32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 14 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 14)
ஹன்சிகாவுடன்  சிம்பு நடிக்கும் படமான ’மகா’ அப்டேட் ரிப்போர்ட்! Running News2

ஹன்சிகாவுடன் சிம்பு நடிக்கும் படமான ’மகா’ அப்டேட் ரிப்போர்ட்!

ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் நாயகியை மையமாக வைத்து உருவாகும்  “மகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்,  சிம்புவின் அதிரடி தோற்றத்தில் வெளியானது, அவரது ரசிகர்களை  உற்சாகத்தின் உச்சாணி கொம்பில் அமர்த்தி வைத்திருக்கிறது. ஸ்டைலீஷான பைலட் லுக்கில் இருக்கும் சிம்பு வின் தோற்றம்,  வெளியான நொடியிலிருந்தே  பரபரப்பாய் பகிரபட்டு வருகிறது.  “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு படக்குழுவையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் இயக்குநர் ஜமீல் படத்தில் சிம்புவின் கதாப்பாத்திரம் குறித்து ஆச்சர்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். […]

January 4, 2020 admin
தொட்டு விடும் தூரம் – விமர்சனம்! Running News2

தொட்டு விடும் தூரம் – விமர்சனம்!

இதுநாள்வரை வெளியான சினிமாக்களில் அதிகமான படங்கள் காதலை மையமாக கொண்டு வந்தவைகள்தான். காரணம்.. இந்த ஹைடெக் உலகத்தில் கூட நாம் எதிர்பாராமலே நம்மில் தோன்றும் அபூர்வமான ஒரு விஷயம் தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பது தான் காதல். ஆணுக்கு ஒரு பெண். பெண்ணுக்கு ஒரு ஆண். பெற்றோரிடம் நாம் செலுத்தும் காதல் என்பது குடிநீரும், கண்ணீரும் போல… இரண்டும் ஒன்று போல் […]

January 3, 2020 admin
ஜீவன் நடிக்கும் ‘பாம்பாட்டம்’ ஐந்து மொழிகளில் தயாராகிறது! Running News2

ஜீவன் நடிக்கும் ‘பாம்பாட்டம்’ ஐந்து மொழிகளில் தயாராகிறது!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஐந்து மொழிகளில்  ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம்  படத்தை V.C. வடிவுடையான் இயக்குகிறார். 6.2,  ஓரம்போ, வாத்தியார் போன்றb  படங்களை தயாரித்த V.பழனிவேல் தனது வைத்திய நாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக   தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலை யாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ” பாம்பாட்டம் “. காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற வெற்றி படங்களில் நடித்த ஜீவன் இந்த படத்தில் […]

January 2, 2020 admin
சினிமா ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்க வரும் ‘தொட்டு விடும் தூரம்’! Running News2

சினிமா ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்க வரும் ‘தொட்டு விடும் தூரம்’!

‘தொட்டு விடும் தூரம்’ என்றொரு டைட்டிலில் ஒரு படம் தயாராகி வரும் வெள்ளியன்று ரிலீஸாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக் ராஜ் ஹீரோவாக நடிக்க, மோனிகா சின்னகொட்லா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சீதா, சிங்கம் புலி, பாலசரவணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார் கள். நோவா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கே.ராம்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.ராம்பாதி பாடல்கள் எழுத, வீரசெந்தில் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, இளங்கோ சண்டைக்காட்சிகளை […]

January 1, 2020 admin
கடந்தாண்டில் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் Sam C S ! Running News2

கடந்தாண்டில் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் Sam C S !

கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் அதிகப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் சாம். சி.எஸ். பின்னணி இசையில் முன்னணியில் இருக்கும் ஓர் இசை அமைப்பாளர் அவர் என்ற பெருமையை அடைந்துள்ளார். ஒரு படத்தின் கதை எவ்வளவு தரமானதாக இருந்தாலும் அந்தக் கதையும் கதைக்கேற்ற காட்சி மொழியும் ரசிகனுக்கு உணர்வோடு கலப்பதற்கு பின்னணி இசை மிக முக்கியம். சென்ற ஆண்டில் தான் இசை அமைத்த எல்லாப்படங்களுக்கும் அதைத் தவறாமல் தந்திருந்தார் சாம்.சி எஸ். கைதி படத்தில் இருட்டுப் பாதையில் படரும் பதட்டத்தை […]

January 1, 2020 admin
மருத்துவக் கழிவுகளின் ஆபத்தைச் சொல்ல வரும் ‘கல்தா’! Running News2

மருத்துவக் கழிவுகளின் ஆபத்தைச் சொல்ல வரும் ‘கல்தா’!

நம் நாட்டில் வியாதிகளுக்கு பஞ்சமே இல்லை. இந்நிலையில் அடை மாநிலங்களில் இருந்து மட்டுமில்லாமல் நம் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களில் இருந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவு களால் ஏகப்பட்ட தொற்று வியாதிகள் உருவாகின்றன் மருத்துவக் கழிவுகள் என்பது மருத்துவ மனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பிறகு, வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் ஆகும். அதாவது பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகள், கத்தி, ரத்தக்குழாய்கள், செயற்கை சுவாசக் குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை. சில […]

January 1, 2020 admin
“வால்டர்” படத்தில் கௌதம் மேனனுக்கு பதிலாக நட்டி ! Running News2

“வால்டர்” படத்தில் கௌதம் மேனனுக்கு பதிலாக நட்டி !

சிறந்த ஒளிப்பதிவாளர் பட்டியலில் இருக்கும் நட்டி எனும் நட்ராஜ் சுப்பிரமணியம் தனது நடிப்பாலும் புகழை குவித்து வருகிறார். “சதுரங்க வேட்டை” தொடங்கி வித்தியாசமான வேடங் களில் தனது சிறந்த நடிப்பை தந்து வரும் அவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் பெரிதும் ஈர்க்கும் நடிப்பை வழங்கியிருந்தார். தற்போது சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் “வால்டர்” படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்க வேண்டிய கதாப் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்து அறிமுக இயக்குநர் U.அன்பு […]

December 30, 2019 admin
“பட்டாஸ்” படத்தின் மூன்றாவது பாடலும் பட்டையக் கிளப்புதுல்லே! Running News2

“பட்டாஸ்” படத்தின் மூன்றாவது பாடலும் பட்டையக் கிளப்புதுல்லே!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “பட்டாஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல்கள் மூலம் கொண்டாட்ட அதிர்வலைகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சிங்கிளான “ஜில் ப்ரோ” மற்றும் இரண்டாவதாக வெளியான “மொரட்டு தமிழன்டா” இரண்டும் பெரு வெற்றி பெற்ற நிலையில் இப்போது மூன்றாவதாக அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்  ஒரே இரவில்  ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களை கவர்ந்திழுத்து பெரு வெற்றியடைந்துள்ளது.  ஆக “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவ ரைட்டாக […]

December 30, 2019 admin
கலைத்துறைக்கும் பா.ஜ.க. கட்சிக்கும் இப்போது நெருக்கம் அதிகமாகி வருகிறது! – தமிழரசன் விழா துளிகள்1 Running News2

கலைத்துறைக்கும் பா.ஜ.க. கட்சிக்கும் இப்போது நெருக்கம் அதிகமாகி வருகிறது! – தமிழரசன் விழா துளிகள்1

SNS MOVIES பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது தான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். நேற்று இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளி யிடவும் பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி, […]

December 30, 2019 admin
உடனடி செய்திகள்