தமிழ்நாடு புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்!
தமிழ்நாடு டிஜிபியாக பொறுப்பு வகிக்கும் சைலேந்திரபாபு வரும்30ஆம் தேதியோடு பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்பொழுது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பெரிய பட்டியலோடு கடந்த வாரம் டெல்லி சென்றது தமிழக அரசின் குழு. இறையன்பு ஐஏஎஸ், அமுதா ஐஏஎஸ், சைலேந்திரபாபு உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.தமிழக அரசு அளித்த பட்டியலில் இருந்து மூன்று பேரின் பெயரை டிக் செய்து மத்திய அரசு கொடுத்துள்ள நிலையில் அதில் ஒருவரான சங்கர் ஜிவாலை தமிழக அரசு அறிவித்து உள்ளது
1990 பேட்ச் அதிகாரியான ஜிவால், உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்தவர். அவர் சேலம் மற்றும் மதுரையில் காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி காவல் ஆணையராகவும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குநராகவும் இதற்கு முன் இருந்துள்ளார். தற்போது சென்னை மாநகர கமிஷனராக இருக்கிறார்.
2008ல் ஐ.ஜி., உளவுத்துறை (உள் பாதுகாப்பு) ஐ.ஜி., ஆக உயர்த்தப்பட்டார். 2011ல், ஆறு ஆண்டுகள் ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்ட சிறப்பு அதிரடிப் படைக்கு தலைமை தாங்கினார். ஜிவாலுக்கு 2007ல் சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கமும், 2019ல் சிறந்த சேவைக்காக ஜனாதிபதியின் போலீஸ் பதக்கமும் வழங்கப்பட்டது.
உளவுத்துறையில் சிறந்த அனுபவம் கொண்ட இவர் இன்ஜினீயரிங் படித்தவர். தமிழ், ஆங்கிலம் , இந்தியில் நல்ல புலமை கொண்டவர். அதேபோல் உத்தரகாண்டின் தாய்மொழியான குமானி மொழியும் தெரிந்தவர். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகமாக ஓரம்கட்டப்ப சங்கர் ஜிவால் திமுக ஆட்சியில் மீண்டும் லைம் லைட்டுக்க்கு வந்தார்.
ஆம்.. அதன்பின்தான் இவர் சென்னை சிட்டி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அந்த வகையில் கடந்த3 ஆண்டு காலமாக செவ்வனே பணியாற்றி வந்தார்.
சிறந்த காவல் சேவைக்கான காவலர் பதக்கத்தை 2007 ஆம் ஆண்டும், குடியரசுத் தலைவர் காவலர் பதக்கத்தை 2019 ஆம் ஆண்டும் பெற்றவர்.
புதிதாக பதவியேற்கும் டிஜிபி சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக அரசின் மீது சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சனங்கள் எழுந்தால் அது தேர்தலில் பிரதிபலிக்கும். எனவே ஆரம்பம் முதலே அதிரடி காட்ட வேண்டும். சங்கர் ஜிவால் அதை செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


