Exclusive
திமுகவில் சேர்ந்த பத்மபிரியாவுக்கு மகளிர் அணியில் பொறுப்பு?
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய டாக்டர் மகேந்திரன் மற்றும் தற்போது கமலஹாசனின் கட்சியில் இருந்து விலகிய பத்மப்ரியாவும் திமுகவில் இணைந்திருக்கிறார். பத்மபிரியாவுக்கு திமுக மகளிர் அணியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்படலாம் என்று தகவல் பரவி வருகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகினார்கள். மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட சுற்றுசூழல் ஆர்வலர் பத்மப்ரியாவும் கட்சியில் இருந்து விலகினார். […]