32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 113 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 113)
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி பத்து நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு ! -முழு விபரம் Slider

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி பத்து நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு ! -முழு விபரம்

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் புதிய தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதுடன் மூன்றாவது அலை ஏற்படாமல் இருக்கும் வகையில் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழக முதல்வர் அறிவுரை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்: ‘தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 31-7-2021 அன்று காலை 6 […]

July 30, 2021 admin
அதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! Exclusive

அதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கடந்த அதிமுக ஆட்சியின் போது 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.7.2021) ஆணையிட்டுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் […]

July 29, 2021 admin
தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்! Exclusive

தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கடந்த வாரம் 137 மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, பெருநிறுவனங்கள் பங்களிக்கும் சமூக பொறுப்பு நிதியை கொண்டு, தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கொரோனா இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் கோவக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும். […]

July 28, 2021 admin
சங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது!- முதல்வர் அறிவிப்பு! Exclusive

சங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது!- முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 27) உத்தரவிட்டிருந்தார். இது குறித்து, நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான், ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். மேற்படி விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு, முதல்வர் தலைமையில், தொழில் துறை, தமிழ் […]

July 28, 2021 admin
அதிமுகவை மீட்க சசிகலாவுக்கு துணை நிற்கும் அமமுக – டிடிவி தினகரன் பேட்டி – வீடியோ! Exclusive

அதிமுகவை மீட்க சசிகலாவுக்கு துணை நிற்கும் அமமுக – டிடிவி தினகரன் பேட்டி – வீடியோ!

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் அ.தி.மு.க வை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு தேர்தல்,வெற்றி தோல்வியை கடந்து எங்கள் இலக்கை நோக்கி தான் பயணம் செய்கிறோம்.. அதிமுக தொடங்கியது முதல் ஜெயலலிதா மறைவு வரை ஒற்றைத் தலைமையில்தான் இருந்தது. தற்போது மாறியுள்ளது. மீண்டும் எல்லாம் சரியாகும்’ என்று உறுதிபட கூறினார். திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரிடம் நலம் விசாரிப்பதற்காக டிடிவி தினகரன் இன்று […]

July 27, 2021 admin
வருமானத்துக்கு அதிகமாக 55% சொத்து!-  முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மீது எஃப் ஐ ஆர்! Exclusive

வருமானத்துக்கு அதிகமாக 55% சொத்து!- முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மீது எஃப் ஐ ஆர்!

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன்படி சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், கரூர் உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று  எஃப் ஐ ஆர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது . எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் […]

July 25, 2021 admin
தமிழகத்தில் இன்று முதல் நூலகங்கள் திறப்பு! Exclusive

தமிழகத்தில் இன்று முதல் நூலகங்கள் திறப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த மே 10ஆம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தமிழ்நாட்டில் நோய்தொற்று படிப்படியாக குறைந்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. அதன்படி அரசு அலுவலகங்களில் 100 சதவிகித பணியாளர்களுடன் […]

July 24, 2021 admin
சென்னை -புதுச்சேரி, கடலுார், நாகை மற்றும் காரைக்கால் இடையே, கப்பல் போக்குவரத்து சேவை! Exclusive

சென்னை -புதுச்சேரி, கடலுார், நாகை மற்றும் காரைக்கால் இடையே, கப்பல் போக்குவரத்து சேவை!

மேலைநாட்டவர் வெறும் வாணிபத்துக்காகவே கீழைநாடுகளை நாடிக்கொண்டிருந்த நாட்களில், கடல் கடந்து கொடி கட்டி ஆண்ட இனம் நம் தமிழினம். காம்போஜம்(கம்போடியா), ஸ்ரீவிஜயம்(சுமாத்திரா), சாவகம்(ஜாவா), சீயம்-மாபப்பாளம்(தாய்லாந்து), கடாரம்(மலேசியா), நக்காவரம்(நிக்கோபார் தீவுகள்), முந்நீர்ப்பழந்தீவு(மாலைதீவு) போன்ற தூரதேச நாடுகளிலெல்லாம், தமிழ் மூவேந்தரில் ஒருவரான சோழரின் புலிக்கொடி பறந்து அந்நாட்டவரெல்லாம் தமிழருக்…கு திறை செலுத்தி பணிந்துநின்ற ஒரு பொற்காலம் சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது. அவ்வாறு சிறந்திருந்த சோழப்பேரரசு தொடர்ந்து நீடிக்காததன் காரணம், போருக்கும் ஆக்கிரமிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளித்ததும் ஏனைய தமிழரசரான சேரர்-பாண்டியருடன் ஒற்றுமையின்றி இணங்கி […]

July 21, 2021 admin
தொழில்துறையின் பொற்காலமாக விளங்கப் போகுது!- முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை பேச்சு – வீடியோ Exclusive

தொழில்துறையின் பொற்காலமாக விளங்கப் போகுது!- முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை பேச்சு – வீடியோ

“தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தினை உயர்த்துவதே எங்களது அரசின் லட்சியம். 2030-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக (GDP Economy) தமிழகத்தினை உருவாக்குவதே, எங்கள் அரசின் குறிக்கோள். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க, உங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் நான் கோருகிறேன்” என, முதல்வர் மு.க.ஸ்டாலின்  கேட்டுக் கொண்டார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, அனைத்துத் துறைகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை வடிவமைத்து […]

July 20, 2021 admin
+2 ரிசல்ட் வெளியானது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  வெளியிட்டார்! Exclusive

+2 ரிசல்ட் வெளியானது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார்!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரங்களை இன்று (ஜூலை 19ஆம் தேதி ) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். +2 மாணவ மாணவியரின் மதிப்பெண் பட்டியல் ஜூலை 19ம் தேதி வெளியிடப்படவுள்ளது என தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் 16-7-2021 அன்று அறிவித்திருந்தது. 2020 – 21ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12ம் வகுப்பு) பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் மதிப்பெண் […]

July 19, 2021 admin
உடனடி செய்திகள்