தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவரானார் திண்டுக்கல் லியோனி!

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவரானார் திண்டுக்கல் லியோனி!

மிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி -யை நியமித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஐ.லியோனி மேடைப் பேச்சாளராகவும், நகைச்சுவை பட்டிமன்ற நடுவராக அறியப்பட்டுவராவார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!