மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்- மத்திய அரசு அனுமதி
தமிழக தலைநகராம் சிங்கார சென்னை மெரினாவில் கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்க மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இடம், கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி தேவை. இந்த நிலையில், சென்னை, மெரினா கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் இந்த அனுமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நிபந்தனைகள்:
* தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மண் அரிப்பு, மணல் திரட்சி உள்ளிட்டவை குறித்து கண்காணிக்க வேண்டும்.
* கட்டுமானப் பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது.
* பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும்.
* ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் 30 “ஏப்ரல் வரை ஆமை இனப்பெருக்கம் செய்யும் பகுதி மற்றும் காலத்தில் எந்தவொரு கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாது.
* கட்டுமானத்தின் போது எந்தவொரு தற்காலிக உள்கட்டமைப்பு மற்றும் தோண்டப்பட்ட பொருட்களையும் நீர்நிலைகள் அல்லது அருகிலுள்ள பகுதிகளில் கொட்டக்கூடாது.
* சமர்ப்பிக்கப்பட்ட சாலை இணைப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை திட்டம் முழுமையான மற்றும் இணக்க அறிக்கையை ஆறு மாத அடிப்படையில் பிராந்திய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
* பார்வையாளர்களின் மேலாண்மை கண்டிப்பாக அணுகல் மூலம் கட்டுப்படுத்தப்படும் மற்றும் எந்த நேரத்திலும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை பராமரிக்க ஒழுங்குபடுத்தப்படும்.
* CRZ பகுதியில் நிரந்தர தொழிலாளர் முகாம், இயந்திரங்கள் மற்றும் பொருள் சேமிப்பு ஆகியவை அமைக்கப்படக்கூடாது.
* முன்மொழியப்பட்ட தளத்தில் முன்மொழியப்பட்ட திட்ட நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான தடை இல்லை என்று திட்ட ஆதரவாளர்கள் சான்றளிப்பார்கள்.
* திட்ட ஆதரவாளர், நீதிமன்றம், தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்ட உத்தரவு , வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.
* சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளும், திட்டம் அல்லது செயல்பாட்டைத் தொடங்குவதற்கு முன் பெறப்பட வேண்டும்.
* ஏதேனும் தவறான போலியான தகவல் தெரியவந்தால் அனுமதி வாபஸ் பெறப்படும் என நிபந்தனை
* அவசரகால மீட்புப்பணி தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட வேண்டும்.

இதனிடையே இந்த நினைவுச்சின்னம் 3 பகுதிகளாக கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில், கருணாநிதி நினைவிடத்தில் இருந்து கடற்கரை வரை 220 மீட்டர் நீளம், 6 மீட்டர் உயரத்தில் காங்கிரீட் பாலம் கட்டப்படும் என்று திட்டமிட்டுள்ளது. அடுத்து, காங்கிரீட் பாலம் முடியும் மணல் பரப்பில் இருந்து கடலுக்குள் சில மீட்டர் நீளத்தில் இரும்பு பாலம் அமைக்கப்படும். பேனா நினைவுச்சின்னம் 30 மீட்டர் உயரமும், 3 மீட்டர் விட்டமும் கொண்டதாக 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும். நினைவுச்சின்னத்தை அணுகும் பாலம் 9 மீட்டர் அகலமும், கடல் பரப்பு மற்றும் மணல் பரப்பில் இருந்து 6 மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


