32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 73 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 73)
தமிழ்நாடு புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்! Exclusive

தமிழ்நாடு புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்!

தமிழ்நாடு டிஜிபியாக பொறுப்பு வகிக்கும் சைலேந்திரபாபு வரும்30ஆம் தேதியோடு பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்பொழுது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பெரிய பட்டியலோடு கடந்த வாரம் டெல்லி சென்றது தமிழக அரசின் குழு. இறையன்பு ஐஏஎஸ், அமுதா ஐஏஎஸ், சைலேந்திரபாபு உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.தமிழக அரசு அளித்த பட்டியலில் இருந்து மூன்று பேரின் பெயரை டிக் செய்து மத்திய அரசு கொடுத்துள்ள […]

June 29, 2023 admin
இறையன்பு-விற்கு பதில் சிவ்தாஸ் மீனா – சீப் செகரட்டரி ஆகிறார்! Exclusive

இறையன்பு-விற்கு பதில் சிவ்தாஸ் மீனா – சீப் செகரட்டரி ஆகிறார்!

இமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா ஜூலை 1ம் தேதி பொறுப்பேற்கிறார். நாளையுடன் இறையன்பு ஐஏஸ் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுவதால் புதிய தலைமை செயலாளராகி உள்ளார் சிவ்ராஸ் மீனா. தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றது. அன்றே தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால் இந்த மாதம் அதாவது […]

June 29, 2023 admin
ஜெமினி மேம்பாலத்துக்கு 50 வயது! கொண்டாடத் தயாராகுங்கள்! Exclusive

ஜெமினி மேம்பாலத்துக்கு 50 வயது! கொண்டாடத் தயாராகுங்கள்!

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் அண்ணா மேம்பாலம் என்று அழைக்கப்படும் ஜெமினி மேம்பாலம் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அரை நூற்றாண்டைக் கடந்து நிற்கும் மேம்பாலத்தை கொண்டாட சென்னை தயாராகிறது. சென்னையின் இதயம் போன்று விளங்கும் நுங்கம்பாக்கத்தின் முக்கிய போக்குவரத்து மையத்தில் கட்டப்பட்டதுதான் அண்ணா மேம்பாலம். 70களில் சென்னையில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியைப் போக்குவதற்காக கட்டப்பட்ட இந்த மேம்பாலம் தமிழகத்தின் முதல் மேம்பாலமாகவும் இந்தியாவின் மூன்றாவது மேம்பாலமாகவும் புகழ்பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க ஜெமினி மேம்பாலம் 50 […]

June 28, 2023 admin
மத்திய அரசின் புதிய மின் கட்டண முறை வீடுகளுக்கு பொருந்தாது – தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் Exclusive

மத்திய அரசின் புதிய மின் கட்டண முறை வீடுகளுக்கு பொருந்தாது – தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

எதிர்வரும் 2024 ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டணத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் மின்தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சூரிய ஒளி கிடைக்கும் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு 10 முதல் 20 சதவீதம் கட்டணத்தை குறைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேரத்திற்கேற்ப மின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய […]

June 25, 2023 admin
நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆனி தேர்திரு விழா கொடியேற்றம்!- வீடியோ Exclusive

நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆனி தேர்திரு விழா கொடியேற்றம்!- வீடியோ

நெல்லை என்றழைக்கப்படும் திருநெல்வேலியில் இருக்கும் பழைமையான அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷம் தோறும் ஆனிப்பெருந் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது நடைபெறும் தேரோட்டத்தில் நெல்லை மாநகரம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நிகழாண்டுக்கான விழாவையொட்டி காலை சுவாமி- அம்மன் பூங்கோயில் சப்பரம் உள்வீதியுலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். […]

June 24, 2023 admin
iD – சென்னையின் எவ்ரிடே சோல்ஃபுல்,- புதிய கிளையை கிண்டியில் உள்ள அப்டவுன் கத்திபாராவில் திறப்பு! Exclusive

iD – சென்னையின் எவ்ரிடே சோல்ஃபுல்,- புதிய கிளையை கிண்டியில் உள்ள அப்டவுன் கத்திபாராவில் திறப்பு!

கடந்த 2009 ஆம் ஆண்டு தனது முதல் விற்பனை நிலையத்தைத் திறந்ததிலிருந்து வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வரும் iD, தனது வாடிக்கையாளர்களுக்கு உதடுகளைத் திறந்து உள்ளத்தைத் தொடும் உண்மையான தென்னிந்திய சைவ உணவு வகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் மெனுவில் உள்ள சில உணவு வகைகளாக இட்லி, தோசை, வடை, பூரி, பொங்கல் மற்றும் இடியாப்பம் உள்ளிட்ட தென்னிந்திய உணவுகளைக் குறிப்பிடலாம். கும்பகோணம் டிகிரி காபி, டீ, மோர், ரோஸ் மில்க், ஃப்ரெஷ் ஜூஸ் மற்றும் நன்னாரி […]

June 23, 2023 admin
சாகித்ய அகாடமி விருது வென்ற தமிழ் எழுத்தாளர்கள்!- முழு விபரம்! Exclusive

சாகித்ய அகாடமி விருது வென்ற தமிழ் எழுத்தாளர்கள்!- முழு விபரம்!

இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசால் சாகித்திய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு மொழிகளில் குழந்தை இலக்கியம் படைப்பவர்களுக்கு சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. சாகித்ய அகாடமி யுவ புராஸ்கர் விருது இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 35 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களை அங்கீகரிக்கிறது. அந்த வகையில் சாகித்ய அகாடமி பால சாகித்ய புரஸ்கார் விருதுக்காக எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ஆதனின் பொம்மை நாவல் […]

June 23, 2023 admin
மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்- மத்திய அரசு அனுமதி Exclusive

மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்- மத்திய அரசு அனுமதி

தமிழக தலைநகராம் சிங்கார சென்னை மெரினாவில் கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்க மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இடம், கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி தேவை. இந்த நிலையில், சென்னை, மெரினா கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதே […]

June 22, 2023 admin
இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு உதவ வரும் தமிழ்நாடு போலீஸ்! Exclusive

இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு உதவ வரும் தமிழ்நாடு போலீஸ்!

நாடெங்கும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, அதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பெண்களின் பாதுகாப்புக்காகவும் அரசும், காவல்துறையும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே, பெண்களின் பாதுகாப்புக்காக காவலன் ஆப் செயல்முறையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், காவல் துறையின் உதவி எண்களான 1091, 112, 004 -23452365 மற்றும் 044-28447701 ஆகியவற்றை […]

June 21, 2023 admin
மேற்கு வங்காளம் உருவான தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? – தமிழ்நாடு கவர்னர் ரவி விளக்கம்! Exclusive

மேற்கு வங்காளம் உருவான தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? – தமிழ்நாடு கவர்னர் ரவி விளக்கம்!

வெஸ்ட் பெங்கால் உருவான தின விழா, சென்னை கவர்னர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்கு வங்க அசொசியேஷனை சேர்ந்த மேற்கு வங்க மக்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்தினார். பல்வேறு கலைப் பிரிவினர் மேற்கு வங்காள கலாச்சார நிகழ்ச்சிகளை அதன் பாரம்பரியம் மாறாமல் மேடையில் நிகழ்த்திக் காட்டினர். பின்னர் மேடையில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதன் சாராம்சம்: “மேற்கு வங்காளமும், தமிழ்நாடும் நம் நாட்டின் உருவத்தை பல […]

June 20, 2023 admin
உடனடி செய்திகள்