Running News2
Running News2
Running News2
‘அச்சமில்லை அச்சமில்லை’ இரண்டாம் பாகம் எடுப்பேன்! – அமீர் நம்பிக்கை!
டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குனர் அமீர் தயாரிக்க, முத்து கோபால் இயக்கத்தில், விவுரி குமார் இசையமைப்பில், அமீர், முத்து கோபால், ஹரீஷ், சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. பொதுவாக, திரைப்பட விழாக்களில் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள்தான் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சமூக ஆர்வலர்களை அழைத்து விழாவை நடத்தினார்கள். டிராஃபிக் ராமசாமி, சுப.உதயகுமார், கார்ட்டூனிஸ்ட் பாலா, வளர்மதி உள்ளிட்டவர்கள் கலந்து […]
இந்த படத்துக்கு ‘ஏமாலி’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது!.
லதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வி.இசட்.துரை இயக்கத்தில் சாம்.டி.ராஜ் இசையமைப்பில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஏமாலி’.படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி இருவரும் விதவிதமான தோற்றங்களில் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம்புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார். படம் பற்றி விவரித்த இயக்குனர் வி.இசட்.துரை ”“இந்த படத்துக்கு ‘ஏமாலி’ என்று […]
நிமிர் – விமர்சனம் = பல்லிளித்துவிட்ட படம்!
நிமிர் இயக்கம் – பிரியதர்ஷன். உதயநிதி, சமுத்திரகனி, நமிதா புரமோத் போன்றோர் நடிப்பு. மலையாளத்தில் எளிமையான கதையாய் எடுக்கப்பட்டு வாழ்வியல் பேசி வெற்றிபெற்ற மகேஷிண்ட பிரதிகாரம் திரைப்படம்தான், தமிழில் தோரணங்களுடன் மேக்கப் போட்டு நிமிராக வந்திருக்கிறது. இந்தக் கதையை தற்போது தமிழில் பிரமாண்டமாக எடுப்பதா இல்லை எளிமையாய் எடுப்பதா என்ற குழப்பத்தில் இருந்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. சில காட்சிகள் பிரமாண்டம், சில காட்சிகள் படு எளிமை. இந்தக்கதை தமிழ் சினிமாவில் இரண்டு காட்சிகளில் அடித்து துவைத்துப் போடப்பட்ட […]
‘ஏமாலி’ -க்கு ஏமாறுபவன் என்று அர்த்தம் இல்லை! – டைரக்டர் தகவல்
வி.இசட்.துரை இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, அதுல்யா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏமாலி’. எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுத, சாம் டி.ராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதுல்யா ரவி கவர்ச்சியாக நடித்திருந்தது மட்டுமல்லாமல் புகைபிடிக்கும்படியான காட்சியும் இடம்பெற்றது. இதனால் ஏற்பட்ட சர்ச்சையினால் படம்வெளிவரும் முன்னரே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் ஏமாலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.இதில் படத்தின்இயக்குநர் […]
அச்சமில்லை… அச்சமில்லை- டிரைலர்!
திரையரங்கில் பேய் என்னும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள ’நாகேஷ் திரையரங்கம்’
ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின்திரு.இராஜேந்திர எம்.இராஜன்அவர்களின்தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கிகின்னஸ் சாதனைபடைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது. “நெடுஞ்சாலை”, “மாயா” படப்புகழ் ஆரிகதாநாயகனாகநடிக்கும் இந்த படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படி தான்” படங்களில் நடித்த ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கிறார். காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர்மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறிய இடைவேளைக்குப் பின் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில்எம்.ஜி.ஆர்.லதாவும், நடிகைசித்தாராவும்நடித்திருக்கிறார்கள். […]
பத்மாவதி – திரை விமர்சனம் – பிரமாண்டம்!
இந்த திரைப்படத்துள் நுழையும் முன்னர் ரியல் பத்மாவதி எனும் ராணி – யின் வரலாறு என்ன என்பது தெரிந்து கொள்ளலாமே! .. 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினி, அழகும் வீரமும் நிறைந்தவர். ராஜபுத்திர பேரரசரான ரத்தன்சிங்கை மணந்து சித்தூருக்கு ராணியாகிறார். ராணி பத்மினி அழகை கேள்விப்பட்டு டெல்லி பேரரசன் அலாவுதீன் கில்ஜி சித்தூருக்கு படையெடுத்து ரத்தன் சிங்கை கைது செய்து அடிமையாக அழைத்துச் செல்கிறான். ராணி பத்மினி டெல்லி மீது படையெடுத்து கணவனை மீட்டு வருகிறார். ஒரு பெண் […]
ஹிச்கி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப்படுத்தும் ’ராணி முகர்ஜி’!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராணி முகர்ஜி. இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் நடிப்பில் தற்போது ஹிச்கி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இவர் தமிழில் ஹேராம் படத்தில் கமல் மனைவியாக நடித்தவர் என்பது அட்சினல் தகவல்..இந்நிலையில் ராணி முகர்ஜி இந்த ஹிச்கி படத்தில் ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோய்க்குறியைக் கொண்டிருக்கும் நைனா மாதுர் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். 2008ம் ஆண்டு வெளியான ‘ஹிக்கி பிராட் கோஹன்னின்’ புகழ்பெற்ற ‘ஹால்மார்க்’ […]
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – பிரஸ் மீட்!
7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. […]