32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 71 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 71)
பணிபுரியும் மகளிருக்கென தமிழக அரசின் சிறப்பு விடுதிகள்! Exclusive

பணிபுரியும் மகளிருக்கென தமிழக அரசின் சிறப்பு விடுதிகள்!

இந்தியாவை பொறுத்தவரை கேரளாவின் கொச்சி மாநகராட்சியில், பெண்கள் மட்டுமே தங்கக்கூடிய, மலிவு விலையிலான பிரத்யேக தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று தமிழ்நாட்டிலும் மகளிருக்கென பிரத்யேக தங்கும் விடுதி அமைக்கப்பட்டு உள்ளது.. ஆம்.. வெளியூர்களில் தங்கிப் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ என்கிற அமைப்பைத் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய ஒன்பது மாவட்டங்களில் […]

July 30, 2023 admin
சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜட்ஜ்  குறித்து சர்ச்சை கருத்து: கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி கைது! Exclusive

சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜட்ஜ் குறித்து சர்ச்சை கருத்து: கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி கைது!

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கொடுக்கப்பட்ட புகாரில் பிரபலமான கிழக்கு பதிப்பகம் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில், அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க […]

July 29, 2023 admin
ஓவியர் மாருதி காலமானார். – நினைவஞ்சலிக் குறிப்புகள்! Exclusive

ஓவியர் மாருதி காலமானார். – நினைவஞ்சலிக் குறிப்புகள்!

தற்போது 86 வயதான பிரபல ஓவியரான மாருதியின் இயற்பெயர் ரங்கநாதன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பியூசி படிப்பில் சேர்ந்த மாருதி, ஓவியங்களின் மீதான ஆர்வம் காரணமாக படிப்பை பாதியில் விட்டவராவார். தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலாவை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர். 1969-ம் ஆண்டு திரைப்பட பேனர்களுக்கு வரையும் ஆசையில் சென்னைக்கு சென்ற மாருதி, மைலாப்பூரில் திரைப்படங்களுக்குப் பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம், பெயர் எழுதும் பணியில் […]

July 27, 2023 admin
நாற்பதும் நமதே! நாடும் நமதே! – மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்- முழு விபரம்! Exclusive

நாற்பதும் நமதே! நாடும் நமதே! – மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்- முழு விபரம்!

“நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்திலும் வரலாம்; முன்கூட்டியும் வரலாம். எப்போது வந்தாலும் சந்திக்கின்ற வலிமையுடன் நாம் இருக்க வேண்டும் என்ற வகையில் உங்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.” என்று தன் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமாகிய மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “முதல்வர் என்ற பொறுப்பினை உடன்பிறப்புகளாகிய நீங்களும், தமிழக பொதுமக்களும் என் தோளில் சுமத்திய நிலையில், அந்தப் பொறுப்புக்குரியவனாகக் கடந்த இரண்டாண்டுகளாக […]

July 23, 2023 admin
வாக்காளர் சரிபார்க்கும் பணி கணக்கெடுக்க வருபவர்களுக்கு ஒத்துழைப்பு தாங்கோ – சென்னை மாநகராட்சி வேண்டுகோள்! Exclusive

வாக்காளர் சரிபார்க்கும் பணி கணக்கெடுக்க வருபவர்களுக்கு ஒத்துழைப்பு தாங்கோ – சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

நாடு முழுவதும் வாக்காளர் சரிபார்ப்பு பணி நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதனை தொடர்ந்து ஜனவரி 5-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி முன்திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதன்பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் […]

July 22, 2023 admin
டாஸ்மாக் எலைட் சரக்கு விலை அதிகரிப்பு! Exclusive

டாஸ்மாக் எலைட் சரக்கு விலை அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் எலைட் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுகிறது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர், ஒயின் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்தியது டாஸ்மாக் நிர்வாகம். இதில், குவார்ட்டருக்கு ரூ.10, பாட்டிலுக்கு ரூ.320 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்களின் புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. […]

July 19, 2023 admin
சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையே   நீராவி என்ஜின் வடிவிலான சுற்றுலா ரயில் நேற்று சோதனை ஓட்டம்!.- வீடியோ Exclusive

சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையே நீராவி என்ஜின் வடிவிலான சுற்றுலா ரயில் நேற்று சோதனை ஓட்டம்!.- வீடியோ

சுற்றுலா ரயில் சேவையை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை ரயில்வே வாரியம் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் புதிய சுற்றுலா ரயில் சேவையை நடைமுறைப்படுத்தும் வகையில் பாரம்பரியமிக்க நீராவி என்ஜின் வடிவில் மின்சார ரயில் வடிவமைக்கப்பட்டது. இந்த ரயில் ஆவடி, பெரம்பூர், பொன்மலை ஆகிய ரயில்வே பணிமனைகளில் உருவாக்கப்பட்டு இயக்கி பார்க்கப்பட்டது. இந்த ரயிலின் முன்பகுதி முழுவதும் பழங்காலத்தில் இயங்கும் நீராவி என்ஜின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, ரயிலில் நீராவி என்ஜின் புகை வெளியேற்றுவது […]

July 17, 2023 admin
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை மின்விளக்கு வெளிச்சத்தில் கண்டுகளிக்கலாம் ! Exclusive

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை மின்விளக்கு வெளிச்சத்தில் கண்டுகளிக்கலாம் !

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னமாக திகழ்கிறது. இந்த பாரம்பரிய நினைவு சின்னங்களை கண்டுகளிக்க நாள்தோறும் ஏராளமான உளநாட்டு, வெளிநாட்டு பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்கின்றனர். தற்போது இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை காண காலை 6 மணி […]

July 16, 2023 admin
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து பிறந்தநாள் விழா & மாநில பொதுக்கூட்டம்! Exclusive

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து பிறந்தநாள் விழா & மாநில பொதுக்கூட்டம்!

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர். ரவிபச்சமுத்து  பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (15.07.2023) நடைபெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர். பாரிவேந்தர்  தலைமையில் கூட்டணி கட்சி முன்னோடிகள் மற்றும் 20000 பேர் IJK கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் தலைமை வகித்தார். மேலும், […]

July 16, 2023 admin
மதுரையில்  கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!- வீடியோ! Exclusive

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!- வீடியோ!

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ரூ 215 கோடி செலவில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தென் தமிழ்நாடு மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைகிறது மதுரையில் ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’. இந்நூலகம் மதுரை – புதுநத்தம் சாலையில் ரூ.120.75 கோடியில் உலகத் தரத்துக்கு இணையாக கட்டப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரையில் சிறப்புமிக்க நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து […]

July 15, 2023 admin
உடனடி செய்திகள்