இப்போதும் இனிவரும் நாள்களிலும் நமக்கு ஆதாரத் தேவை. இத்தகைய மருந்து சேமிப்புக் கிடங்குகளைக் கையாளும் நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்பு அடுத்த ஆண்டு 17 சதவிகிதம் அதிகரிக்குமாம். அதாவது ரூபாய் மதிப்பில் 1.7 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது, எண் ஒன்றுக்குப் பிறகு 12சுழியம் வரும் — கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்) வரை செல்லும் என்று சந்தை ஆய்வுக் கணிப்புகள் கூறுகின்றன.

குளிர்பதன தேவை தொடர்பில் இன்னொரு முக்கியமான பிரச்சினை: வேளாண் விளைபொருட் களை, குறிப்பாக எளிதில் கெட்டுவிடும் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பதற்கு, உரிய குளிர் பதன சேமிப்புக் கிடங்குகள் நம்மிடம் பற்றாக்குறையாக உள்ளது. இதனால், நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டும் ஆண்டுக்கு 18 சதவிகிதம் வரை பாழாகிறது என்பது சில ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரம். உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பு, இந்தியா உற்பத்தி செய்யும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் வரை நுகர்வோரைச் சென்றடைவதற்கு முன்பே பாழாகிவிடுவதாகச் சொல்கிறது.

இந்தியாவின் உடனடித் தேவை – குளிர்சாதன கிடங்குகள், அரங்குகள் அல்ல.

எல்லாவற்றையும் மாற்ற விரும்புவோர் முன்னுரிமை அடிப்படையில் இதையும் சேர்த்து யோசிக்கலாம்.

இளையபெருமாள் சுகதேவ்

Related Posts

error: Content is protected !!