32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 117 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 117)
வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களுக்கு விலக்கு! Exclusive

வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களுக்கு விலக்கு!

பிரதமர், முதல்வர் உள்ளிட்ட, முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களில், உளவுத்துறை, சட்டம் ஒழுங்கு போலீசார் முன்னதாகவே சென்று ஆய்வு பணியில் ஈடுபடுவது வழக்கம். இதற்கான ஆயத்த பணிகள் நடக்கும் போதே அவர்கள் செல்லும் வழித்தடத்தில் சாலைகளில் வரிசையாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். இவர்கள் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இந்த பணியில் பெண் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண் காவலர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு […]

June 13, 2021 admin
விடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்!- வீடியோ Exclusive

விடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்!- வீடியோ

திருச்சி சிறப்பு முகாமிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் கருணைக் கொலை செய்ய கோரி தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டம் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் உள்ளனர். தற்போது காவல் துறையின் […]

June 12, 2021 admin
தமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!- முழு விபரம்! Exclusive

தமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!- முழு விபரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்து வந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இம்முறை 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளும், 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் அறிவித்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. கோயம்புத்தூர், ஈரோடு, […]

June 11, 2021 admin
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது! Exclusive

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது!

இரண்டு மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில்சட்டசபை தேர்தல் முடிவை தொடர்ந்து தி.மு.க. அரசு பதவி ஏற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். பின்னர் சட்டசபையின் சபாநாயகராக தி.மு.க.வை சேர்ந்த மு.அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், 16வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர், கவர்னர் உரையுடன் 21ந்தேதியன்று தொடங்குவதாக சபாநாயகர் மு.அப்பாவு நேற்று அறிவித்தார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் மு.அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி :- தமிழக சட்டசபையில் 21ந்தேதி காலை 10 மணிக்கு கவர்னர் உரை […]

June 10, 2021 admin
இதுக்கு பேராய்யா ஊரடங்கு? – ஐகோர்ட் அப்செட்! Exclusive

இதுக்கு பேராய்யா ஊரடங்கு? – ஐகோர்ட் அப்செட்!

ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. இயல்பு நிலை திரும்பியது போல் காட்சி அளிக்கிறது. இது கொண்டாட்டத்திற்கான நேரமில்லை. ஊரடங்கு காலத்தில் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே 10ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதிவரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தற்போது தளர்வுடன் ஊரடங்கு ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காய்கறி கடைகள், […]

June 9, 2021 admin
தமிழக வளர்ச்சி கொள்கைக் குழு; து.தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமனம்! Exclusive

தமிழக வளர்ச்சி கொள்கைக் குழு; து.தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமனம்!

தமிழ்நாட்டின் வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழகத்தில், மாநில திட்டக் குழு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 1971 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழு, முதல்வரின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக் குழு […]

June 6, 2021 admin
தமிழகத்தில் (தளர்வுகளுடன் கூடிய) ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு!- முழு விபரம் Exclusive

தமிழகத்தில் (தளர்வுகளுடன் கூடிய) ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு!- முழு விபரம்

தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜூன் 7 ஆம் தெதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது இன்னும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது குறித்த முழு விபரத்தை இப்போது பார்க்கலாம். தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலையை (Corona Second wave) கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 10 ஆம் தேதி முதல் தளர்வுகள் […]

June 5, 2021 admin
வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருக்கும் சிங்கங்களுக்கு கொரோனா! Exclusive

வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருக்கும் சிங்கங்களுக்கு கொரோனா!

தமிழகத்தில் உள்ள பிரபலமான  பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா தான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா. 1855-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘மெட்ராஸ் பூங்கா’ என்ற பெயரில் விலங்கியல் பூங்கா ஒன்றை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்தார்கள். பின்னர் விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது .பின்னர் வண்டலூர் உயிரியல் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் […]

June 4, 2021 admin
கலைஞர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்! Exclusive

கலைஞர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக லைவருமான கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இதோ: “உலகிலே எந்த முதல்வரும் பெற்றிராத பெருமையைக் கொண்டவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்து, நல்லாட்சி நடத்தியவர். சீர்மிகு திட்டங்களை பார்போற்றும் வகையில் தீட்டிச் செயல்படுத்தியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் […]

June 3, 2021 admin
பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் தடை கிடையாது – செந்தில் பாலாஜி Exclusive

பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் தடை கிடையாது – செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு முழு ஊரடங்கு காலகட்டத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக இனி மின்சாரம் தடைசெய்யப்படமாட்டாது – வீட்டிலிருந்து பணி புரிவது, ஆன்-லைன் வகுப்புகள் ஆகியவை தடைபடுவதைத் தடுக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் 07.06.2021 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது, பொது மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருப்பதாலும், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாலும், மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள் / […]

June 2, 2021 admin
உடனடி செய்திகள்