’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ – விமர்சனம்!

’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ – விமர்சனம்!

பொதுவாக ஜனங்கள் வந்து ஒரு படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என்று சொல்வது வேறு. ஆனால் இப்போது ஜஸ்ட் ஒரு இ மெயில் & ஆண்ட்ராய்ட் போனை வைத்துக் கொண்டு நடத்தும் எக்கச்சமான யூடியூப் சேனல்கள் வந்து விட்டது. அதிலும் இது போன்ற யூ டியூப்பில் நெகட்டிவ் விமர்சனங்கள் போட்டால்தான் மக்கள் பார்க்கிறார்கள் என்று சொல்லியே மோசமாக விமர்சனம் செய்கிறார்கள். எவரொருவருக்கும் ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் அது அவருடைய தனிப்பட்ட கருத்து. கோலிவுட் சங்கீத சாம்ராட் இளையராஜாவுக்கே முதல் மரியாதை படம் பிடிக்கவில்லை என்று சொன்னதாக கேள்விப்பட்டிருப்போம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். ’அன்னக்கிளி’ ‘ஒருதலை ராகம்’, ‘16 வயதினிலே’, ‘சேது’ போன்ற படங்கள் எல்லாம் முதல் வாரம் சரியாக போகாமல் பிறகு வாய்வழியாக பேசப்பட்டு சில்வர் ஜூபிளி கொண்டாடின. இப்படி 100 உதாரணங்களை சொல்லலாம். ஆனால் தற்போது ஒரு படத்தை அதிகாலையிலேயே பார்த்து விட்டு ஊத்திக்கிச்சு, காதில் ரத்தம் வருகிறது, தலை வலிக்கிறது என்றெல்லாம் மிக மோசமாக பேசுகிறார்கள். இது மாதிரியான விமர்சனங்களா மிகப் பெரிய பட்ஜெட் படங்களின் வசூல் குறைந்ததுக்கு இந்த யூடியூப் விமர்சகர்கள்தான் காரணம். திரையரங்குகளுக்கு உள்ளேயே சென்று இவர்களே ஆட்களை செட் செய்துவைத்து பேசச் சொல்கிறார்கள். நிறை குறைகளை சேர்த்து சொல்லாமல் ஒட்டுமொத்த படத்தையும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து சினிமாத் தொழிலையே நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.இப்படியாப்பட்ட சூழலில் இப்படியான யூ ட்யூப் விமர்சகர்களை கொஸ்டின் செய்து, கலாய்த்திருக்கும் டைரக்டர் எஸ்.பிரேம் ஆனந்த், இறுதியில் யார் எப்படி விமர்சனம் செய்தாலும் நல்ல படம் ஓடும் என்று பதில் அளித்திருக்கிறார்.ஆனால் இப்படி சொல்லும் பிரேம் ஆனந்த் , சந்தானம் & ஆர்யா கூட்டணி இதை இன்னும் நல்ல படமாகக் கொடுத்திருக்கலாம் என்பதே உண்மை.

அதாவது யூ டியூப்பில் உதவியுடன் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர் சந்தானம். ஏகப்பட்ட படங்களை அவர் நெகட்டிவ் விமர்சனம் செய்தே பிரபலமான அவருக்கு எக்கச்சக்க ஆதரவாளர்களும், கூடவே எண்ணிக்கையில் அடங்காத ஹேட்டர்களையும் கொண்டிருப்பவர். இவருக்கு ஒரு சினிமாவின் சிறப்பு திறையிடல் நிகழ்ச்சிக்கான ஃபேமிலி ஷோ இன்வைட் வருகிறது. அந்த அழைப்பின் பேரில் அவரது குடும்பம் அந்த தியேட்டருக்கு செல்கிறார்கள். அந்த தியேட்டர் பேய் ஆட்சி செய்யும் தியேட்டர் என்பதால். உள்ளே வந்தவர்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு தடைகள் ஏற்படுகிறது. குறிப்பாக சந்தானம் திரையில் படம் ஓடும்போது அந்த திரைக்குள்ளேயே சென்று படத்திற்குள் ஒரு கேரக்டராகச் சிக்கிக் கொள்கிறார். அது ஒரு பேய் கதை. அந்த பேய்களிடமிருந்து கிஸ்ஸா தப்பித்து வந்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற ஒரு கண்டிஷனை தியேட்டரில் இருக்கும் பேய் கூறுகிறது. மேலும் , அவரது குடும்பத்தினரும் திரைப்படக் கதாபாத்திரங்களாகச் சிக்கியிருப்பதையும், காதலி காணாமல் போயிருப்பதையும் சந்தானம் கண்டறிகிறார். பக்கா சைக்கோ கிரைம் திரில்லர் மற்றும் திகில் ஜானர் திரைப்படமான அதில் சிக்கிக் கொண்ட தனது குடும்பத்தினர், படத்தின் கதாபாத்திரங்கள் போல் கொலை செய்யப்பட இருப்பதை அறிந்து கொள்ளும் சந்தானம், அந்த பிரச்சனையில் இருந்து எப்படி தப்பித்து தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார், என்பதை வழக்கமான பாணியிலும், கொஞ்சம் குழம்பிய பாணியிலும் சொல்லி இருப்பதே ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படக் கதை.

நக்கல் நாயகன் சந்தானம் உருவம், உடை, பேச்சு ஆகியவற்றில் மாற்றத்தை காட்டி ராப் பாணியில் விமர்சனம் செய்து கவர முயல்கிறார். குறிப்பாக இந்த கால புள்ளிங்கோ இளைஞர்களை ஞாபகப்படுத்தும் நபராக வந்து. ப்ரோ, ப்ரோ என வெரைட்டியாக இவர் பேசும் வசன அமைப்புகள் பல இடங்களில் புதிதாக இருந்தாலும் போகப் போக அது பழகி விடுகிறது. படத்தின் ஆரம்ப முதல் இறுதி வரை ஓடிக்கொண்டே இருக்கிறார், கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். படம் முழுக்க சந்தானத்துடன் வரும் மொட்டை ராஜேந்திரன் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சிரிப்பு வர வைத்திருக்கிறார். படத்தின் இன்னொரு சர்ப்ரைஸ் எலிமெண்டாக நிழல்கள் ரவி, காமெடி காட்சிகளில் பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார். அதேபோல் கௌதம் வாசுதேவ் மேனனும் படம் முழுவதும் ஸ்ட்ரிக்ட் ஆபீசராக வருகிறார். அது பார்ப்பவர்களுக்கு நல்ல காமெடியாக இருக்கிறது. மற்றபடி உடன் நடித்த யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, மாறன், கிங்ஸ்லி உட்பட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து சிரிக்க வைப்பதில் ஜெயித்து விடுகின்றனர். ஹீரோயின் கீத்திகா திவாரி ஆரம்பத்தில் சில காட்சிகளே வந்து பிற்பகுதியில் பேயாக மிரட்டி அதற்கான வேலையை செய்துவிட்டு சென்று இருக்கிறார். சைக்கோ பேயாக வரும் செல்வராகவன் சந்தானம் தமிழில் இணைந்து அட்ராசிட்டி செய்திருக்கிறார். குறிப்பாக சந்தானத்துக்கு கட்டைளை இடும் காட்சிகளில் அவருக்கான ட்ரேட் மார்க் ஆக்ட் எக்ஸ்போஸ் ஆகி ஸ்கோர் செய்கிறார்.

மியூசிக் டைரக்டர் ஆப்ரோ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு என்ன தேவையோ அதை கொடுத்துள்ளார். கேமராமேன் தீபக் குமார் பதி ஒவ்வொரு சீங்களையும், வண்ணமயமாகவும், கமர்ஷியலாகவும் காட்சிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.

எடிட்டர் பரத் விக்ரமன், குழப்பமான திரைக்கதையை மக்களுக்கு எளிமையாக புரியும்படி காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.

சினிமாவுக்குள் ஒரு சினிமாவை வைத்து ஒரு வித்தியாசமான திரை கதையை அமைத்திருக்கிறார் டைரக்டர் எஸ் பிரேம் ஆனந்த். இந்த கதையை கேட்டாலோ, படித்தாலோ புரிவது கடினம் படமாக பார்த்தால்தான் ஓரளவுக்காவது புரியும் என்பதுதான் நிஜம். பொதுவாக இந்த டிடி படங்களில் காமெடி காட்சிகள் பெரிதாக பேசப்படும். ஆனால் இந்த படத்தில் காமெடி காட்சிகளை தாண்டி படத்தின் மேக்கிங் பிரதானமாக தெரிகிறது. அதிலும் சப்டைட்டில் தொடர்பாக வரும் காட்சி, கவுதம் மேனனின் ‘உயிரின் உயிரே’ மீளுருவாக்கம் உள்ளிட்ட காட்சிகளில் எல்லாம் அமர்களம். தியேட்டரே சிரிப்பில் குலுங்குகிறது,

ஆனாலும் ஒட்டுமொத்தமாக திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார்கள். சந்தானம் படத்துக்கே உரிய பஞ்ச் காமெடிகள், வசன காமெடிகள் இல்லாமல் மொட்டை ராஜேந்திர னுக்கு எலி காமெடி, நிழல்கள் ரவிக்கு டாய்லெட் காமெடி, ரெடின் கிங்ஸ்லிக்கு சொம்பு காமெடி, மாறனுக்கு கஸ்தூரியை சைட் அடிக்கும் காமெடி, கௌதம் மேனனுக்கு யாசிகாவை காதலிக்கும் காமெடி என்று ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு காமெடி எபிசோடை உருவாக்கி சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மொழி ரசிகர்களையும் ரசிக்க வைப்பதில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்கள்.

எனினும் . படத்தின் இறுதி காட்சிகள் சற்றே நீளமான காட்சிகளாக இருப்பதும், முந்தைய டிடி படங்களை ஒப்பிட்டு பார்த்து ஏமாற்றம் கொடுத்து இருப்பதும் மைனஸ் ஆகி விட்டது.

மொத்ததில் டி டி நெக்ஸ்ட் லெவல் – ஒரு காமெடி படம் என்பது மட்டும் நிஜம்

மார்க் 3/5

error: Content is protected !!