பத்மாவதி – திரை விமர்சனம் – பிரமாண்டம்!

பத்மாவதி – திரை விமர்சனம் – பிரமாண்டம்!

இந்த திரைப்படத்துள் நுழையும் முன்னர் ரியல் பத்மாவதி எனும் ராணி – யின் வரலாறு என்ன என்பது தெரிந்து கொள்ளலாமே! .. 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினி, அழகும் வீரமும் நிறைந்தவர். ராஜபுத்திர பேரரசரான ரத்தன்சிங்கை மணந்து சித்தூருக்கு ராணியாகிறார். ராணி பத்மினி அழகை கேள்விப்பட்டு டெல்லி பேரரசன் அலாவுதீன் கில்ஜி சித்தூருக்கு படையெடுத்து ரத்தன் சிங்கை கைது செய்து அடிமையாக அழைத்துச் செல்கிறான். ராணி பத்மினி டெல்லி மீது படையெடுத்து கணவனை மீட்டு வருகிறார். ஒரு பெண் தன்னை தோற்கடித்ததால் ஆத்திரத்தில் பெரும்படையுடன் சித்தூர் மீது படையெடுக்கிறான் அலாவுதீன் கில்ஜி. அந்த படையுடன் தன்னால் போரிட முடியாது என்று உணர்ந்து ராணி பத்மினி ஆயிரக்கணக்கான பெண்களுடன் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக வரலாறு இருக்கிறது. இதனால் ராணி பத்மினியை ராஜஸ்தானில் உள்ள ஒரு பிரிவினர் தெய்வமாக வழிபடுகிறார்கள். ராணி பத்மினி வரலாறு ஒரு கற்பனை கதை என்றும் சிலர் கூறுகிறார்கள்.ஆனாலும் வீர மங்கை கேரக்டரில் தீபிகா நடத்திருப்பதாலேயே இந்த சினிமாவில் கவர்ச்சி & காதல் இத்யாதி இருக்கும் என்று எதிர்ப்பு கிளம்பி கொண்டே இருந்து இன்று வரை தொடர்கிறது.

இந்நிலையில் தமிழகம் உள்பட இந்தியாவெங்கும் பெரும் எதிர்ப்பிற்குப் பின் திரைக்கு வந்திருக்கிறது. ஆம் சில காட்சிகளும், டைட்டிலும் ஓர் எழுத்தும் கூட கட் செய்யப்பட்டு பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போது திரையில் வந்தே விட்டது. சஞ்சய் லீலா பிரமாண்ட அழகியலுக்கு சொந்தக்காரர். தேவதாஸ் கதையையே அவர் பிரமாண்டமாகத்தான் எடுத்தார். அவர் பாணி பழைய நாடக அரங்கில் அரங்கேறும் நாடகங்களுக்கு ஒப்பானது. பிரமாண்ட அரங்கில் திறமையான நடிகர்களை கொண்டு உணர்வுப்பூர்வமாக எழுதப்பெற்றதை மிகுதியான அலங்காரம் மற்றும் ஒப்பனையுடன் மிகு நடிப்பால் ரசிகரகளை கட்டிப்போடுவது அவருக்கே கை வந்த கலை. இத்தனைக்கும்

இன்னும் நாடகங்கள் வெளி நாடுகளில் அரங்கேறி வந்தாலும் இங்கே இந்தியாவில் வழக்கொழிந்து விட்டதை கண்டு கண்ணீருகி அதை திரையில் அரங்கேற்றுகிறார் பன்சாலி. அவர் ஒவ்வொரு ஃபிரேமிலும் ஓவியம் வரைகிறார். கலையலங்காரம், கண்ணிக்கவரும் உடைகள், ஒளியின் நிறங்கள் இத்துடன் தேர்ந்த கலைஞர்களை அழகாய் எழுதப் பெற்ற காடைகளில் மிகு நடிப்பால நம்மைக் கட்டிப்போடுகிறார். அவருடைய எல்லாப்ப்டங்களிலும் இதைக்காண முடியும்.

மேலும் வரலாற்றுப் பின்னணி கதை என்பது அவருக்கு ஜாங்கிரி சாப்பிடுவது போல். பத்மாவதியும் அவ்வாறே வந்திருக்கிறது. ஆரம்பத்தில் சொல்லியுள்ள அனைவருக்கும் தெரிந்த வரலாறுதான். பத்மாவதியைக் காண ஆவல் கொண்ட கில்ஜி ராஜபுத்திரர் மீது படையெடுத்த கதை. வெகு பிரமாண்டமாய் திரையில் விரிந்திருக்கிறது. ரத்தன்சிங், பத்மாவதி, கில்ஜி என மூவரைச் சுற்றி தான் மொத்த்தப்படமும். மூவரும் தங்கள் மிகச்சிறந்த நடிப்பை தந்திருக்கிறார்கள். அதிக பட்ச திரை ஆளுமைக்கான வாய்ய்பு கில்ஜியாக வரும் ரண்வீர் சிங்கிற்கு வாய்த்திருக்கிறது. கொஞ்சம் மிகை நடிப்பென்றாலும் மனிதர் மிரட்டியிருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் கில்ஜி எனும் மிருகத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

ஷாகித்கபூர் பாந்தமான அரசராக மனதை அள்ளுகிறார். தீபிகா தான் தான் இந்த கதையின் ஹீரோ என்பதை உண்ர்ந்து செய்திருக்கிறார். அழகும் நளினமும் கூறியிருக்கிறது அவரிடம்.

அரங்குகள் அனைத்தும் அட்டகாசம் அதை பிரமாண்ட ஒளிப்பதிவு மூலம் கண்ணுக்கு விருந்தாக்கியிருக்கிறார்கள். இசை படத்தை மற்றொருபடி உயர்த்தியிருக்கிறது. சினிமா ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவமாய் வந்திருக்கிறது. பத்மாவதி.

மார்க் 5 / 3.75

கதிரவன்

error: Content is protected !!