நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆனி தேர்திரு விழா கொடியேற்றம்!- வீடியோ

நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆனி தேர்திரு விழா கொடியேற்றம்!- வீடியோ

நெல்லை என்றழைக்கப்படும் திருநெல்வேலியில் இருக்கும் பழைமையான அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷம் தோறும் ஆனிப்பெருந் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது நடைபெறும் தேரோட்டத்தில் நெல்லை மாநகரம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நிகழாண்டுக்கான விழாவையொட்டி காலை சுவாமி- அம்மன் பூங்கோயில் சப்பரம் உள்வீதியுலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.

நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலா நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலையில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

மேலும் இந்த திருவிழா நாட்களில் நாள்தோறும் காலை, மாலையில் சுமாமி – அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் ஆன்மிக சொற்பொழிவுகள், பொம்மலாட்டம், பரதநாட்டியம், வீரமணி குழுவினரின் பக்தி இன்னிசை, ஞானசம்பந்தம் குழுவினரின் தமிழ் இனிமைப் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சிகள் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடைபெறுகிறது.. விழாவின் சிகர நிகழ்வாக ஜூலை 2 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நடைபெற உள்ளது.

தேரோட்டத்தையொட்டி தேர்களை சுத்தம் செய்யும் பணி நேற்று காலை நடைபெற்றது. பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீர் டேங்கர் லாரியுடன் வந்து, விநாயகர், முருகர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய ஐந்து தேர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனர். இதை தொடர்ந்து தேர் சக்கரங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்

Related Posts