32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2455 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 136 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 136)
பணமதிப்பிழப்பால் ஏதாவது நன்மையுண்டா என்பது இதுவரை தெரியவில்லையே! Running News

பணமதிப்பிழப்பால் ஏதாவது நன்மையுண்டா என்பது இதுவரை தெரியவில்லையே!

நவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு..இன்றைக்கு இந்தியா உலகின் வல்லரசாக திகழ்வதற்கு மோடி அடித்தளமிட்ட நாள்..கருப்பு பணத்தை கணக்கில் கொண்டு வரமுடியாமல் நாடுமுழுவதும் ஆயிரக்கணக்காண தொழிலதிபர்ள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட நாள் .பேராசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பருப்பு இனி வேகாது என குடிசை தொழிலுக்கு மாறிய நாள். கனவு தெளிஞ்சு நிஜத்துக்கு வருவோம். – பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை மறுநாளே வரவேற்ற கும்பலில் நானும் ஒருவன்.. எதிர்ப்பாளர்களை சாந்தப்படுத்த பதிவுகளை போட்டவன்..நாள் […]

November 8, 2020 admin
தமிழகத்தின் தற்போதைய அவசிய அவசரத் தேவை என்ன தெரியுமா?-எஸ்.பி. லட்சுமணன் Running News

தமிழகத்தின் தற்போதைய அவசிய அவசரத் தேவை என்ன தெரியுமா?-எஸ்.பி. லட்சுமணன்

‘‘நான் ‘தமிழ்நாடு’ என்று மூன்று முறை சொல்வேன்… நீங்கள் வாழ்க என்று ஒவ்வொரு முறை யும் சொல்லுங்கள்…’’- சென்னை ராஜ்யத்தின் முதலமைச்சரான அறிஞர் அண்ணா இப்படிச் சொல்ல… அவரது கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல… அவரது அரசியல் ரீதியான எதிரிகள் என்று சொல்லப்படும் அத்தனை உறுப்பினர்களும் சேர்ந்து அந்த வேண்டுகோளை ஏற்க… ‘தமிழ்நாடு வாழ்க’ என்ற கோஷம் 1967 ஜூலை 18ம் தேதி தமிழக சட்டமன்ற வளாகம் முழுக்க எதிரொலித்தது. சென்னை ராஜ்யம் என்ற பெயரை தமிழ்நாடு என்று […]

November 4, 2020 admin
இதை புரிஞ்சவன் இந்தியன்! Running News

இதை புரிஞ்சவன் இந்தியன்!

அந்த சாஸ்த்ரம் இந்த சாஸ்த்ரம்னு சொல்றது எதையும் அது யாருகாக எழுதப்பட்டதா சொல்றாங்களோ அவங்க பாத்ததும் இல்ல படிச்சதும் இல்ல. கொஞ்சம் பேர் பாத்தாலும் படிச்சாலும் அத ஃபாலோ பண்றது இல்ல. பண்ற ஒருத்தர காட்டிட்டா பூமி தட்டைனு ப்ரூவ் பண்ண தயார். சம்பந்தமே இல்லாத சில பேரு அத எல்லாம் வரி விடாம படிக்கிறாங்க, அதுக்கு அர்த்தம் சொல்றாங்க (கரெக்டாத்தான்), ஏகப்பட்ட கேள்வி கேக்றாங்க, அப்றம் கிண்டல் பண்றாங்க. வேற வேலயே இல்லயா, ப்ரோ?..னுதான் கேக்க தோணுது. […]

November 2, 2020 admin
பெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்! எடிட்டர் ஏரியா

பெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்!

மனுநீதி பற்றிய விவாதத்தில் என் தரப்பைச் சொல்ல விரும்புகிறேன். சென்ற இருபதாண்டு களில் பல இடங்களிலாக நான் சொன்னவைதான் இவை. அனைத்தும் ஒரே தலைப்பின்கீழ் தொகுத்திருக்கிறேன்திருமாவளவன் அவர்கள் சொன்னது என்ன? அதை மூன்று அலகுகளாகப் பிரித்துக்கொள்கிறேன். அ. மனுநீதி பெண்களை இயல்பில் விபச்சாரிகள் என்கிறது ஆ. மனுநீதி இந்துமதத்தின் அடிப்படைநூல் இ. ஆகவே இந்துமதம் பெண்களை இயல்பில் விபச்சாரிகள் என்கிறது. இதை அவர் எந்த தருணத்தில் சொல்கிறார்? மனுநீதி தலித் மக்களை இழிசினராக அடையாளப் படுத்தி ஒடுக்கச் […]

October 28, 2020 admin
தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த அப்டேட்  அலெர்ட்! எடிட்டர் ஏரியா

தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த அப்டேட் அலெர்ட்!

RTI என்று பொதுவாக அறியப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information Act) இல்லையெனில், அரசு நிர்வாகத்தில் பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களைத் தெளிவு படுத்தும் குறைந்தபட்ச வாய்ப்புகூட இருந்திருக்காது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது. அதுசார்ந்து — அப்போதும் இப்போதும் விவாதங்கள் உண்டு. இந்தச் சட்டம் முழுமையாக இல்லை; எல்லா அதிகார அமைப்புகளையும் உள்ளடக்கியதாக இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சமூக ஆர்வலர்கள், அரசியல் […]

October 26, 2020 admin
மறுபடியும் கொளுத்துவோம் -மநுஸ்மிருதியை !? எடிட்டர் ஏரியா

மறுபடியும் கொளுத்துவோம் -மநுஸ்மிருதியை !?

‘‘மநுஸ்மிருதியிலும் இவை போன்ற நூல்களிலும் கூறப்பட்டுள்ள விசயங்கள் நாகரிகமற்றவை யாகவும் இழிவினும் இழிவானவையாகவும் உள்ளன. இதைக் கணக்கிலெடுத்துக் கொண்டு இக்கூட்டம் அவற்றை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தக் கண்டனத்துக்கு அறிகுறியாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தத் தீர்மானிக்கிறது’’ என்று மகாராஷ்டிரா மாநிலம் மஹத் நகரில் கூடிய சத்யாகிரகிகளின் மாநாடு அம்பேத்கர் தலைமையில் மநுஸ்மிருதியை எரித்த நாள் 1927 டிசம்பர் 25. மஹத் நகரின் சௌதார் குளம் சாதி இந்துக்களும் எல்லாச் சாதியினரின் விலங்குகளும் புழங்குவதற்குரியது. தலித்துகளுக்கோ புழங்குரிமை இல்லை. […]

October 23, 2020 admin
அந்தக்கால பிட் படம் போல் .வம்பு தலைப்பிடும் யூ டியூப் வாயர்கள்! எடிட்டர் ஏரியா

அந்தக்கால பிட் படம் போல் .வம்பு தலைப்பிடும் யூ டியூப் வாயர்கள்!

வெளிப்படை பெண்கள் vs ஸ்மார்ட் பெண்கள். இவர்களைப்பற்றிய சைக்காலஜி குறிப்புகள், பர்சானலிடி தியரிக்கள் உருவாக்க வேண்டும்.. நடக்குமெனில் நடக்கும். ஒரு சைக்காலஜிக்கள் அப்ரோச் பிக் பாசில் கவினிக்கும் பொழுது பெண்களை அடித்துவிட்டோம் என்ற பதற்றம் சுரேஷிடம் தெரிந்தது. நல்ல ஆளுமைதான். பிக் பாஸ் விளையாட்டின் பொழுது இரு பக்க கத்தி. தடம் புரளாமல் கடினம். இதில் ஸ்கோர் செய்யப்போகும் கூட இருக்கும் நட்பு போட்டியாளர்கள் வேறு. வனிதா அங்கு இருக்கும் பொழுது தெரிந்தே விளையாடி தன் இடத்தை […]

October 22, 2020 admin
2021 தமிழகத் தேர்தல் களம்:மூன்று முதல்வர் வேட்பாளர்கள் தயார்! எடிட்டர் ஏரியா

2021 தமிழகத் தேர்தல் களம்:மூன்று முதல்வர் வேட்பாளர்கள் தயார்!

தி.மு.க.வைப் பொருத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர். அ.தி.மு.க.வில்தான் இ..பி.எஸ். – ஓ.பி.எஸ். போட்டாபோட்டி நடந்தது போலத் தோன்றியது. இருதரப்பு ஆதரவாளர்களும் நள்ளிரவிலும் கார்களில் வேகமாகச் செல்லும் காட்சிகளை தொலைக்காட்சிகள் திரும்பத் திரும்பக் காட்டின. ஏதோ நடக்கப்போகிறது என்று ஒரு எண்ணம் பரவிய நிலையில், இரதரப்பினரும் கைகோர்த்து ஒருமனதாக இப்போதைய முதல்வர் இ.பி.எஸ்.தான் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டார்கள். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டுமே […]

October 21, 2020 admin
நீட் – முன்னும் பின்னும்! எடிட்டர் ஏரியா

நீட் – முன்னும் பின்னும்!

இந்தியாவின் மக்கள் தொகை அடிப்படையில் நமக்கு 6 லட்சம் டாக்டர்களும் 20 லட்சம் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ அலுவலர்களும் தேவை. இன்றைய நிலவரப்படி, பொதுமக்களுக்கு சேவையாற்றக்கூடிய அரசு மருத்துவர் என்று எடுத்துக்கொண்டால், 1:11,526. அதாவது 11,526 பேருக்கு ஒரு டாக்டரே இருக்கிறார்.எல்லா டாக்டர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், 1:1457 என்பதே நமது கணக்கு. அதாவது 1457 பேருக்கு ஒரு டாக்டர். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை 1:1000. அதாவது குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் தேவை. ஒரு […]

October 19, 2020 admin
அன்றாடப் பட்டியலில் வறுமை இல்லையே! எடிட்டர் ஏரியா

அன்றாடப் பட்டியலில் வறுமை இல்லையே!

கடந்த 25 ஆண்டுகளில் உலக நாடுகளின் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பயனளித்த வகையில் தீவிர வறுமைக்குத் தள்ளப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது. முதல் முறையாக இனி, அதாவது ஒரு தலமுறைக்குப் பிறகு, அந்த நிலை மாறி, தாளமுடியாத வறுமைக்குள்ளாகும் மக்களின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் செல்லும் என்று உலக வங்கியின் மதிப்பீடு எச்சரிக்கிறது. உள்நாட்டுக் கலவரங்கள், இனக்குழுச் சண்டைகள், பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உலகளாவிய தாக்குதலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றால் கூடுதலாக 11.5 […]

October 17, 2020 admin
உடனடி செய்திகள்